பனீர் குருமா

தேதி: April 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

பால் - ஒரு லிட்டர்
எலுமிச்சம் பழம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய்த் தூள்- ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
கசகசா - 2 தேக்கரண்டி
மல்லித் தழை - ஒரு கொத்து
முந்திரி - 10
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பொரிகடலை மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் தயிர், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துத் திரிக்கவும்.
ஒரு துணியை வைத்து வடிகட்டி தண்ணீர் முழுவதுமாக வடிந்ததும் கெட்டியான பகுதியை எடுத்துக் கொள்ளவும். பின்னர் பனீரை ஒரு பலகையில் வைத்து சதுரங்களாக வெட்டவும்
வெட்டிய பனீர் சதுரங்களை எண்ணெயில் சிவக்க பொரித்து எடுத்து வைக்கவும். தேங்காயை துருவி கசகசா சேர்த்து அரைத்து, பிழிந்து முதல் பால் மற்றும் இரண்டாம் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். பொரிகடலை மாவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்துத் தனியாக கரைத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலம் ஆகியவற்றை நெய்யில் வறுத்து மிக்ஸியில் போட்டு தூளாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம் தாளித்து அரைத்த மசாலா விழுதை போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து சிவக்க வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் உருளைக்கிழங்கை சதுரத் துண்டுகளாக நறுக்கி அதனுடன் சேர்த்து வதக்கவும்.
இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி கரம் மசாலா பொடி, மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வேக விடவும்.
அனைத்தும் சேர்ந்து வெந்த பிறகு பால், பொரிகடலை கலவையை ஊற்றவும். அதனுடன் முந்திரிப்பருப்பு மற்றும் பொரித்த பனீர் இரண்டையும் குருமாவில் போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வைத்திருக்கவும்.
பின்னர் இறக்கி வைத்து நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும். சுவையான பனீர் குருமா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Looking nice !!!

not yet tried in this method will try it this weak end :)

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar