மசாலா சப்பாத்தி

தேதி: March 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட செல்வி. சத்திய செல்வி அவர்களின் மசாலா சப்பாத்தி என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய சத்திய செல்வி அவர்களுக்கு நன்றிகள்.

 

கோதுமை மாவு - அரை கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேகரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கறி மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிது
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும். பட்டை மற்றும் கிராம்பினை பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம், பட்டை கிராம்பு பொடி போட்டு பொரிய விடவும். பொரிந்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கி விட்டு வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து விட்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், கறி மசாலாப் பொடி, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் எண்ணெய் ஊற்றி வதக்கவும். சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தழையை போட்டு இறக்கி ஆற வைக்கவும்.
மசாலாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். மாவையும் சிறிய உருண்டையாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக கையால் தட்டி அதன் நடுவில் மசாலாவை வைத்து மூடி மீண்டும் உருட்டவும்.
சப்பாத்தி கல்லில் உருண்டையை வைத்து, வட்டமாக தேய்த்து எடுக்கவும்.
தோசைக்கல்லில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு, திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
சுவையான மசாலா சப்பாத்தி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Muthal muthal kq aana vidhyaku vazthukkal. Super a iruku Ella kurippum. . photovum CLR ful

Be simple be sample

என்னுடைய‌ குறிப்புகளை அழகாக‌ தொகுத்து வெளியிட்ட‌ அட்மின் டீமுக்கு நன்றி...!! ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு...:)

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

ரொம்ப‌ நன்றி பா... உங்க‌ எல்லாரோட‌ குறிப்ப பாத்து தான் இதுல‌ கலந்துக்கவே ஆசை வந்துது... மறுபடியும் தேங்ஸ் பா...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..