உறவுகள்

சமீபத்தில் சீதாம்மா போட்ட போஸ்ட் எல்லாம் உறவுகள் பற்றிதான். நிறைய நல்ல விஷயங்கள் சொல்லிருப்பாங்க. கணவன் மனைவி உறவு, மாமியார் மருமகள் எல்லாம் அழகான இருவருக்குமான விட்டுகுடுத்தல் பற்றி சொன்னாங்க.

ஆனா நா(ன்)ம யாருடைய அட்வைஸ்யாவது காதில் வாங்கி போட்டு, மனதில் போட்டு சரியா நடந்துருக்கேனா நிச்சயமா இல்லை.

கோபம் வரும் போது முதல்ல நம்மகிட்ட இருந்து பறந்துபோறது நிதானம், யோசிக்கறதே இல்ல. வார்த்தைகள் விட்டுடறது. காசை போட்டா அள்ளிடலாம் ஆனா வார்த்தையை விட்டுட்டா மாறாத வடுவா நின்று உறவை சிதைக்க ஆரம்பிக்குது.

இருவர் பிரச்சனையில் மூன்றாவதாக ஒருத்தர் நுழையும் வரைக்கும் சின்ன பிரச்சனையாத்தான் இருக்கு.அடுத்தவர் வரும்போதே பூகம்பம் வெடிக்க தொடங்குது.

சமீபத்தில் என் உறவு முறையில் நடந்த பிரச்சினை அவர்களை தவிர மற்றவர்கள் பேசியே சின்ன விஷயம் ஊதி பெரிசாகிடுச்சு.

யாரிடம் எப்படி பேசணும் அப்படின்றது ஒரு கலை. அது எனக்கு இன்னும் வரவேயில்லை. இது வரை நல்லா இருந்த உறவுகளும் சில விஷயங்களால் விலகிபோகிறது. மிக சின்ன விஷயம் இப்பல்லாம் போன் யாருக்காவது செய்து பேசினால் ஒரு போன்கூட செய்ய முடியல உன்னால அப்படின்னு நான் போன் பண்ணும்போது கேட்கறாங்க.
இது கூட அவங்க போன் பண்ணி கேட்காமல் நாம பேச நினைக்கும்போது கேட்பாங்க பாருங்க . என்ன சொல்வது போங்க.

கோபத்தில் எடுக்கும் முடிவு எப்பவும் தவறாகவே முடியுது. எல்லோரையும் பத்தி புரியாத வரைக்கும் உறவுகள் நல்லாவே இருந்தது. உறவுகள் கிட்ட சலிப்பு, கோபம், பொறாமை வரும்போது அழகான உறவு சிதைய ஆரம்பிக்குது.

உறவுகளையும் நட்பை போல அளவாக வைத்திருந்தால் நல்லதுன்னு தோணுது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்மும் நஞ்சு.

சொல்லவந்த விஷயம் சரியாசொன்னனாந்னு தெரியல. ஆனா அனுபவம் நல்ல ஆசானாக இருக்கு. கற்று கொண்டே வருகிறேன். இங்கு இருக்கும் ஆசான்களிடமிருந்தும்.

நட்புக்களே

நான் இதை உறவுகள் பத்தி மட்டும்தான் எழுதிருக்கேன். எந்த நட்பையும் கஷ்டபடுத்தணும்ன்னு எழுதல புரிஞ்சுக்கோங்க மக்களே. நட்புக்கு எப்பவும் மனசுல முதல் இடம்தான்.

5
Average: 4.3 (3 votes)

Comments

//உறவுகளையும் நட்பை போல அளவாக வைத்திருந்தால் நல்லதுன்னு தோணுது// - நமக்கு நட்பு தான் உறவை விட க்ளோஸ்... அதனால் உல்டாவா தான் அடிக்கடி நினைப்பேன்... உறவுகளை போல நட்பையும் அளவா வைக்கணும்னு ;) நீங்க கொஞ்சம் வித்தியாசம்.

