குழந்தை அடி வாங்குறான்

குழந்தை அடி வாங்குறான் பாவம் எனக்கு ரொம்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு . எங்கு இப்ப எல்லாம் ரொம்ப கோவம் வருது எஇன் என்று தய்ரிய வில்லை . ஏன் குழந்தைக்கு 1 வயசு 7 மாதம் ஆகிறது ரொம்ப அடம் பண்றான் சாப்டறத துபுறான் ரொம்ப எனக்கு கோவம் வந்து அடித்து விட்டேன் . இனொரு பிரச்னை என்னை வென்றால் . ஏன் மாமியார்தான் ஏன் குழந்தை கீழே விழுந்து விட்டால் ரொம்ப கத்துறாங்க அதை பார்த்து இன்னும் யானைக்கு கோவம் வந்து அவனை அடித்து விடுகிறேன் . நான் என்ன பண்றது என்று எனக்கு புரிய வில்லை மத்தவங்க மேல கோவாம் பட்டு ஏன் குழந்த அடி வாங்குறான் . பிளஸ் யாராவது எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்க ப

Kulanthaya adikathanga.pavam.avan ena panuvam.avanuku house kula vaithu sapda vaikama houseku veliya car,birds elam kat sapadu kodunga.adikathanga sister

Life Is Easy When U "Accept All"

It happens. Innaiku avanga appa mela irundha kovathula en pillaigalukku vizundhudhu. Perumaiku sollala... adichutu aza dhaan seyyaren. Aanaa namma iyalaamai... vera enna panna. Pasanga kitta nerungum bodhu mathavangalai ninaika kudaadhu... andha pinju mugathai mattum paarthaa kobam poyidum. Kobam varra neram kuzandhaiyai vittu thaniyaa engaavadhu utkaarunga. Manasu andha nimisha kobathula thaan pillaigalidam paayum... appo avanga kitta naama polanaa kobamum poyidum, porumai vandhudum. Yoga edhachum kathukanga. Meditation yoga idhu pola kobathai kattuppaduthum. Enakku adhuku poga kuda neramilla... ungaluku irundhaa try pannunga. Veetil kannil padumbadi puu adukki vaikkalaam, pidicha isaiyai kuraivana saththathil oda vidalaam. Idhellaam manasai eppavum amaidhiyaa vechukka udhavum.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு பதில் போட இருவருக்கும் ரொம்ப நன்றி இப்ப மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு. எனக்கு கொஞ்சம் கூட வீட்டில் நிமதி இல்லை ப . ஏன் மாமியார் எதாவுது சொல்லிகிட்டை இருக்கிறார்கள் . அதுவே யானைக்கு பாதி கூவம் வருது

மாமியார் கோவத்தை அவங்களிடம் பேசி புரிய‌ வைங்க‌... பிள்ளைய‌ அடிக்காதீங்க‌ சின்ன‌ பிள்ளை ஏங்கிடுவான். சாப்பாடு பிடிக்கலைன்னா அவனையே எடுத்து விளையாடி சாப்பிட‌ வைங்க‌, என் பொண்ணும் அப்படித்தான் சாப்பிடாம‌ துப்புவா இப்போ அவளுக்கு என்ன‌ பிடிக்குதுன்னு பார்த்து தனியா சமைக்கிறேன். வெறும் ஆம்லெட் போட்டு குடுங்க‌ பழம் குடுங்க‌, கேரட் அரிசி கீரை பூண்டு தக்காளி சின்ன‌ வெங்காயம் நெய் விட்டு வேகவைத்து குடுத்து பாருங்க‌...

