ஒன்பதாம் மாதம்

எல்லாரும் நலமா.. இது எனக்கு 36 வது வாரம். ஏப்ரல் 19 ஸ்கேன்படி நாள் கொடுத்திருக்காங்க‌. ஒவ்வொரு முறையும் கன்சல்டேஷனுக்கு போகும் போது ஒவ்வொரு பிரச்சனை. கொடி சுத்திக்கொண்டு இருக்காம்.. என் எடை இப்போது 84 கி.முன்பு 67. நடுவில் இன்பெக்ஷன் வந்து எக்ஸ்ட்ரா மாத்திரை மருந்து சாப்பிடும்படி அகிவிட்டது.. மிகவும் பயமாக‌ உள்ளது.. சுக‌ பிரசவம் ஆக‌ வேண்டுமே என‌ கவலையாக‌ உள்ளது..நடக்கிறேன்.. ஒரு சில‌ உடற்பயிற்சிகளும் செய்கிறேன்.. வேறென்ன‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்.. என்னென்ன‌ உணவு இப்போது நல்லது..ஏற்கனவே உள்ள‌ லின்க்ஸ் எல்லாமும் படித்தேன்..இருந்தாலும் நானும் தனியாக‌ கேட்டு கொள்ளனும் போலிருந்தது..

//ஏப்ரல் 19 // இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. :-) வாழ்த்துக்கள்.

//ஒவ்வொரு முறையும் .... ஒவ்வொரு பிரச்சனை.// எல்லாத்துக்கும் டாக்டர் சொல்லுற தீர்வுல, எடுத்த மருந்துல சரியாகித்தானே இருக்கு. யோசிக்காம இருங்க. //மிகவும் பயமாக‌ உள்ளது.// :-) பாப்பாவுக்கான பை, உங்க பை எல்லாம் ரெடியாக்கியாச்சா? செக் பண்ணுங்க. எடுத்து வைச்சு திரும்ப அடுக்குங்க. மனசு சரியாகிரும். :-) சந்தோஷமாக இருக்க வேண்டிய காலம் இது. நீங்க சந்தோஷமா இருந்தால் குழந்தையும் உள்ள சந்தோஷமா இருப்பாங்க. //சுக‌ பிரசவம்// என்ன நினைக்கிறீங்கன்னு புரியல. சிசேரியன் வேணாம்னா? என் அபிப்பிராயம் எப்பவும் தாய்க்கு சுகப் பிரசவம் ஆகுறதை விட குழந்தை ஆரோக்கியமா கிடைக்கிறது முக்கியம் என்கிறது. அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்ததும் எந்த வேதனையும் காணாமப் போய்ரும். :-)

//கவலையாக‌ உள்ளது..நடக்கிறேன்.// வேணாம். சந்தோஷமா நடங்க. கொஞ்ச நாள்ல குழந்தையைப் பார்க்கப் போறதை மட்டும் நினைச்சுப் பாருங்க. வேற கவலை வேணாம். கவலைகளை உங்கள் கணவர், அம்மா, டாக்டர்களுக்கு விட்டுருங்க. நீங்க கவலைப்படுறதால ஏதையாச்சும் மாற்ற முடியுமா? ஆனா சந்தோஷமா இருக்கிறதால மாற்ற முடியும். மனசுக்கு தைரியம் வரும். எதுவானாலும் ஈஸியா ஃபேஸ் பண்ண முடியும்.

//சில‌ உடற்பயிற்சிகளும் செய்கிறேன்.// நல்லது. அது அளவோட இருக்கட்டும். உங்களை வருத்தி எதுவும் செய்யாதீங்க.

//வேறென்ன‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்.// எதுவும் இல்லை. :-) நல்ல சினிமா பார்க்கலாம். க்ராஃப்ட் பண்ணலாம். ரசிச்சு சமைச்சு ரசிச்சு சாப்பிடலாம். வீட்டை அலங்கரிக்கலாம். தோட்டத்துல உலாவலாம். ஸ்க்ராப் புக் பண்ணலாம். பேர் தெரிவுசெய்து வைக்கலாம். இன்னும் நாலு ட்ரெஸ் புதுசா தைச்சு வைக்கலாம். :-)

//என்னென்ன‌ உணவு இப்போது நல்லது.// சாதாரணமா சாப்பிடுங்க. பிடிச்சதை சாப்பிடுங்க. டாக்டர் ஏதாவது அதிகமா சாப்பிடச் சொல்லியிருந்தா தவிர்க்காமல் அதையெல்லாம் சேர்த்துக்கங்க.

குட் லக் :-)

‍- இமா க்றிஸ்

Nan arusuvaiku puthusu ellam epdi irukenga enaku ethu 36 weeks Dan 1st baby April 12date solirukanga, sry Tamil ah type pana varala nan consive aagurathuku munadi 67kg irunthen IPA 87kg iruken weight adigama eriruka apdi iruntha normal delivery kastama , nan epayavathu Dan walk poren nan inum ena pananum tips kudunga imma mam enaku normal delivery aaganum plz imma mam help panunga

மிக்க‌ நன்றி இம்மா.. பதில் படிச்சதும் அப்பிடியே ஹாப்பி மூட் வந்தாச்சி.. இன்னும் ஒரு மாசத்துல‌ குட்டி பாப்பாவ‌ பாக்க‌ போறேன்..

தீபா உங்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரி வெயிட் கூடியிருக்கு.. இம்மா சொன்னா மாதிரி சந்தொஷமா இருங்க‌..

Hi sis thanks neengalum happy a irunga papa poranthathum marakama sollunga sis ,ungaluku ena baby nu theriuma

Ungaluku ulla athey problem than enakum iruku.kodi suthi irukunu sollirukanga athuku neenga enna panringanu therinjukalama enaku ipo 8th month running. Plz ungaluku 1st babyaaa enaku 1st baby rompa payama iruku plz suggest me...

true love never fail

நான் அதுக்கு எதுவும் செய்யல‌..அது ப்ராப்ளம் இல்ல‌..இதனால‌ எதுவும் ஆகாது பா... எனக்கும் முதல் குழந்தை .. பயப்படாதீங்க‌..

Hi sis how u ana ur lovely baby check up Ku poeitu irukengala Dr. Ena solirukanga baby growth epdi iruku

ஏப்ரல் 2 அன்று சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளார். :) எல்லாருடைய‌ ஆலோசனைகளுக்கும் மிக்க‌ நன்றி

Valthukal vidhya

Paien na nalla erukana
Unka healthaum nalla parthukonka

ML

congratulations. ...paiyana pathrama parthukanga...

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்