ஸ்ட்ராபெர்ரி டூட்டி ப்ரூட்டி ஐஸ்க்ரீம்

தேதி: March 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

காய்ச்சிய பால் - 2 கப்
சர்க்கரை - அரை கப்
டூட்டி ஃப்ரூட்டி - 4 மேசைக்கரண்டி
ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
ஐஸ் க்ரீம் கோன் - 5
ஃப்ரஷ் க்ரீம் - 2 கப்


 

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு மிக்ஸியில் பால், பொடித்த சர்க்கரை, ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அடித்த பால், சர்க்கரை கலவையுடன் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்கு அடிக்கவும்.
பின்னர் இந்த கலவையை பாக்ஸில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் 4 மணி நேரம் வைக்கவும்.
இடையில் ஒவ்வொரு மணி நேரம் முடிவிலும் ஐஸ்க்ரீம் பாக்ஸை எடுத்து பீட்டரால் அடித்து மீண்டும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
4 மணிநேரம் கழித்து வெளியில் எடுத்து மீண்டும் பீட்டரால் அடித்து டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து நன்கு கலந்து மூடி 8 மணிநேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கவும்.
ஐஸ் க்ரீம் செட்டானதும் ஸ்கூப்பால் எடுத்து கோனில் வைத்து மேலே டூட்டி ஃப்ரூட்டி தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Wow sama kalakkal. Ice cream rani

Be simple be sample

Super

பார்க்கவே super aa iruku

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

Romba nallaq irukku revathy :) icecream expert.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Ice cream last picture very nice.

ஹ்ம்ம்ம் கலக்குரே ரே ரே ஐஸ்க்ரீமா வருது சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.