உம்ம் அலி

தேதி: April 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தளிகா அவர்களின் உம்ம் அலி குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தளிகா அவர்களுக்கு நன்றிகள்.

 

ஃபுரோசென் பஃப் பேஸ்ட்ரி (ஷீட்ஸ்) - 10
பசும்பால் - 2 கப்
சர்க்கரை - அரை கப்
கன்டெண்ஸ்ட் மில்க் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய நட்ஸ் (ஆல்மன்ட், பிஸ்தா) - 5 தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் (இல்லையென்றால் தவிர்க்கலாம்) - 2 சொட்டு


 

பஃப் பேஸ்ட்ரியை அவன் ட்ரேயில் பரப்பி வைத்து 20 லிருந்து 30 நிமிடங்கள் வரை (அவனில் சூட்டைப் பொறுத்து) நல்ல மொறுமொறுப்பாக பேக் செய்து கொள்ளவும்.
பிறகு அதனை சின்ன சின்னதாக பிய்த்து வைக்கவும்.
பாலை கொதிக்க வைத்து, சர்க்கரை, வெண்ணெய் சேர்க்கவும். தீயை அணைத்து இறக்கி வைத்து கன்டெண்ஸ்ட் மில்க், வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
ஒரு பெளலில் பஃப் பேஸ்ட்ரியை நிரப்பி வைக்கவும். அதில் பாதி அளவு பால் சேர்த்து நட்ஸ் தூவி பேஸ்ட்ரியை பாலில் முழுக்கும்படி அமுக்கி விடவும்.
பெளலை அவனில் மேலும் 10 நிமிடங்கள் மேல் பாகம் சிவக்கும்படி வைக்கவும். இதனை சூடாகப் பரிமாறவும்

இரண்டாவது முறை அவனில் வைப்பது பார்க்க ஒரு ஃபைனல் ஃபினிஷிங்காக மட்டும் தான். தேவையில்லையென்றால் அதனை தவிர்த்து அப்படியே சூடாக பரிமாறலாம்.

இனிப்பை தேவைக்கு கூட்டியோ குறைத்தோ கொள்ளவும். குழந்தைகள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவர்.

மொத்த பேஸ்ட்ரியையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி உம்ம் அலி செய்யாமல் ஒவ்வொருவருக்கும் தேவையான அளவை மட்டும் பெளலில் நிரப்பி 4, 5 பெளலில் செய்து அவனில் வைத்து அப்படியே பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்ங்க. பார்ட்டிக்கு நல்ல சாய்ஸ் :)