தந்தூரி காலிஃப்ளவர் பக்கோடா

தேதி: March 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பெரிய காலிஃப்ளவர் - ஒன்று
முட்டை - 4
கடலை மாவு - 100 கிராம்
சிக்கன் 65 பவுடர் - 100 கிராம்
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு


 

காலிப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கிக் கொண்டு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காலிஃப்ளவர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். 5 நிமிடம் வெந்த பிறகு வடிகட்டி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடிக்கவும். அதில் கடலை மாவு, சிக்கன் 65 பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடலைமாவு முட்டை கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரை போட்டு கிளறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிஃப்ளவர் கலவையை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான தந்தூரி காலிப்ளவர் பக்கோடா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கிட்சன் குயின். ஃபர்ஸ்ட் டைம் கிட்சன் குயின் ஆகறீங்க‌ போல‌. நானும் கிட்சன் குயின்ல‌ தான் அறிமுகம். உங்க‌ எல்லா குறிப்புமே அருமையா செய்து இருக்கீங்க‌. சூப்பரா இருக்கு. கலக்கல். வாழ்த்துக்கள் கிட்சன் குயின். அழகான‌ என்ட்ரி.

எல்லாம் சில‌ காலம்.....

என்னுடைய‌ குறிப்புகளை அழகாக‌ தொகுத்து வெளியிட்ட‌ அட்மின் டீமுக்கு நன்றி...!!

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

ரொம்ப‌ நன்றி பா...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..