உறவுகள் எல்லோரும் வாய்ப்பதில்லை ரேவ்ஸ் :) வாய்க்கிற உறவு எப்படி இருக்கொ அதுக்கு ஏற்ற மாதிரி நம்ம நம்மை மாத்திக்கணும்... இல்லன்னா காலத்துக்கு மனசுல அது ஒரு வலியை கொடுத்துட்டே இருக்கும். எதிர் பார்ப்பு எந்த் உறவிடமும் இருக்க கூடாது. பிரெச்சனைகளை எந்த உறவுகளிடமும் சொல்லாம இருப்பதே நல்லது. நம்ம பிரெச்சனைக்காக வருந்துபவர்களை விட அதை நினைத்து மகிழ்பவர்கள் அதிகமா இருந்தா வேறு என்ன பண்றது ;) நம்ம பக்கத்தில் இருந்து யாரையும் காயப்படுத்தாம நல்ல விதமா இருந்துட்டு போவோம்... அவ்வளவு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா'ங்க சொல்வதையே நானும் வழிமொழிகிறேன்ங்க :-)
கற்களை போட்டால் அள்ளிவிடலாம். ஆனால், சொற்களை போட்டால் அள்ள முடியாது என்பதே உண்மைங்.

நட்புடன்
குணா

ரேவ் நல்ல அழுத்தமான பதிவு :)
பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கிமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமேனு கருடன் சொல்லுச்சாம்.
அது போலத்தாங்க உறவாகட்டும், நட்பாகட்டும் எல்லைக்கோட்டை தொடாதவரை ப்ரச்சினை ஏதுமிருக்கப் போவதில்லை. ஆனா பாருங்க எல்லைக்கோடு எதுவரைனு அபாயமணி அடிச்சபிறகுதான் தெரியும்.
வார்த்தைக்கு எஜமானா இருக்கும்வரை நாம்தான் பெரியஆளுனு இருக்கலாம். ஆனா வார்த்தைய விட்டுட்டு அதுக்கு அடிமையா நாம நிக்கிற நொடி கொஞ்சமல்ல நிறையவே மனச வேதனைப்படுத்தும். முடிஞ்சவரை அமைதியை கடைபிடிக்க முயற்சி எடுக்கலாம். ஆனா சொல்றது எளிது, கடைபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.

சுற்றம் சூழத்தான் வாழ்ந்தாகணும். கல்யாண பத்திரிகைல கூட சுற்றம் சூழ வந்திருந்து மணமக்களை ஆசீர்வாதம் பண்ணுங்கனு போடறதில்ல. அப்ப எல்லாத்தையும் மறந்துடுறம்தானே!! இருப்பது ஒரு ஜென்மம் அதுல பகையை வளர்த்துக்காம, உறவை தக்க வெச்சு வாழ முற்படுவதுதான் நல்லது.
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைனு" சும்மாவா பெரியவங்க சொல்லி இருக்காங்க.

//எல்லோரையும் பத்தி புரியாத வரைக்கும் உறவுகள் நல்லாவே இருந்தது.// புரிஞ்சாலும், புரியாதப்ப எந்த மனநிலைல இருந்தமோ, அதே கோணத்தில பார்க்க பழகிட்டா நல்லதுதான். ஆனா பாருங்களேன், இதுவும் சொல்றது எளிது, கடைபிடிக்கிறது கஷ்டம் :(

