pre.kg படிக்கும் குழந்தையை பாதியில் நிறுத்தலாமா?

தோழிகளே எனது மகள்pre.kg படித்துகொண்டு இருக்கிறாள்
ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிக்௧ட்டணம் 4000 கொடுத்துள்ளேன்

ஜனவரி 27 ல் இருந்து இன்று வரை பள்ளி செல்லவில்லை காரணம் எனக்கு பித்தப்பையில் கல் ஆப்ரேஷன் மூலம் அகற்றி உள்ளேன் அம்மா வீட்டில் தான் இருக்கிறேன் ஒரு மாத காலம் ஆகிவிட்டது
ஒரு மாதம் மட்டுமே விடுமுறை ௧டிதம் கொடுத்தேன்

குழந்தையின் பள்ளிகூடத்தில்இருந்து மீண்டும் அவளை பள்ளிக்கு எப்போது அனுப்பிவைப்பிற்௧ள் என்று தொலைபேசியில் அழைப்புவிடுக்கின்றனர்

நான் இப்போது என்ன செய்யலாம் தோழிகளே
அம்மா படிப்பை தொடர வேண்டாம் சிலமாதம் போகட்டும் உனது நலனை பார்த்து கொள் என்கின்றனர்
கணவர் வீட்டிற்கு அருகில் தான் பள்ளிகூடம் கணவர் வீட்டிற்கு விடலாம் என்று நினைக்கிறேன் மாமியார் குழந்தை௧ளை என்னால் பார்க்௧ இயலாது அவள் இங்கு வந்தால் அவளுக்கும் சேர்த்து நான் தான் வேலை௧ள் அனைத்தும் செய்யகூடும் என்று கூறுகிறார்

என்ன செய்வது பள்ளிக்கு அனுப்பலாமா கூடாதா
உதவுங்௧ள் தோழி௧ளே

//pre.kg படிக்கும் குழந்தையை பாதியில் நிறுத்தலாமா?// ஏன் கூடாது! எக்ஸாம் இருக்கா? அது வாழ்க்கையைப் பாதிக்கப் போகுதா? இதுனால பின்னால வேலை கிடைக்க பிரச்சினையாகிப் போகுமா? இன்னும் மார்ச் முடியவில்லை. பாதி எங்கிருந்து வந்தது! :-)

பணம் வீண் என்று பார்க்கிறீர்களா?

கணவரோடு விட்டால் பல பிரச்சினைகள் இருக்கின்றன. மாமி சொல்வது போல அதிகம் அவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கும்.

தனிக்குடித்தனம் என்று தனியாக வாழும் தம்பதிகள் இடையே சமையல் வீட்டு வேலை, குழந்தைப் பராமரிப்பு எல்லாம் ஆண்கள் செய்வது உண்டு. அங்கு எப்படி என்று தெரியவில்லை. கூட்டுக் குடும்பத்தில் இது எத்தனை தூரம் நடக்கும் என்பதும் தெரியாது. மாமியாருக்குச் சிரமம் வைக்காமல் உங்கள் கணவர் பார்ப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறதா? அப்படியானால் அனுப்புங்கள். காலை எழுப்பி, குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி, லஞ்ச் பாக்ஸ் +++ நிறைய இருக்கும் செய்ய. குழந்தைகளை அந்த நேரம் தயாராக்குவது பெரும் சிரமம். எல்லாக் குழந்தைகளும் பிரியமாக கிளம்பிப் போக மாட்டார்கள். பிறகு பாடசாலை முடிந்து வந்ததும் திரும்ப ஆயிரம் வேலை பார்க்க இருக்கும்.

குழந்தையை வெறுமனே காலை கொண்டு போய் விட்டு அழைத்து வருவது மட்டும்தான் வேலை என்று இல்லை. மாமியார் சொல்வது உண்மைதானே? நீங்களே யோசித்துப் பாருங்கள். அதற்கு மேல் குழந்தைக்கு உங்களைப் பிரிந்த ஏக்கம் இருக்கும். அது அடம் பிடிக்க வைக்கும்; அழ வைக்கும். அதுவே மாமியாருக்குத் தனிப் பிரச்சினையாக இருக்காதா? எல்லாம் உங்கள் மேல் திரும்புவதற்கு எத்தனை நேரம் ஆகும்? உங்கள் கணவர் முழுப் பொறுப்பையும் ஏற்பாரானால் கொண்டு போய் விடுங்கள்.

உங்களால் குழந்தையைப் பிரிந்து இருக்க இயலுமா? 'ஆம்,' என்றால் நான் சொல்ல ஒன்றுமில்லை.

'முடியாது, சிரமம்,' என்று நினைப்பீர்களானால்... குழந்தைக்கு உங்களைப் பிரிந்து இருப்பது அதை விடச் சிரமம். குழந்தை ஸ்கூல் போய் என்ன படிப்பார் அந்த மனநிலையில்? என்ன சாதிக்கப் போகிறார்! பிற்ர்காலத்தில் குழந்தைக்கு படிப்பில் பிடிப்பில்லாமல் போக இது ஒரு காரணமாக அமையலாம்.

//அம்மா படிப்பை தொடர வேண்டாம் சிலமாதம் போகட்டும் உனது நலனை பார்த்து கொள் என்கின்றனர்// உங்கள் உடல் நலம் மட்டுமல்ல, உங்கள் குழந்தையின் உடல், உள நலன், குடும்ப வாழ்க்கை... எல்லாமே இதில் தங்கி இருக்கிறது.

தீர்வுகள் 1. நீங்கள் அங்கு போய் இருந்து குழந்தையைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். 2. உங்களால் எப்போ விடு திரும்ப முடிகிறதோ அதுவரை குழந்தையைப் பாடசாலைக்கு அனுப்புவதைப் பின் போடவேண்டும். 3. இப்போ உள்ள வீட்டுக்குச் சமீபமாக ஒரு பாடசாலையாகப் பார்த்து அனுப்ப வேண்டும்.

அந்தப் பாடசாலைக்கு மட்டும்தான் அனுப்புவது என்றிருந்தால், அவர்களுக்கு நிலமையை எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கு உடம்பு சரியாகி வீடு வந்ததும் அனுப்ப ஆரம்பிப்பீர்கள் என்பதைச் சொல்லுங்கள். பாடம்... நீங்கள் வீட்டில் சொல்லிக் கொடுக்கலாம். இது சிரமமில்லாத வேலை. உங்களுக்கும் பொழுது போகும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்