plz help me

எனக்கு 8வது மாதம் நடக்கிறது நேற்றிலிருந்து எனக்கு Loose motion மாதிரி போகுது. நேற்று மட்டும் 4 தடவை போனேன்.நார்மல் சாப்பாடு தான் சாப்டேன்.டாக்டரிடம் போவதற்கு அம்மா மாலை தான் வருவாங்க,இது எதனால்,இல்லை ஏதும் பிரச்சனையா இன்றும் அப்படி இருந்தால் என்ன செய்வது.அம்மா வரும்வரை மனசு குழம்பாமல் இருக்க சகோதரிகளின் பதில் வேண்டும்.

//இது எதனால்,// சாப்பாடு வழக்கம் போல சாப்பிட்டாலும்.. ஏதாவது தொற்று இருந்திருக்கலாம். (ஈ, கரப்பு இருக்கா அங்க?) மற்றப்படி பிரச்சினை ஒன்றும் இராது.
//இன்றும் அப்படி இருந்தால் என்ன செய்வது.// ஈஸியா ஏதாவது ட்ரை பண்ணிப் பாருங்க. டோஸ்ட் & தேன், கடும் தேநீர்ச் சாயத்தில் எலுமிச்சம்புளி இப்படி. முதலாவது பிரச்சினை இல்லாத வழி. எத்தனை உணவு வேளைகள் வேண்டுமானாலும் எடுக்கலாம். அனேகம் மூன்று தடவைக்கு மேல் தேவைப்படாது. இரண்டாவது.. எலுமிச்சை தேநீர் ஒரு தடவை ட்ரை பண்ணுங்க. அதற்கு மேல் வேண்டாம். வயிற்றோட்டம் நின்றால் போதும். உங்களுக்கு வேறு பிரச்சினை இராது. டீஹைட்ரேட்டட் ஆகாம இருக்க மறக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிங்க.

//அம்மா வரும்வரை மனசு குழம்பாமல் இருக்க சகோதரிகளின் பதில் வேண்டும்.// :-) பயப்படாம இருங்க. ஒன்றுமே ஆகாது. அம்மா வரும் வரை யூ ட்யூப்ல உங்களுக்குப் பிடிச்ச சினிமா அல்லது பாட்டு ஏதாவது போட்டுக் கேளுங்க.

‍- இமா க்றிஸ்

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை முழுங்குங்க..மோர் குடிங்க...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அம்மா உங்கள் பதிலை எதிர்பார்த்துதான் என் கேள்வியை கேட்டேன் பெயர் மென்சன் பண்ணக்கூடாதுனு தான் பெயர் போடல.இப்போ காலைல ஒரு தடவை போனேன் இன்னும் இதுவரைக்கும் திரும்ப போகல.எலுமிச்சை தேநீர் எப்படி செய்வது.

true love never fail

பாத்திரத்தில் 1 கப் நீர் விட்டு 1 தேக்கரண்டி டீ தூள் போட்டு கொதிக்க விடுங்க. பின் வடிகட்டி அதில் சர்க்கரையும் 1/2 எலுமிச்சை பழத்தின் சாறையும் சேருங்க. அவ்வளவு தான். சூடாகி லூஸ் மோஷன் ஆனா இது உடனே பலன் தரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சொன்னதுவேதான் எலுமிச்சை தேநீர்.

பெயர் போட வேணாம் என்கிறதுக்குக் காரணம் கேள்வி கேட்கிறவங்களுக்கு பதில் கிடைக்கணும்; நல்ல பதில்... அதுவும் கூடிய சீக்கிரம் கிடைக்கணும் என்கிற நல்ல எண்ணம்தான் தவிர வேறு எதுவும் இல்லை. எனக்கு இந்த தேநீர் ஒன்றைத் தவிர கை வைத்தியம் எதுவும் தெரியாது. பெயர் போடாட்டா உங்களுக்கு உதவ விஷயம் தெரிஞ்சவங்க வருவாங்க இல்லையா! உங்களுக்கு உடனே பதில் போட்டது அம்மா வரும்வரை உங்களை ஆறுதலா வைச்சிருக்கிறதுக்காகத்தான். :-)

ராஜி சொன்னதும் நல்ல விஷயமாத் தெரியுது. வயிற்றுளைவு இருக்கிறப்ப வெந்தயம் (தனியாக) போடுவேன். உதவி இருக்கு. நீங்க யோசிச்சு பண்ணுங்க. பயப்படாம இருங்க.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி ராஜி,வனி இமாம்மா இப்பவே செய்யபோரேன்

true love never fail

வனி அக்கா நீங்க சொன்னது மாதிரியே செய்தேன் அது உடம்பு சூட்டினால் தான் போல சரியாகிடுச்சு.அம்மாவும் அதத்தான் செய்யலாம்னு வந்தாங்கலாம். 2வேளை குடிச்சேன் டாக்டர் கிட்ட போகவே இல்லை.நன்றி இமாம்மா.

true love never fail

Gud :) amma kuda irukaangalaa? Ini nimmadhiyaa irunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்