அனுபவ ஆசான் சிலருக்கு இது சுடும்னு சொல்லிலேயே கற்றுக்கொடுப்பார். சிலருக்கோ செய்முறை விளக்கத்தால சொல்லிக்கொடுப்பார். நாமதான் சுட்டிப்பிள்ளைகளா இருந்து கத்துக்கணும்.
//சொல்லவந்த விஷயம் சரியாசொன்னனாந்னு தெரியல// எனக்கும் அதே சந்தேகந்தான்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உறவுகளையும் நட்பை போல அளவாக வைத்திருந்தால் நல்லதுன்னு தோணுது/ ரேவா நட்பு உறவுகளை விட பல மடங்கு நம்பிக்கையானது அன்பானது. அந்த நட்பை ஏன் உறவுகளோடு சேர்த்து ஒப்பிடனும். எனக்கும் உறவுகளை விட நட்பில் பற்றும் நாட்டமும் அதிகம். உறவுகள் நல்லது நடந்தால் மட்டுமே ஒன்றாக இருப்பார்கள். கெடுதல் பிரச்சனை என்றால் கண்ணையும் வாயையும் பொற்றிக் கொண்டு காணமல் போய்விடுவார்கள். ஆனால் நட்பில் அப்படி இல்லை. நமக்கு பிரச்சனை என்றால் முதலில் பக்கத்தில் நிற்பவர்கள் நட்பு வட்டாரங்கள் தான் இது என் தனிப்பட்ட அனுபவம்.

ரொம்ப அழகாக எழுதியிருக்க ரேவா.. மெபைல்ல இவ்வளவு அழகாக டைப் பண்ணியிருக்க. நிச்சயம் என்னால் முடியாது. எனக்கு தமிழ் டைப் மெபைல்ல பண்ண தெரியாது. உன் பதிவு சூப்பர்ம்மா.. கலக்கல்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

anbu akkaku, yenaku thirumanam aki 22 days akuthu, ungala mari than, na veetuku ore ponnu so yentha oru kandipum illa, ipo kalyanam aki joint familya iruken, yar ta yapdi pesanumne therila, ovoru nallum naragama pothu , na yethachum mistake pannena yenta sollama relationta solraga, intha pathivu pakum pothu yen life yapagathuku varuthu, kalya life ivlo kastama irukumnu konjam kuda ninaikala ,na yarta share pannanum therila, ammata sonna avga feel pannuvaga ,inga sonna periya perchanaiya akiduvaga ,vedula work then office yen husband yallathaium samalika mudila mind presure rompa athikama aiduchu akka, yen husband kalyanam arathuku munnala vera mari irunthaga , ipo yenna kandukave maduraga , athu innum valiya iruku ,ithu yenna valkai pesama sethuralama apdinulam thoonuthu

//நா(ன்)ம யாருடைய அட்வைஸ்யாவது காதில் வாங்கி போட்டு, மனதில் போட்டு சரியா நடந்துருக்கேனா நிச்சயமா இல்லை// ரேவ்ஸ் அட்வைஸ் செய்யறது ரொம்ப‌ சுலபம், அதை நடைமுறையில் கடைபிடிக்கிறது ரொம்ப‌ ரொம்ப‌ கஷ்டம்! இது எல்லோருக்குமே சகஜம் தான்.....

//இப்பல்லாம் போன் யாருக்காவது செய்து பேசினால் ஒரு போன்கூட செய்ய முடியல உன்னால அப்படின்னு நான் போன் பண்ணும்போது கேட்கறாங்க.
இது கூட அவங்க போன் பண்ணி கேட்காமல் நாம பேச நினைக்கும்போது கேட்பாங்க பாருங்க . என்ன சொல்வது போங்க// ஆஹா! இது அடிக்கடி எனக்கு நடக்கிறது!!!

//காசை போட்டா அள்ளிடலாம் ஆனா வார்த்தையை விட்டுட்டா மாறாத வடுவா நின்று உறவை சிதைக்க ஆரம்பிக்குது// இது உண்மைதான்! கோபம் வந்தா உடனே வார்த்தைய‌ விடாம‌ இருக்கிறது, எல்லாவிதத்திலேயும் நல்லதுதான்!
ஆனால் ஒரு விஷயம், வார்த்தையை விட்டாலும் தப்பா போயிடும்! ஒன்னுமே சொல்லாம‌ இருந்துட்டாலும், அதற்கும் ஆயிரம் அர்த்தத்தை கற்பித்துக்கொள்பவர்களும் இருக்காங்க‌!! உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...

