ஜுரம் போக கை மருந்து எது போட்டால் சரியாகும்?நன்றி.

ஹாய் மனோகிரி மேடம் எப்படி இருக்கிறீர்கள்? நான் இப்போது 4 மாத கர்ப்பினியாக இருக்கிறேன். ஆனால் எனக்கு இப்போது கடந்த 2 நாளாக ஜுரமாக இருக்கிறது. ஜுரம் போக கை மருந்து எது போட்டால் சரியாகும்?நன்றி.

ஜலீலக்காவின் சுக்கு டீ பொடியும் வைத்து இருக்கேன்.. வெளிய போயி வந்தவுடன் சூடா சூப்/சுக்கு டீ/ராகி மால் மாதிரி குடிங்க. உடம்பில இருந்து வெளியேறிய சூடு மறுபடியும் உள்ளவரதுக்கு

வெரும் அரிசி 1/2 கப்/பாசிபருப்பு ஒரு கை/ஜீரகம் 1 டீஸ்பூன்/ரெண்டு கிரம்பு போட்டு தனியா பாத்திரத்தில் வேக வையுங்க நிறைய தண்ணீர் விட்டு . கஞ்சி நல்லா இருக்கும் ஊருகாய் கூட சாப்பிட

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

susri
அதிமதுரம் இருக்கு
அதிமதுரம் சிறிது எடுத்து வாயில் அடக்கி வரும் நீரை மிழுங்கவும் ஆன அதுக்கு என்ன தெரியல
இதை கர்ப்பிகள் கூட செய்யலாம்
radika

இலா,
உங்க உடனடி பதிலுக்கும், ஐடியாஸ்-க்கும் ரொம்ப தேங்ஸ்ப்பா. நானும் நீங்க சொன்ன கேம்பெல் செலக்ட் ஹார்வெஸ்ட் வைத்து இருக்கிறேன். சொல்லப்போனா, அதில் வரும் டொமெட்டோ வித் பேசில் தான் இப்போ என் பொண்ணோட ஃபேவரட்-ஆ ஆகிடிச்சி!. அது இல்லாம ஹெல்தி சாய்ஸ்-ம் (சிக்கன் & நூடுல்ஸ்) சாப்பிட்டோம்!

உங்க கஞ்சி ஐடியா, சுக்கு டீ ஐடியா எல்லாம் நல்லா இருக்கு. கட்டாயம் ட்ரை பண்ணறேன். தேங்ஸ் அகெய்ன்!

radika,
அதிமதுரம் டிப் எனக்கு புதுசு. என்னிடம் இப்ப அது இல்லையும் கூட. வந்து உங்க கருத்தை எனக்கு சொன்னதற்கு தேங்ஸ்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஸ்ரீ ஜுரம் வந்தாலே ஒன்றும் பிடிக்காது வாய்க்கு ருசி படாது.

மிளகு கஷாயம் போட்டு குடிங்க, சுக்கு காபி, இஞ்சி சாறு தேன் , ஒரு கல் உப்பு போட்டு குடிக்கவும். நாக்கில் கால் கால் தேக்கரண்டி அப்ப அப்ப குளுக்கோஸ் வைத்து சாப்பிடுங்கள்.

1. வெள்ளை கஞ்சியும் பருப்பு துவையலும் வைத்து சாப்பிடுங்கள் வாய்க்கு ருசி படும்.
2. சேமியா கஞ்சி.
3. மிளகு ரசம்., பிளெயின் சாதம், வைத்து
இலா சொன்ன மாதிரி ஊறுகாய் தொட்டு சாப்பிடுங்கள்.
4. இடியாப்பம் பால் ஊற்றி அல்லது லேசாக மட்டன் எலும்ம்பு சூப் செய்து அது ஊற்றி சாப்பிடுஙக்ள்

5.ஹார்லிக்ஸில் குளுக்கோஸ் சேர்த்த்து அப்ப அப்ப கொஞ்சம் கொஞ்சம் குடிக்கவும், நல்ல எனர்ஜியா இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

நிறைய நல்ல நல்ல டிப்ஸ் குடுத்து இருக்கீங்க. ரொம்ப தேங்ஸ் அக்கா. ஒரு வழியா ஜுரம், காய்ச்சல், தொண்டை வலி எல்லாம் முடிந்து 4 நாளுக்கு பிறகு இப்பா கொஞ்சம் ரெகுலர் உணவு சாப்பிடறோம்.

என்ன, எனக்குதான் இன்னும் கொஞ்சம் சளி, ஜலதோஷம் பிடிச்ச மாதிரியே இருக்கு. லேசா தலை பாரமா, தலை வலிக்கிரமாதிரி... அதுவும் காலையில எழுந்ததும் ரொம்ப சிவீயரா இருக்கு. அப்புறம் டே டைம்ல பரவாயில்லை. அகைன், நைட் அதே பிரச்சனை. : (

இதற்கு என்ன பண்ணலாம்?! உங்க சுக்கு டீ நல்லா இருக்கு - ஃபாலோ பண்ணறேன். அது இல்லாம எதாவது இருந்தா சொல்லுங்க ப்ளீஸ். நன்றி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்