சாதம் அடி பிடிப்பது

Rice Cookerல் (Electric Rice Cooker) தண்ணீர் அளவு சரியாக ஊற்றியும் சாதம் அடி பிடிக்கிறது. தீர்வு சொல்லுங்கள்.

டியர் வினோதா, சாதம் அடிபிடிக்காமலிருக்க அரிசியை கழுவி, குறைந்தது அரைமணி நேரம் ஊறவைத்து தண்ணீரை சொட்ட வடித்து விட்டு அதன் பிறகு வடித்த தண்ணீரை அளந்து ஊற்றி வேகவிட்டு பாருங்கள்.
அல்லது நீங்கள் எப்பொழுதும் வைக்கும் தண்ணீரின் அளவை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி பார்த்தீர்களானால் சரியான அளவு தெரிந்து விடும்.பிறகு அடிபிடிக்க வாய்ப்பிருக்காது.
அல்லது குக்கர் warm position வந்தவுடன் அதிலுள்ள பாத்திரத்தை உடனே அகற்றி விடுங்கள். மூடியே உடனே திறக்காமல் பத்து நிமிடம் கழித்து திறக்கவும். இதில் ஏதாவது ஒரு முறையாவது தங்களுக்கு உபயோகப்படும் என்று நினைக்கின்றேன். நன்றி.

இட்லி தட்டுக்கு எண்ணெய் தடவுவது போல குக்கரில் உள்ள பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்துவிட்டு பின் கழுவிய அரிசியை தண்ணிருடன் அதில் போட்டு வேகவைத்து பார்க்கவும். நான்ஸ்டிக் குக்கிங் ஸ்பிரே(Non-Stick Cooking Spray) உபயோக்கித்து பாக்கவும்.

நன்றி...

நீங்கள் சொன்ன முதல் முறை OK ஆகிவிட்டது. மிக்க நன்றி.

மிக்க நன்றி Mrs.VaniRamesh.

மேலும் சில பதிவுகள்