வனி எல்லா நட்பும் நெருக்கம் இல்லயே. எவ்வளவு தோழமை இருந்தாலும் யாரோ ஒரு சிலர்தான் நெருக்கம் இல்லயா. அதனால்தான் அப்படி சொன்னேன். நான் எப்பவும் விட்டுக்கொடுத்து போறவதான். இப்பலாம் அமைதியா இருக்கறதுதான் பிரச்சினை ஆரம்பமா இருக்கு.( பார்த்துகோங்க நான் அமைதியா இருந்தால்தான் பிரச்சினை வருது).

Be simple be sample

சரியா சொன்னிங். தம்பிங் கல்யாணம் ஆனாலும் இது போலவே இருக்கனும்ங்.

Be simple be sample

அருள் எப்படி இருக்கீங்க.ரொம்ப நாள் ஆச்சு உங்கள பார்த்து.உங்க பதிவை பார்க்க ரொம்ப சந்தோஷம்.

நீங்க சொன்ன மாதிரி எல்லை கோடு தெரிஞ்சதுக்கு அப்பறம்தானேபா எல்லாம் புரியுது. இன்னைக்கு வரைக்கும் உறவுகளுக்குள்ளோ, நட்புக்குள்ளோ நான் ஒரு வார்த்தை கோபமா பேசியது கிடையாது. ஆனால் ஒருவரிடம் கோபம் வந்துடுச்சுன்னா அது யார் சொன்னாலும் இல்ல எனக்கே புரிந்தாலும் அது எப்போதும் மாறுவதே இல்லை. மாற்ற நினைத்தாலும் மாறாத குணம் இது.

உறவுகள் பத்தி புரிந்தாலும் , புரியலனாலும் நாம் எப்போதும் ஒரே போலவே நடந்துக்கணும் அப்ப்டின்றதுதான் என் எண்ணமும். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும், நான் நானாகவே இருக்கிறேன்.

உறவுகளால் இது வரை என்னிடம் எதுவும் பிரச்சனை வந்தது இல்ல. Sutram nadppum enakum epavum pidichathu arul. Avaga ilama naan ilai. Sila azaga solli enakum puriyavachiga arul. Thanku

Be simple be sample

ஹாய் ரேவ். நிச்சயமா உறவையும், நட்பையும் ஒப்பிடமுடியாதுதான். நட்புக்குள்ள எல்லா விட்டுகுடுத்தலும் இருக்கு, உறவுகளுக்குள்ள அது கிடையாது, நிச்சயம் எல்லாம் மாறும் ரேவ்

பாராட்டிற்கு தான்க்யூ ரேவ்

Be simple be sample

புது கல்யாணபெண்ணிற்கு முதலில் வாழ்த்துக்கள்.

அம்மா வீட்டில் செல்லமாய் சுற்றி வந்து இருப்பதுபோல் நாம் மாமியார் வீட்டிலும் எதிர் பார்ப்புடன் வரும்போதுதான் டென்ஷன் அதிகம் ஆகுது. வரும் உறவினர்களோ, மற்றவர்களோ புது பெண் எப்படி என்று எல்லார் பார்வையும் நம்ம மேல் திரும்பும் போது இது போல பிரச்சினை வரவே செய்யும்.
நம்ம அம்மா நம்மை திட்டினா கோபமா இப்படியெல்லாம் யோசிப்போமா சொல்லுங்க. என் வீடு, என் குடும்பம்,என் உறவு என்று எண்ணத்தோடு கொஞ்சம் நாள் குறை சொன்னாலும் சரின்னு சொல்லி மாத்திக்கறேன் அப்படின்னு அன்பா இருந்து பாருங்க அவங்களும் நிச்சயம் மாறுவாங்க. கடைசியா நீங்க சொன்ன வார்த்தைகள் இனி எப்பவுமே உங்களுக்கு தோணகூடாது.அறுசுவை ல எவ்வளவு இழை இதை பத்தில்லாம் பேசிருக்காங்க அதையெல்லாம் பாருங்க. இதெல்லாம் ஒரு விஷயாமான்னு நீங்களே மத்தவங்களுக்கு சொல்லுவிங்க. ஹாப்பியா இருங்க.

