வெள்ளரிக்காய் பச்சடி

தேதி: March 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தீபாபிரகாஷ் அவர்களின் வெள்ளரிக்காய் பச்சடி குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தீபா அவர்களுக்கு நன்றிகள்.

 

வெள்ளரிக்காய் - ஒன்று (பெரியது)
வெங்காயம் - ஒன்று
கெட்டி தயிர் - ஒரு கப்
கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 3 மேசைகரண்டி
பச்சை மிளகாய் - 2
உடைத்த கடலை / பொட்டுக்கடலை - ஒரு மேசைகரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தாளிக்க:
கடுகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய்


 

தேங்காய், சீரகம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தயிரை நன்கு கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்
வெங்காயம், உப்பு, அரைத்த தேங்காய் விழுது, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய தேங்காய் கலவையுடன் சேர்க்கவும்.
இந்த கலவையில் தயிர் சேர்த்து கலந்து விடவும்.
சுவையான வெள்ளரிக்காய் பச்சடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்