குஸ் குஸ்

தேதி: April 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

குஸ் குஸ் - 2 கப்
பட்டர் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
குடைமிளகாய் - ஒன்று
கேரட் - ஒன்று
பீன்ஸ் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அள்வு
சுடுதண்ணீர் - 2 கப்


 

குஸ்குஸுடன் பட்டர், ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் அதில் நன்கு கொதித்த சுடு தண்ணீரை ஊற்றி மூடி 5 நிமிடம் வைத்திருக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கிளறி விடவும். கிளறாமல் விட்டால் குழைந்து விடும்.
குடைமிளகாய், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், வெங்காயம் எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்
அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய், பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் சேர்ந்து நன்கு வதங்கியதும் வெந்த குஸ் குஸ் சேர்த்து கிளறவும்.
சுவையான குஸ் குஸ் ரெடி. சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம்.

விரும்பினால் பொரித்த கோழித்துண்டுகள், இறால் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சம சூப்பர் :) கலர்ஃபுல் படம்... பார்க்கவே செய்து சாப்பிடணும் போல இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலர்ஃபுல் டிஷ் பார்க்கவே சாப்பிடதோனுது குஸ் குஸ் பேஷ் பேஷ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.