Be simple be sample

அனு சரியா சொன்னிங்கப்பா. உங்களுக்கும் சேம் பிளட் தானா. நீங்க சொன்னதுல்லாம் நானே சொல்லற மாதிரி இருக்கு. அமைதியா அய்யோ அது இன்னும் பிரச்சினை ல கொண்டு போய்விடுது. சிம்பிளா ஒரே வார்த்தை திமிர்ன்னு பட்டம் கட்டிடறாங்க.

ஒரு தாரக மந்திரம் தான் எப்பவும் எனக்குள்ள. விட்டுகொடுக்கவறவங்க கெட்டுபோவது இல்லை. யார் மேல தப்புன்னாலும் முதலில் நாமே இறங்கி போய் பேசிட்டா பாதி பிரச்சினை முடிஞ்சுடுது போங்க.

Be simple be sample

உறவா நட்பா என்பது முக்கியமில்லை ரேவா....
''எதிர்பார்ப்பு'' என்பதைக் குறைத்துக் கொண்டால் நல்லது இதுவே ரொம்ப‌ முக்கியம்.
அன்புக்கு பதில், அன்பைக் கூட‌ எதிர்பார்க்காமல் இருக்க‌ பழகிக் கொண்டால் வலி இன்றி வாழலாம். சொல்வது எளிது. நடைமுறையில் கொஞ்சம் கஷ்டம் தான்.

வருடங்கள் அனுபவத்தைத் தந்துகொண்டே இருக்கின்றன‌. கற்றுக் கொள்வோம். வலிகளையும் சுகமாக‌ ஏற்றுக் கொள்வோம்.

உறவுகள் பத்தி நீங்க எழுதினத படிச்சிட்டு, என்ன கமெண்ட் எழுதுறதுன்னு தெரியாம ஒரு மணி நேரமா நானும் முழிச்சிக்கிட்டே இருக்கேன். உறவுகள் பத்தி நான் என்ன நினைக்கிறேன்னு கேட்டா சொல்ல தெரியல. அவ்வளவு குழப்பம்.

உறவுகள்ல, ரொம்ப நெருக்கமானவங்க, அடிக்கடி (எப்போதும்) சந்திக்கக் கூடியவங்க எண்ணிக்கை ரொம்ப, ரொம்ப குறைவு. (கிராமங்கள்ல அப்படியில்ல ஒரு தெருவே சொந்தமா இருக்கும்) அந்தந்த உறவுகள் நம்மகிட்ட இருந்து என்ன எதிர் பாக்கிறாங்க அப்படீன்கிறத புரிஞ்சிக்கிட்டா, எதிர்பார்ப்ப பூர்த்தி பண்ணிட்டா, உறவுகளை கையாளுறது சுலபம்ன்னு நினைக்கிறேன். (ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லைன்னும் தெரிது)

சொல்லவந்த விஷயத்தை சரியா சொல்லலைன்னு தெரிது. . எனக்கும் அனுபவம் நல்லா பாடம் படிச்சி குடுக்கு. படிச்சிக்கிட்டே இருப்போமே...

உன்னை போல் பிறரை நேசி.

நட்புக்களே

நான் இதை உறவுகள் பத்தி மட்டும்தான் எழுதிருக்கேன். எந்த நட்பையும் கஷ்டபடுத்தணும்ன்னு எழுதல புரிஞ்சுக்கோங்க மக்களே. நட்புக்கு எப்பவும் மனசுல முதல் இடம்தான்.

Be simple be sample

கரக்டா சொன்னீங்க நிகி. எதிர்பார்ப்பு இல்லனாலே நிச்சயம் சந்தோஷம்தான். வாழ்க்கை நிறைய விஷயம் புரிய ஆரம்பிக்குது. நானும் பார்த்துக்கொண்டே இருக்க பழகி வரேன். எதுனாலும் ஏத்துக்க வேண்டியதுதான் என்ன சொல்ல்றீங்க.

