சேய் தாயானது

தாயும் சேயும்

அம்மா, அம்மா என்று முனங்கிக் கொண்டு இருந்தாள் அம்மா ஆனந்தி.அவளது ஏழு வயது மகள் அகிலா, அவள் அருகில் வந்து நின்றாள். அம்மாவைத் தொட்டுப் பார்த்தாள். தன் அப்பாவை அழைத்து, அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று ஆதங்கப் பட்டாள். அம்மாவிற்கு அன்று முழுவதும் ஓய்வு தேவை என்பதை புரிந்துக் கொண்டாள். அப்பாவுடன் சேர்ந்து தானும் சமையல் செய்யவேண்டும் என்று எண்ணினாள். அப்பாவிடம் ' டீலா' என்று கையை உயர்த்தினாள். அவள் தந்தையும் ஒகே, ஒகே என்றார்.

தாங்கள் செய்ய‌ வேண்டிய‌ முதல் வேலை, அம்மாவுக்கு சூடாக‌ ஒரு கப் காபி கொடுக்க‌ வேண்டும் என்று முடிவு எடுத்தனர். இருவரும் சேர்ந்து பில்டர் டிகாஷ்ன் போட்டனர். சிறிது நேரம் கழித்து பில்டரை திறந்துப் பார்த்தால், நோ டிகாஷன். அப்பாவின் முகத்தில் அசடு வழிந்தது.உடனே அகிலா, 'ஐயோ அப்பா' என்று தன் தலையில் தட்டிக்கொண்டு, பில்டரின் தலையையும் தட்டினாள். டிகஷான் இறங்கியது. தன் அம்மாவிற்கு, இதமான‌ சூட்டில் பதமான‌ சுவையில் காபியை கொடுத்தாள். தன் தாய்க்கு ஒரு தாயாக‌ , பாசமாக‌ தடவிக் கொடுத்தாள்.

அடுத்த‌ வேலை, பத்தியக் கஞ்சி தயார் செய்வது. குக்கரில் பருப்பு வைத்து குழைய‌ வேக‌ வைத்தார்கள். வேக‌ வைத்த பருப்பில் இருந்து தண்ணீரை வடிகட்டி அதில் புளியையும், தக்காளியையும் போட்டு நன்கு கரைத்தனர். மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசம் தயார் செய்தனர். குழைய‌ வேக‌ வைத்தப் பருப்பை நன்கு கடைந்து சிறிது உப்பும் நெய்யும் கலந்து வைத்தனர்.

அரிசியை மிக்ஸியில் இட்டு சிறு ரவையாக‌ உடைத்தனர். திட்டமான‌ அளவு தண்ணீர் கொதிக்க‌ வைத்து அரிசி ரவையைக் கொட்டி கட்டி தட்டாமல் கலக்கி, பதமாக‌ வேக‌ வைத்து கஞ்சி செய்தனர்.அதில் தேவையான‌ உப்பு சேர்த்தனர். சிறிது சீரகமும் சேர்த்து கலக்கினர். சமையல் முடிந்தது. அப்பா மகளைப் பார்த்து சிரிக்க‌, மகள் அப்பாவைப் பார்த்து சிரிக்க‌ ஒரே சந்தோஷம்தான்.

அகிலா, அம்மாவிற்க்கு சுவையான‌, பதமான‌ பத்தியக் கஞ்சியைக் கொடுத்து, கடைந்தபருப்புடன் தொட்டுக் கொண்டு குடிக்கச் சொன்னாள். அம்மா தன் வாய் கசப்பிற்க்கு கஞ்சியை குடிக்க‌ முடியாமல் வாய் குமட்டலுடன் முகத்தை சுளித்தாள். உடனே அகிலா, கஞ்சியுடன் ரசத்தைக் கலந்து, அன்பு மிரட்டலுடன் குடிக்க‌ வைத்தாள்.

அப்பா, தன் மனைவியையும், தன் மகளையும் அன்போடுப் பார்த்தான். ''தாய் சேயானதையும், சேய் தாயானதையும்''பார்த்தான். அந்த‌ விந்தையான‌ காட்சியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.

5
Average: 5 (2 votes)

Comments

அன்பு ரஜினி
அருமையான‌ கதை;).
ஏனோ, என் கண்ணில் நீர் ததும்புகின்றது.

நல்ல படைப்பு ரஜினிமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Gud one. Sometimes it happens. Ammaku kan operation pannapo naan samaichu kodumai panna niyabagam :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்,

\\\அருமையான‌ கதை,ஏனோ, என் கண்ணில் நீர் ததும்புகிறது.\\இது பெண் பிள்ளைகளிடம் உள்ள‌ பாசத்தின் வெளிப்பாடு.\\. என் பதிவை பாராட்டியதற்கு நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
//நல்ல‌ படைப்பு.\\\பாராட்டியதற்கு சந்தோஷம்.நன்றி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

hai
\\good one\\thanks to you,

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

கதை என்றாலும், நல்ல கருத்து ரஜினி மேடம் :)
எனக்கு இதைப் படிக்கையில் என் மகளின் நினைவு வருகிறது.
எனக்கு உடம்பிற்க்கு முடியவில்லை எனில் தாயைப் போன்றே என்னைப் பார்த்துக் கொள்வாள். நினைக்கும் போதே எனக்கும் கண் கலங்குது.