பனீர் பட்டர் மசாலா (தாபா ஸ்டைல்)

தேதி: March 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 2
பனீர் - 200 கிராம்
கொத்தமல்லி - தேவைகேற்ப
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பிரியாணி இலை – ஒன்று
கிராம்பு – 5
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
அமுல் க்ரீம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
அப்பளம் - 3


 

தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பனீரை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, காய்ந்த மிளகாய், கிராம்பு போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின்னர் பட்டரை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட்டு அதில் தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பி்றகு கலவையை மூடி 10 நிமிடம் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து கிளறி விடவும். இல்லையென்றால் அடிபிடித்து விடும்.
10 நிமிடங்கள் கழித்து மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அதில் கொத்தமல்லி மற்றும் ஊற வைத்த பனீரை சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி க்ரீமை சேர்ந்து நன்கு கொதிக்க விடவும்.
அப்பளத்தை தணலில் சுட்டு உடைத்து தனியாக எடுத்து வைக்கவும். கிரேவி நன்கு கொதித்தவுடன் கீரிய பச்சைமிளகாய் மற்றும் உடைத்த அப்பளத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
கலவை நன்கு கொதித்து தண்ணீர் வற்றி கிரேவியானதும் அடுப்பை அணைத்து இறக்கி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
சுவையான தாபா ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா ரெடி. இது சப்பாத்தி மற்றும் நாணுடன் சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Arumai.sema tastya irukum.plate pakave aasaia iruku.enjoy...

குறி்ப்பை வெளியிட்ட அறுசுவை டீமிற்கு மிக்க நன்றி.. செம்ம ஸ்பீடு தான்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆமா வந்தனா ரொம்ப டேஸ்டிங்க செய்துபாருங்க தெரியும்.. நன்றி வந்தனா.. பிடித்தமான பெயர்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்க‌ பன்னீர் பட்டர் மசாலா சூப்பரா இருக்கு. வாசனை இங்க‌ வரைக்கும் தூக்குது.

எல்லாம் சில‌ காலம்.....

Nandri ma

Nandri ma

Supera iruku rev. Paneer podama vera ena podslam rev. Pasagaluku pidikathu paneer

Be simple be sample

தாபா ஸ்டைல், செய்து பார்க்கிறேன் ரேவதி. :)

செம கலர்ஃபுல் மசாலா அருமை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.