Be simple be sample

கிறிஸ் ரொம்பபபப குழப்பிட்டனோ. இருந்தாலும் குழப்பிய குளத்துலதான் மீன் பிடிக்க முடியும். அதான் பாயிண்ட் எடுத்து விட்டுடிங்களே.

அடுத்த்வங்க எதிர்பார்ப்பு என்னனு தெரிந்து பூர்த்தி செய்றது நடக்கற காரியமா சொல்லுங்க. எப்படின்னாலும் வாழ்க்கை ரிசல்ட் குடுத்துட்டு தேர்வு வைக்குது. பாடம் படிப்போம். சரியா டீச்சர்

Be simple be sample

உறவுகளைப் பற்றி கேட்டால் பக்கம் பக்கமாக சொல்லிக் கொண்டேயிருக்கலாம் போலும். நமக்கிருக்கும் அத்தனை உறவுகளின் பண்பிற்க்கேற்றார் போன்று மாற்றிக் கொள்வது நடை முறையில் "கடினம்" என்று சொல்ல வரவில்லை. மாறாக மாற்றிக் கொள்வதென்பது "முடியவே முடியாது" என்றே உணர்கிறேன். ஏனென்றால் உறவுகளை "திருப்தி" படுத்துவதென்பது என்பது "இயலாத காரியம்". வாழ் நாள் முழுதும் ஏதோ ஒரு உறவினரால் ஏதாவது வலிகள் தாக்கிக் கொண்டேதான் இருக்கின்றன. அவர்களை மகிழ்விக்க என்னன்ன செய்யலாம் என்று யோசித்து, சிந்தித்தே நம் ஆயுள் முடிந்து விடும் போன்று :((
பல நேரங்களில் உறவுகள் வேண்டும் என கருதி நாம் எவ்வளவுதான் பணிந்து நடந்தாலும் நமக்கென்னவோ உதை தான் விழுந்து கொண்டேயிருக்கிறது.
உறவினர் போன்றே அன்பு பாராட்டும் நட்புகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். நட்புகளிடம் அளவோடு இருப்பதினால் தான் என்னவோ நட்புறவு என்பது ஆரோக்கியமாக இருக்கிறது.
நீங்க குறிப்பிட்டது போன்று அனுபவம் தான் நல்ல பாடம்.
உறவுகளால் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களை என் பிள்ளகளுக்கு சொல்லிக் கொடுக்கவும் மறப்பதில்லை. அதே போன்று என் உறவுகள் எனக்கு கொடுத்த வலிகள் போன்று என்னால் யாரும் அனுபவிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

///இப்பல்லாம் போன் யாருக்காவது செய்து பேசினால் ஒரு போன்கூட செய்ய முடியல உன்னால அப்படின்னு நாம போன் பண்ணும்போது கேட்கறாங்க// ரொம்ப ரொம்ப சரி ரேவா சிஸ் , இது நான் பலமுறை அனுபவிச்சு இருக்கேன், தொடர்ந்து ஒருந்தவங்கிட்டேந்து இந்த‌ கேள்வி வரும் ஏன்டா போன் பண்ணோம்னு இருக்கும்.

ஆனா ஒரு டைம் நான் திருப்பி அவங்க‌ கிட்ட‌ கேட்டுட்டேன் ஏன் என் நம்பர் உங்ககிட்ட‌ இல்லையோனு சிரிச்சிகிட்டே கேட்டுட்டேன் அதுக்கு எங்க‌ நேரம் இருக்கு எதாவது ஒரு பிரச்சனை வந்துட்டே இருக்குனு சொன்னாங்க‌, நான் உடனே சொன்னேன் அது மாதிரி தான் அடுத்தவங்க‌ நிலைமையும்னு ......