love is god

கோபம் - இது உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இருக்கிற ஒரு பிரச்சனை தான் தோழி. நீங்க மட்டுமில்ல, இந்த உலகத்துல எல்லோருமே ஏதாவது ஒரு விதத்துல பிரச்சனைகளோடத்தான் வாழ்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
முதல்ல ...... உங்களுக்கு அதிக கோபம் வருவது, மாமியார் ஏதாவது சொல்றாங்க.... என்கிற நினைப்பையெல்லாம் தூக்கி தூரப் போட்டுடுங்க. நீங்க இதையெல்லாம் நினைத்தாலே உங்க மனதை மேலும் அதிக பலவீனமாக்கும்.
முடிந்தவரை குழந்தையை கீழே விழாதவாறு பாதுகாப்பான இடத்தில் விளையாட விடுங்கள். சில நேரங்களில் நம்முடைய கவனக் குறைவும் இதற்க்கு காரணமாகிறது. நீங்க வேலையாயிருக்கும் போது குழந்தையை உங்கள் அத்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். \\ஏன் மாமியார் எதாவுது சொல்லிகிட்டை இருக்கிறார்கள் // எப்போதும் இப்படித்தானா ??!! அவங்க நம்மை விடப் பெரியவங்க, அநாவசியமா திட்டக் கூடாதுன்னு நாம சொல்லித்தான் அவங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனால் உங்களுக்கு மன உளைச்சலை கொடுத்து அதினால் குழந்தை பாதிப்புக்குள்ளாகுவதை கேட்கையில் தான் வருத்தமாக உள்ளது. உங்க அத்தை கேட்கிறவங்களா இருந்தா மெதுவாக சொல்லிப் பாருங்க. கேட்கவில்லை என்றால் கோபப் பட்டு உங்க ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். நாள்பட்ட மன உளைச்சல் பல நோய்கள் வர காரணமாகிறது. ஒன்று செய்யலாம், உங்க மாமியார் பற்றித்தான் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்குமே, அத்தை என்றாலே ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பார்கள் என்பதால் உங்கள் காதுகளை மட்டும் எப்போதும் அத்தையிடமிருந்து வரும் வார்த்தைகளுக்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேச்சு என்றால் காதுகளுக்குள் மட்டும் செல்லட்டும். மனதிற்க்குள் வேண்டாம். உங்க மனசை Made up பண்ணிக் கொள்ளுங்கள் என்றுதான் குறிப்பிடுகிறேன். அப்புறம் பாருங்க அவங்க என்ன சொன்னாலும் இவங்க இப்படித்தான்.. இதுக்குப் போயி நான் ஏன் கவலைப் படணும் என்றாகி விடும் :) கோபத்தை கட்டுப் படுத்த மேலே தோழிகள் சொன்னவற்றை கடை பிடிங்க.

குழந்தையிடம் கோபப் படுகையில், கோபம் தணிந்ததும் குழந்தையை அணைத்துக் கொண்டு அவனுக்குப் புரியும் வகையில் நீங்கள் செய்த்தது தவறென்பதை சொல்லி விட வேண்டும் தோழி. இது மிக மிக முக்கியம். இதுவே நாம் பேசுவது புரிந்து கொள்ளும் வயதில் உள்ள குழந்தைகள் எனில் அவர்களை அழைத்து அவங்க கண்களைப் பார்த்து அம்மா தெரியாமல் அடித்து விட்டேன் கண்ணே, சாரிடா , இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று சொல்லி அவர்களை அணைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். ஏனென்றால் குழந்தைகள் கண்களாலும், மனதிலும் எதை உட்கிரகிக்கிறார்களோ அவைகளைத்தான் வெளிப் படுத்துவார்கள்.

இந்த (Toddler) வயதில் குழந்தைகள் பெரும்பாலும் finger foods தான் விரும்புவார்கள். தோசை மற்றும் அடைக்குள் தேன் தடவி குழல் போன்று சுருட்டி அவன் கையில் கொடுத்து விளையாட்டினூடே சாப்பிட வையுங்கள். எந்த உணவாயினும் ஸ்நாக் போன்று குழந்தையின் கையில் வைத்துக் கொண்டு சாப்பிட வையுங்கள். நீங்க வைக்கும் குழம்பு, பொரியல் போன்றவற்றில் உள்ல காய்கறிகளை மசித்து அல்லது மிக்சியில் ஒரு சுற்ரு விட்டு சப்பாத்தி மாவுடன் பிசைந்து பட்டர் தடவி ரோட்டி, பராட்டா, பூரி போன்றி செய்து சிறிய வடிவுகளில் வெட்டியோ , மடித்தோ கொடுக்கலாம்.

நான் மாமியார் வீட்டில் இருக்கிறேன்.இங்க இருக்கும் பிள்ளைகளை பார்த்து நிறைய கத்துக்கிட்டான்.மண் திண்ணுவது, எல்லாரையும் அடிப்பது, கல்லால் அடிப்பது,உதைப்பது,மண்ணில் விளையாடுவது இப்படிலாம் செய்கிறான் நான் எவ்வளவுசொல்லியும் கேட்க மாட்டிகிறான் அதனால்அடித்துவிடுகிறேன்..கவலையாகஇருக்கு.நானேவீட்டில்சமையல் வேலையும் பார்த்து ரெண்டு பசங்களையும் பார்த்துகனும்.மாமனாருக்கு ஆபரேஷன்பண்ணிருக்கு அவருக்கும் எல்லாம் செய்து கொடுக்கனும்.மாமியாரை பார்த்துக்க சொன்னால் அந்த பசங்களோட விட்டு அவுங்க பண்றதை செய்கிறான்.

என்ன பண்ணுவது என்று தெரியவில்லை நல்ல பையனாக இருந்தான்.. இப்பொழுது இப்படி செய்கிறான்...

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்