சூட்டு கொப்பளம்

என் குழந்தைக்கு ஒரு வயது ஆகின்றது.அவளுக்கு உட்காரும் இடத்தில் சூட்டு கொப்பளம் வந்துள்ளது. சீல் இருந்து டாக்டர் எடுத்து விட்டார் இருந்தாலும் அந்த இடம் கல் மாதிரி கெட்டியாக உள்ளது என்ன செய்வது எதற்காக இப்படி உள்ளது என்ன செய்ய வேண்டும் மிகவும் வேதனையாக உள்ளது எனக்கு பாப்பாக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் பாப்பா நார்மலாக இருக்கிராள். .அந்த இடத்தை தொட்டால் வலி இருகிரது அந்த கல் மாதிரி இருக்கும் இடத்தை எப்படி சரி செய்ய வேண்டும்.உடனே எனக்கு தீர்வை சொல்லுங்கள் தோழிகளே

மஞ்சள் தூள் + அரிசிமாவு இரண்டையும் தண்ணீர் கலந்து கொதிக்க‌ வைத்து முடிந்தால் நல்ல‌ எண்ணை கலந்து (அவரை இலை கிடைத்தால்
அதில் அப்பினால் நல்லது) பஞ்சில் அல்லது துணியில் அப்பி கட்டி வந்த‌
இடத்தில் மேல் வைத்து கீழே விழாமல் இருக்க‌ பேன்டேஜ் போட்டு ஒட்டி
விடவும். மறுபடியும் கட்டி பழுத்து சீழ் வைத்து உடையும். பயம் வேண்டாம்.
அப்போது தான் கல் மாதிரி உள்ள‌ கட்டி கரையும். அது கரையாத‌ வரை
வலி இருக்கத்தான் செய்யும். கட்டியில் உள்ள‌ முளை வெளியாகும்.
எப்போதும் கட்டி வந்தால் கட்டி முழுமையாக பழுத்து உடையும் வரை
பொறுமை வேண்டும். உடனே ஊசி போட்டு விட்டால் அது அமுங்கிப்போய்
அந்த‌ இடம் கல் போல் ஆவது மட்டுமல்ல‌ இன்னோர் இடத்தில் கட்டி வரும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேடம் வேனல் கட்டி சூட்டு கொப்பளம் இரண்டுமே ஒன்றா. வேனல் கட்டி என்று கண்டுபிடிப்பது எப்படி மேடம். இது உடம்பில் எங்கனாலும் வருமா? அல்லது குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வருமா? மேடம். எனக்கு தெளிவாக சொல்லுங்க. என் பையனுக்கு இடது காதின் பின்புறம் கட்டி இருக்கு. எறும்பு கடித்தது போன்று இருந்து. காதை சுற்றி வீக்கம் அதிகமானது. அந்த வீக்கம் குறைய களிம்பு தந்ததாங்க அதை போட்டதும் வீக்கம் குறைந்த து முமுவதும் குறையல.

கட்டி இருந்தால் காய்ச்சல் வருமா மேடம் என் குழந்தைக்கு காய்ச்சல் இருக்கு வயது21/4

வணக்கம்.எனக்கு முகத்தில் நிறைய சூட்டு கொப்பளம் வந்துள்ளது.வெள்ளையா சின்ன சின்ன கட்டி மாதிரி. கொப்பளத்தை சுற்றி சிவந்து உள்ளது கொஞ்சம் வலிக்குது. வீட்டிலேயே செய்ய கூடிய மருந்து இருந்தா சொல்லுங்க pls

￰யாதுமானவன் என்னவன்

சூட்டு கொப்பளம் ரொம்ப அதிகமா வருது.என்ன பண்ணலாம் தெரிஞ்சவங்க சொல்லுங்க pls pls

￰யாதுமானவன் என்னவன்

இது குழந்தை வளர்ப்பு தொடர்பான இழை சசி.
¬¬¬¬¬¬¬

உங்களுக்கு உள்ளது சூட்டுக்கொப்புளம் தான் என்று நிச்சயம் தெரிந்தால் இளநீர்த் தண்ணீர் தடவலாம். லக்டோ கலமைன் பூசினால் காயும் ஆனால் கலமைன் அடையாளத்தை நீக்குவது சிலசமயம் கஷ்டமாக இருக்கும்.

இவற்றைப் படித்துப் பாருங்கள்.
www.arusuvai.com/tamil/node/29529
www.arusuvai.com/tamil/node/15448
www.arusuvai.com/tamil/node/21108
www.arusuvai.com/tamil/node/4965
www.arusuvai.com/tamil/node/8080
www.arusuvai.com/tamil/node/28169
www.arusuvai.com/tamil/node/32856
www.arusuvai.com/tamil/node/18467
www.arusuvai.com/tamil/node/18755
www.arusuvai.com/tamil/node/23207

‍- இமா க்றிஸ்

1வயது பெண் குழந்தை.இதே problem தான்.கொப்பளம் வந்துச்சு. g.h க்கு போனேன்.doctor கீறிவிட்டு சீல் எடுத்தார்.அப்பறம் skin வந்துறுச்சு.!pain எல்லாம் இல்ல mam.ஆனா கல் மாதிரி இருக்கு.என்ன பண்ணலாம்.pls சொல்லுங்க mam.

எனது மகனுக்கு 3 வயது ஆகிறது. அவனுக்கு முதலில் கையில் மட்டும் சிறு சிறு கொப்பளங்கள் வந்தது 3 நாட்கள் கழித்து உடல் முழுவதும் வந்து விட்டதுஅவனுக்குஅரிப்பு மட்டும் உள்ளது இதற்கு மருந்து ஏதேனும் சொல்லுங்கள்

நான் கட்டுமான நிறுவனத்தில் வேளை பார்த்து வருகிறேன். எனக்கு நான்கு வருடமாக உட்காரும் இடத்தில் சூட்டு கட்டி இருக்கிரது. அது எனக்கு அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து வந்து போகிறது. அதே சமயம் நான் இரவு நேரம் பணி புரியும் போது தூங்க முடியாது. இரவு முழுவதும் விழித்தே இருப்பேன். இதனால் எனது உடல் மிகவும் சூடாக இருக்கும். அந்த சமயமும் எனக்கு அந்த இடத்தில் கட்டி வலித்து சலம் பிடிக்கிறது. அதிகமாக வழியும் வந்து பிறகு அந்த சூட்டு கொப்பளம் உடைகிறது. ஆனால் அது மீண்டும் மீண்டும் அதே போல் எனக்கு நான்கு வருடமா தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிரது. எனக்கு இது நிலையான ஒரு தீர்வை சொல்லுங்கள் இதை எப்படி குணப்படுத்துவது என்று

நீங்களாகவே இதுதான் என்று முடிவு செய்து இத்தனை வருடங்கள் விட்டிருக்கக் கூடாது. (ஏதாவது செய்துதான் இருப்பீர்கள். இனிமேல்தான் வந்து சொல்லுவீர்கள் என்று நினைக்கிறேன்.) மருத்துவரிடம் கலந்தாலோசிப்பதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்