தக்காளி ஆம்லட்

தேதி: March 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கடலை மாவு - 100 கிராம்
மைதா - 50 கிராம்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
ரவை - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
வெங்காயம் - பாதி
இஞ்சி - கால் அங்குல துண்டு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஸ்பினாச் - ஒரு கைப்பிடி


 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா, மிளகாய்த் தூள், பேக்கிங் சோடா, ரவை, பெருங்காயம் , உப்பு ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, ஸ்பினாச் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை அனைத்தையும் மாவில் போட்டு கலந்து விடவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை தோசையாக வார்க்கவும். மேலே சிறிது எண்ணெய் விட்டு இரண்டும் பக்கமும் பதமாக வெந்ததும் எடுக்கவும்.
சுவையான தக்காளி ஆம்லட் தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கிட்சன் குயின். எல்லாமே சூப்பரா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

கிச்சன் குயின் கவிதாவுக்கு வாழ்த்துக்கள், எல்லா குறிப்புகளும் சூப்பராருக்கு, வெரைட்டியா இருக்கு எல்லாமே.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

Vidhiyasamana kuripugal thervu seydhu azagaa seydhu kaati irukinga... :) vaazthukkal.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super