தேதி: April 3, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. டி.எம். ராணி அவர்களின் நவரத்ன வடை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ராணி அவர்களுக்கு நன்றிகள்.
உளுந்து - 100 கிராம்
பயறு - 100 கிராம்
கொண்டைக்கடலை - 100 கிராம்
பட்டாணி - 100 கிராம்
காராமணி - 100 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
வெங்காயம் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 7
இஞ்சி - ஒரு துண்டு
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
முதல் நாளே அரிசியை தனியாகவும், மற்ற தானியங்களை தனியாகவும் ஊற வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மறுநாள் காலை அல்லது தேவையான போது தானியங்களையும், அரிசியையும் தனித்தனியாக கழுவி பின்பு கலந்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தானியங்களைத் தோலுடன் அரைக்கவும்.

பின்பு அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

கலந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை வடை போல தட்டி எண்ணெயில் போட்டு நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு, சிவந்ததும் எடுத்து விடவும்.

சுவையான நவரத்ன வடை தயார்.
