அவள் சித்திரைத் திருநாளுக்காக வீட்டை களீன் செய்ய ஆரம்பித்தாள்.
ஒவ்வொன்றாக க்ளீன் செய்தபின் வேண்டாத துணிகளை பெரிய பை ஒன்றில் எடுத்து வைத்தாள். அவற்றை அயர்ன் செய்து உபயோகிக்கும் யாருக்காவது கொடுப்பது அவள் வழக்கம்.
அவற்றினூடே இருந்த அழகிய சிவந்த நிறமுடைய டி ஷர்ட் ஒன்று கண்ணைப் பறித்தது. அதன் நடுவில் இருந்த ஸ்மைலி அவளைப் பார்த்து கண்சிமிட்டி 'நான் உனக்கு வேண்டாமா' என்று பார்வையாலேயே கேட்டது. அதை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொண்டாள்.
கண்கவரும் கலர்...
மனம் மயக்கும் டிசைன்...
என்ன செய்யலாம் இதை? யோசித்தாள்.
டோட் பேக் செய்யலாமா? ரெண்டு ஸ்லீவையும் வெட்டி எடுத்து விட்டு அடியில் ஜாயின் பண்ணினால் பை ரெடியாகி விடுமே.
ஊஹூம். வேண்டாம். பை ரெடியாகும். ஆனால், அதை உபயோகிக்க யாரும் ரெடியாக மாட்டாங்க.
டி ஷர்ட்டை தரையில் விரித்து வைத்தபடி கற்பனையை சிதற விட்டாள். சோபாவில் இருந்த குஷன் கண்ணில் பட்டது.
ம்...ஐடியா.....இதிலே ஒரு வட்ட குஷன் செய்யலாமே. ஏற்கனவே குஷன் எக்ஸ்பர்ட்னு பேரு வேறு இருக்கே. விடலாமா?
ஸ்மைலியைச் சுற்றி சாக்பீசால் ஒரு வட்டம் வரைந்தாள். கனகச்சிதமாக வெட்டினாள். இப்போது ஸ்மைலி மட்டும் அவள் கைகளில் தவழ்ந்தது.
அறுசுவை கைவினைக் குறிப்பில் உள்ளபடியே அழகான குஷன், ஊசி நூலுக்கு வேலை இன்றி பத்தே நிமிடத்தில் ரெடியானது.
லின்க் இங்கே
http://www.arusuvai.com/tamil/node/26558
ஸ்மைலி இப்போது ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி முகம் மலர சிரிப்பது போல் தோன்றியது. அவள் மனமும் மகிழ்ந்தது. கட்டிலில் வைத்து அழகு பார்த்தாள். ஒரு ஃபோட்டோவும் எடுத்தாயிற்று.
நம் தயாரிப்பு நமக்கு அழகாகத் தான் தோன்றும். பார்க்கும் எல்லோரும் கருத்துச் சொல்ல வேண்டாமா? (ஏனுங்க படிக்கிற உங்களையும் சேர்த்துத் தான் சொல்றேனுங்க)
அன்று முதலில் வீட்டுக்கு வந்தது அவள் கணவன் தான்.
ஹாலினுள் நுழைந்ததும் குஷனை எடுத்துக் காட்டினாள்.
"நல்லா இருக்கே..எப்போ வாங்கினோம்?"
"ஊஹூம். வாங்கினதில்லை. நானே செய்ததாக்கும்." குரலில் பெருமையுடன்.
"ம்... இதுக்கெல்லாம் நேரமிருக்கும். ஆபீசுக்கு வர நேரமிருக்காது." சொல்லிக் கொண்டே டைனிங் ஹாலுக்கு விரைந்தான்.
அவளோ விடுவதாக இல்லை. இரண்டடி முன்னால் வந்து," எப்படி இருக்குன்னு சொல்லலியே?"
"நல்லாத் தான் இருக்குன்னு முதல்லேயே சொன்னேனே" புருவத்தை உயர்த்தியபடி சிறிய ஸ்மைலுடன் பெட்ரூமினுள் நுழைந்து விட்டான்.
அவனுக்கு இதில் எல்லாம் ஈடுபாடு கிடையாது என்பது அவள் அறிந்ததே. சரியாகக் கவனிக்காமலேயே ஆளை விட்டால் போதும்னு பாராட்டும் ரகம். ஆனாலும் அவளும் விடுவதில்லை. எல்லாம் ஒரு ஆர்வம் தான்.
