முருங்கைக்கீரை பூரி

தேதி: March 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கோதுமை மாவு - 2 கப்
வெள்ளை ரவை - 2 மேசைக்கரண்டி
முருங்கைக்கீரை - கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு
மாவு பிசைய கடலை எண்ணைய் - ஒரு மேசைக்கரண்டி
கடலை எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு (விருப்பமான எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளலாம்)


 

முருங்கைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் ரவை, உப்பு, சுத்தம் செய்த முருங்கைக்கீரை, அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
எல்லாவைற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும். சப்பாத்திக்கு பிசைவது போல மிகவும் இளக்கமாக பிசையாமல், சிறிது கெட்டியாக பிசையவும்.
இட்லி துணியை நீரில் நனைத்து பிசைந்த மாவினை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
பின்பு மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருண்டையை பூரி ப்ரஸ்ஸில் வைத்து ஒரு முறை மட்டுமே அழுத்தி எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான சத்து நிறைந்த முருங்கைக்கீரை பூரி தயார். பூரி மசாலுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

very super try pani pakren

Romba periya idaivelikku pin nalla kurippodu vandhirukinga... super :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பினை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
சிந்து செய்து பாருங்கள், மிக்க நன்றி :)
வனி மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருமையான‌ குறிப்பு. வித்யாசமான‌ சிந்தனை

எல்லாம் சில‌ காலம்.....