ஜுரம் போக கை மருந்து எது போட்டால் சரியாகும்?நன்றி.

ஹாய் மனோகிரி மேடம் எப்படி இருக்கிறீர்கள்? நான் இப்போது 4 மாத கர்ப்பினியாக இருக்கிறேன். ஆனால் எனக்கு இப்போது கடந்த 2 நாளாக ஜுரமாக இருக்கிறது. ஜுரம் போக கை மருந்து எது போட்டால் சரியாகும்?நன்றி.

டியர் ரம்பா, இப்பொழுது எப்படி இருக்கின்றீர்கள்?இரண்டு நாளாக ஜுரம் என்று எழுதியிருந்தீர்கள்.என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நான்கு மாத கர்பிணியான நீங்கள் உடனே மருத்துவரை சந்தித்து ஜுரத்திர்க்கான காரணத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.காரணம் கர்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்றவை வருவது சகஜம். ஆனால் ஜூரம், இரும்பல்,வயிற்றுவலி, சிறுநீர்கழிப்பதில் பிரச்சனைப் போன்ற உபாதைகளுக்கு வீட்டு வைத்தியங்களை விட மருத்துவரின் ஆலோசனைப்படி உடனடி நிவாரணம் பெறுவது தான் நல்லது. ஜூரம் வந்தால் கட்டாயம் இரண்டு நாள் அல்லது மூன்று நாளில் போய்விடும், ஆனால் ஏன் வந்தது என்று கட்டாயம் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.ஆகவே தாங்கள் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

நன்றி மனோகிரி மேடம் .உங்களின் ஆலோசனை படியே மருத்துவரை போய் ஜுரத்திற்கான காரணத்தையும் சரி பன்னுவதற்கான வழியையும் கேட்டு கொள்கிறேன்.நன்றி

ramba

கர்பிணிக்கு தொண்டை வலி வந்தால்,குணம் கிடைக்கும் மருந்து இருக்கா>?என் அக்கா தொண்டை வழியில் கஸ்டப்படுகிறால்..தெரிந்தவங்க சொல்லுங்க பிளீஸ்...அன்புடன் மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா தொண்டை வலியை பொறுத்தவரை வென்னீரில் உப்பிட்டு அதை தினம் மூனு வேளை குறிப்பா படுக்கப் போகும் முன் gargle பன்னிட்டு தூங்குரது நல்லது..இந்த gargle க்கு தமிழ்ல என்னன்னு தெரீலப்பா...தன்னியை வாயில் ஊத்திட்டு முழுங்காம மேல பாத்துட்டே கிலுகிலுகிலுன்னு தோண்டையால் ஊதி விளையடுவோமே அதான்.செய்யருதுக்கும் நல்ல ஜாலியா இருக்கும்

தொண்டை வலிக்கு தளிக்கா சொன்ன மாதிரி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது தான் நல்லது.
ஆனால் வய் பொருக்கும் சூடில் இருக்கனும், ஒரு சொம்பு நிறய போட்டுக்கொண்டு தெவையான அள்வு உப்பையும் கரைத்துக்கொண்டு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
முன்று நாளைகு பிரெஷெர் இருந்தால் உப்பு உள்ளே போகாமல் பார்த்து கொள்ளவும்.
மற்றொறு முறை விக்ஸ் (அ) டைகர் பாஃம் இதமாக கையில் எடுத்து தொண்டை பகுதி ,பின் தொண்டை காது மடல் பின் பிறம் தடவவும். கேட்கும்.
சாப்ரானை பாலில் போட்டு நல்ல கொதிகவைத்து குடிகவும்.
வெத்தலைக்கு போடும் சுண்ணாம்பையும் தொண்டையில் தெய்ப்பார்கள்.
ஜலீலா

Jaleelakamal

Hello தலிகா,
நீங்கள் சொன்னது மிகவும் டமாஷாக உள்ளது...அதற்கு பெயர் கொப்பளிபது..இன்னும் நான் அனத நினைத்து நினைத்து சிரித்து கொண்டு இருக்கிறேன்...
லதா

ஹலோ ஹர்ஷினி எப்படிபா இருக்க
ஏன் இவ்வளவு நாளா காணும், நீங்க பேசிக்க்கொண்டிருக்கும் இடத்தில் நுழைய முடியவில்லை ஆகையல் இங்கு, என்ன் நலம் தானே, பிறகு பேசுகிறேன் தூங்க போகிறேன்.
ஜலீலா

Jaleelakamal

என்னப்பா கொப்பளிக்குரதுக்கு இவ்லோ கன்ப்யூஸன் ஆ?அது உன்கலுக்கு ஜாலியா இருக்குமா? எனக்கு சுத்தமா பிடிக்காது,அம்மா தருவாங்க அவங்களுக்கு தெரியாம கொட்டிட்டு நல்லபிள்ளையாட்டம் இருத்துப்பேன்...அப்புறம் சொன்னதுக்கு நன்றிஅன்புடன் மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னப்பா, எல்லாம் எப்படி இருக்கீங்க? இங்க பஸ்ட் என் பொண்ணு, அப்பறம் நான், இப்போ என் கணவர்... எல்லாம் உடம்புக்கு முடியாம இருக்கோம்.

நேத்து டாக்டர்-ஐயும் போய் பார்த்துவிட்டு வந்தோம். எல்லாம் இந்த ஸ்ட்ரெப் த்ரோட்-தான். எல்லாரும் குடும்பமா ஆன்டிப்பயாட்டிக்ஸ் எடுத்துட்டு இருக்கோம். : ( விடாம எனக்கும், அவருக்கும் 103, 104 ந்னு ஜூரம் அடிச்சிட்டே இருக்கு... அப்பப்ப மருந்து சாப்பிட்டு கொஞ்சம் கன்ட்ரோல் பண்ண முயற்சி பண்றோம்.

எதுவுமே சாப்பிட பிடிக்கமாட்டேங்குது.. நேத்து எல்லாம் என் பொண்ணுக்கு மட்டும் டொமெட்டோ சூப் கொடுத்தேன். எங்களுக்கு எதுவும் சாப்பிட பிடிக்கலை. சும்மா படுத்து படுத்து, இன்னும் பாடி பெயின் அதிகமா ஆற மாதிரி ஒரு ப்லீங். அதான் ஒரு விஸிட் நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன். : )

இங்க தளிகா சொல்லி இருக்கிற உப்பு தண்ணீ கொப்பளிக்கறது நானும் செய்கிறேன்.. ஒரு 2 முறை ஒரு நாளைக்கு!
சரி, 2, 3 நாளா ஒரே சூப்-லதானே வாழறோம் (அதுவே இப்பொ ரொம்ப போர் ஆயிடிச்சு...) சரி, mild-அ ஒரு ரசம் வைக்கிறேன் சாப்பிடலாம் என்றால், என்னவர், இருக்கற தொண்டை வலியில் சாப்பிட முடியுமானு தெரியலை... வேண்டாம் என்கிறார்.

வேற என்ன மாதிரி care எடுத்துக்கலாம், என்ன சாப்பிட ட்ரை பண்ணலாம்னு கொஞ்சம் தோழிங்க எல்லாம் சொல்லுங்கப்பா....

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ பாத்து கவனமா இருங்க. போன வாரம் கேம்பெல் ஹாவெஸ்ட் செலக்ட் லைட் சூப் வாங்கினேன் ரொம்ப ஈசியா லைட்டா இருந்தது. மைக்ரோவேவில் சூடு பண்ணினேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்