சொந்தம்னாலே பிராப்ளம் தான், காசு இருந்தா வேற மாதிரியும் , கொஞ்சம் மிடில் கிளாஸ்னா வேற‌ மாதிரியும் தான் ட்ரீட் பண்ணுவாங்க‌,
அவங்களுக்கு ஜால்ரா போடறதும் அடுத்தவங்கள‌ தாழ்வா பேசுறதும்னு இருப்பாங்க‌,

என்னை பொறுத்தவரை சொந்தம்னா சொந்தம் அவ்ளோ தான்,
எதாவது உதவி கேட்கிறாங்களா செய்யனும் பட் அதுக்கு அவங்ககிட்ட‌ நன்றிலாம் எதிர்ப்பார்க்க‌ கூடாது, ஏன்னா கிடைக்காது ....

அதே போல‌ அவங்க‌ கிட்ட‌ நாம‌ எதையும் எதிர்பார்க்க‌ கூடாது எதையுமே....
நாம‌ நல்லா இருந்தா நம்மகூட‌ இருப்பாங்க‌, கொஞ்சம் கீழ‌ போனாலும் மிதிப்பாங்களே தவிர‌ கைகொடுத்து மேல‌ தூக்கிவிடமாட்டாங்க‌, காயத்துக்கு ஆறுதலா மருந்து கூட‌ போட‌ மாட்டாங்க‌......

நட்பு , நாம‌ கூட‌ அக்கம் பக்கம் பழகினவங்க‌ தான் உண்மையான‌ சொந்தம்,
எதையும் எதிர்பார்க்காம‌ அடிக்கடி அவங்க‌ தரும் ஆறுதல் வார்த்தைகள் மிகப்பெரிய‌ உதவி, அது தான் நமக்கு தேவை....
அவங்ககிட்டேயும் நாம‌ செய்தோம் அவங்க‌ செய்யனும்னு எதிர்பார்க்க‌ வேணாம், எதிர்பார்த்தா அந்த‌ உறவுகள் தொலைந்து தான் போகும், வடுவா நம்ம‌ மனசுல் இருக்கும்....

அதே போல‌ இதை எல்லாம் மனசுக்கு கொண்டுபோய் புழுங்க‌ கூடாது.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

உறவுகள்....அப்படி ஒரு உறவினை நம்பினால் நமக்கு ஆபத்துதான் எச்சரிக்கை தோழிகளே...நட்பு எப்பவுமே அப்ப்டியேயிருக்கும்.இந்த உறவு பல நேரங்களில் நம்மை ரொம்ப கஷ்டபடுத்தும்.தோழிஸ் யாரும் கோவப்படாதீங்க.என் அனுபவம் பேசுது.உதாரனத்துக்கு நான் வசதியாயிருந்தா.நல்லா கொழிக்குது.எங்க கொள்ளையடிச்சதோனு சொல்வாஙக.அதே கஷ்டபட்டா அங்க ஒன்னுமேயில்ல ஊத்திக்கிச்சி நல்லாவேனும்பாங்க இதான் உறவுகள்.இந்த உறவுகளை நம்பரது.வேஸ்ட்.அதுக்காக அவங்களை ஒதுக்கவும் முடியாது.நல்லது கெட்டதுக்காக என்ன சவுகியமா நு வச்சிக்கலாம் அதான் நமக்கு பெஸ்ட்

Anbullangale,
Uravu enbathu punithamanathu ippiraviyil kidaitha varam. Athai yarum kobam endra kodia visham vootri azhithu vidatheer.

Nandri,
Prakasam P
9943723800

ஹேய் ரேவா !நட்போ உறவோ எல்லாமே உண்மையா உறுதியா இருந்தா எல்லாமே சுபம்தான்... எல்லாருக்கும் எல்லாம் அமையருது இல்லே ,, இருகிறத வச்சி சந்தோசபடுரதுதான் என்னோட வழி , வேற வழி ... எனக்கு நடிக்கிறது ஒன்னுமட்டும்தான் பிடிக்காது ,ஆனா அதைதான் சிலர் செய்யறாங்க என்ன செய்ய ???ஹிஹிஹி. நீ நெனச்சத சொல்லிடீல விடு நல்லாதான் ,உனக்கு தோணினத சொல்லியிருக்க ...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..