சப்ஜி

தேதி: March 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மொச்சைக்கொட்டை - 50 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கத்தரிக்காய் - 100 கிராம்
இலவங்கம் - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக் கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கசகசா - கால் மேசைக்கரண்டி
சோம்பு - கால் மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி


 

மொச்சைக்கொட்டையை ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவல், கசகசா, சோம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து வைக்கவும் .
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், இலவங்கம், பிரிஞ்சி இலை, வெங்காயம், கத்தரிக்காய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
அதனுடன் தக்காளி மற்றும் மொச்சைக்கொட்டையை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு,தேங்காய் விழுது சேர்த்து வேக விடவும்.
எல்லாம் சேர்ந்து வெந்ததும் இறக்கவும். சுவையான சப்ஜி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்