தக்காளி வடிவ பின் குஷன்

தேதி: April 6, 2015

5
Average: 4.8 (6 votes)

 

பனியன் துணி
பட்டன்
ஊசி, நூல்
பஞ்சு

 

பனியன் துணியில் 3 இன்ச் விட்டமுள்ள இரண்டு வட்டத் துண்டுகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு வட்டத் துண்டுகளின் நல்ல பக்கம் உள்ளே இருக்கும்படி சேர்த்து வைத்து ஓரங்களில் சுற்றிலும் தைக்கவும். முழுவதுமாக தைக்காமல் கடைசியில் முடிக்கும் போது சிறிது இடைவெளி விடவும்.
வட்டமாக தைத்த துணியை இடைவெளியின் வழியாக பிரட்டி விடவும்.
அதன் பிறகு அந்த இடைவெளியின் வழியாக ரெக்ரான் அல்லது காட்டனை உள்ளே திணித்து இடைவெளியை தைத்து விடவும்.
குஷனின் அடி வழியாக ஊசியை நுழைத்து படத்தில் காட்டியபடி நன்கு இறுக்கமாக தைக்கவும்.
இதை போல குஷனை சுற்றிலும் இறுக்கமாக தைத்துக் கொண்டே வந்தால் தக்காளியை போன்ற வடிவம் கிடைக்கும். கடைசியாக அடியில் நன்கு இறுக்கமாக முடிச்சு போட்டு முடித்து விடவும்.
குஷன் முழுவதுமாக தைத்து முடிந்ததும் நடுவில் பட்டன் வைத்து தைக்கவும் அல்லது ஒட்டி விடவும்.
தையல் மெஷின் டேபிளை அலங்கரிக்க அழகிய தக்காளி வடிவிலான பின்குஷன் ரெடி
பின்குஷன் செய்தபின் ஸ்டார் வடிவில் ஒரு பச்சை நிற துணியை வெட்டி நடுவில் சிறு ஓட்டை போட்டு அதை பட்டனின் வழியாக உள்ளே பொருந்துபடி மாட்டிவிட்டால் தக்காளிக்கு க்ரீடம் வைத்தது போல அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

Kushan parthathum neegathanu ninaichaen. Super Niki. Kailaye thaikalamo

Be simple be sample

Romba super :) cushion enralae ninaivuku varuvadhu ninga dhaan.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ரேவா
கையாலே தைக்கலாம் பா.
ரெண்டு துணியையும் சேர்த்து தைச்சுட்டா அப்புறம் நடுவிலே குத்தி குத்தி இறுக்கிக் கட்டினா ரெடி. அஞ்சு நிமிஷம் போதும்.

அன்பு வனி
குஷன் என்றதும் நானே நினைவுக்கு வருகிறேனா?
அப்படீன்னா இன்னும் குஷன் செய்ய‌ தோணுதே:)

அழகா இருக்கு நிகிலா. புக்மார்க் பண்ணி வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

பாராட்டுக்கு நன்றி இமா:)

epdi mam ipdi? awesome. pindrenga ponga naan try pannitu sollren mam.. idha make panna eager aa irukku. thank u so much.......

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

Hi sis, can anybody tell me how to book mark a page in arusuvai?

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

பாராட்டுக்குரியது மிக்க நன்றி அம்மு. செய்து பார்த்து அவசியம் சொல்லணும்

நீங்க லாகின் செய்து உள்ளே வந்ததும் கைவினை குறிப்புகளின் அடியில் கருத்து தெரிவிக்க என்பதன் அருகில் புக்மார்க் இருக்கு பாருங்க.