தேதி: March 30, 2015
ஓவல் வடிவத்தில் ஒரு கண்ணாடி துண்டு
ஓவல் வடிவத்தில் பெரிய அட்டை
சிறிய ஸ்பூன் - 2 பாக்கெட்
ஃபெவிக்கால்
ப்ரஷ்
பெயிண்ட்
அட்டை மற்றும் கண்ணாடி துண்டினை ஓவல் வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும். ஸ்பூனின் தலை பகுதியை மட்டும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அட்டையின் ஓரத்தில் ஃபெவிக்கால் தடவி ஸ்பூனை ஒன்றன்பின் ஒன்றாக ஒட்டிக் கொண்டே வரவும். படிய ஒட்டாமல் சற்று தூக்கினாற் போல் ஒட்டவும்.

ஒரு சுற்று ஸ்பூனை ஒட்டி முடித்ததும், கண்ணாடியை நடுவில் வைத்து ஓரத்தை வரைந்துக் கொள்ளவும். கண்ணாடியின் அளவை வரைந்துக் கொண்டால் அதற்கு ஏற்றாற்போல் ஸ்பூனை ஒட்டிக் கொள்ளலாம்.

பின்னர் இரண்டாவது சுற்று ஸ்பூனை ஒட்டவும். ஒட்டும் போது முன்பு ஒட்டிய சுற்றில் 2 ஸ்பூனிற்கு நடுவில் ஒரு ஸ்பூனை ஒட்டவும்.

அதைப் போல ஐந்து சுற்றுகள் வரை பெவிக்கால் தடவி ஸ்பூனை ஒட்டிக் கொண்டே வரவும்.

அதன் பின்னர் ஒட்டி வைத்திருக்கும் ஸ்பூன் முழுவதும் விரும்பிய நிறத்தில் பெயிண்ட் செய்யவும்.

பெயிண்ட் காய்ந்ததும் கடைசியாக கண்ணாடியை நடுவில் வைத்து ஒட்டி முடிக்கவும். ஓவல் வடிவிலான அழகிய நிலைக்கண்ணாடி தயார். அட்டை மற்றும் கண்ணாடியின் வடிவங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல வட்டமாகவோ, ஓவல் வடிவிலோ, கட்டமாகவோ எடுத்துக் கொள்ளவும்.

Comments
கண்ணாடி முன்னாடி
அழகோ அழகு செண்பகா. நிறமும் பளிச்சென்று இருக்கிறது. பிடித்திருக்கிறது.
இந்தக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் எப்படியிருக்கும்! ஒரு சின்னக் கற்பனை. ஒரு பெரிய ஆரஞ்சுச் சூரியகாந்தி மலரின் மத்தியாக என் முகம்! :-) அழகா இருக்கும்ல! :-) செய்து வைக்க ஆசையா இருக்கு. ஆனால் இங்கு மாட்டத்தான் இடமில்லை. ;(
- இமா க்றிஸ்
senbaga & imma
Idhula imma mugam paarthaa puuvukkul puu pola irukkum ;) naan paarthaa puuvukkul buugambam pola irukkum ;) azagaai irukku senbaga.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
KAIVEEINAI
SUPER