அடுத்து வந்தது செல்ல மகன்.
"ஆஹா... சூப்பர்மா.... ரொம்ப நல்லா இருக்கும்மா...எப்படிம்மா..... இப்படில்லாம்......"
மனம் திறந்து பாராட்டினான். கையில் எடுத்து சோபாவில் வைத்து அழகு பார்த்தான்.
"தங்கச்சிக்கும்மா இது..... அவளுக்கு ஸ்மைலி ரொம்பப் பிடிக்குமே. அவள் ரூமில் வைத்தால் ரூமே அழகாயிடும்மா"
என் மனம் மகிழ்ந்தது. என்ன செய்தாலும் பாராட்டும் பிள்ளை. அம்மாவை சந்தோசப்படுத்த எப்போதும் பாராட்டு மடல் வாசிப்பான்..
அடுத்து வீட்டினுள் நுழைந்தது குட்டிப் பொண்ணு.
"வாவ்........ஸ்மைலி குஷன்....அம்மா இது எனக்கே எனக்கு. சூப்பர்மா....இது என்னோட பெட்டுக்கு மேட்சா இருக்கும். நானே வச்சிக்கறேன் மா"
எடுத்துக் கொண்டு ஓடினாள். தலையணை மீது வைத்து அழகு பார்த்தாள். ஸ்மைலியோடு சேர்ந்து அவளும் சிரித்தாள்.
என் முகமும் சேர்ந்து ஸ்மைலித்தது. என்ன தான் கடையில் வாங்கினாலும் நாமே செய்ததென்றால் தனி மகிழ்ச்சி தானே.
ஸ்மைலி எல்லோருக்கும் பிடிச்சிருக்கா தோழிகளே........ .
http://www.arusuvai.com/tamil/node/26335
http://www.arusuvai.com/tamil/node/31273
Comments
niki
Aahaa super Niki. Clap sound kekutha.Niki story LA kuda kushan vanthuduthey. Iruthalum annavai avan Ivan eega vasanathil pesiruka vendam. Enathan paratananaalum ipadiya :). Super story
Be simple be sample
ஸ்மைலி..
ரொம்ப அழகா இருக்குங்க..நல்ல ஐடியா! :)
அன்புடன்,
மகி
nikila sister
Smiley super sister
Valthukal
ML
ஸ்மைலி
சூப்பர் ஐடியா நிகிலா. அழகா இருக்கு. :-)
- இமா க்றிஸ்
ஸ்மைலி
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நிகி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ஸ்மைலி குஷன்
//பார்க்கும் எல்லோரும் கருத்துச் சொல்ல வேண்டாமா? (ஏனுங்க படிக்கிற உங்களையும் சேர்த்துத் தான் சொல்றேனுங்க// கண்டிப்பா சொல்லாமலா சூப்பரா செய்திருக்கீங்க, ரொம்ப அழகா இருக்கு நிகி அக்கா,
//ஸ்மைலி எல்லோருக்கும் பிடிச்சிருக்கா தோழிகளே// ரொம்ப பிடிச்சுருக்கு....
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
குஷன்
ஐடியா சூப்பர், குஷன் அழகோ அழகு நிகிலா. ஓரங்களில் குஞ்சம் போன்ற டிசைன் மேலும் அழகு. :)
கைத்தட்டல்
கைத்தட்டலுக்கு நன்றி ரேவா.:)))
இங்கே ஹீரோ பேரு அவன். ஹீரோயின் பேரு அவள். அம்புட்டு தான் . இது கதை தானே தவிர வேறொன்றுமில்லை தோழி.
பாராட்டுக்கு நன்றி ரேவா.
மஹி அருண்
பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க :))
கல்யாணி
ஸ்மைலி பிடித்ததில் மகிழ்ச்சி.
பாராட்டுக்கு நன்றி தோழி.:))
இமா
அழகா இருக்கா.... நன்றி. நன்றி இமா:))
அருள்
ரொம்ப ரொம்ப நன்றி பா.:))
முயற்சித்துப் பாருங்க. தோழி.
சுபி
//ரொம்பப் பிடிச்சிருக்கு//
இதை இதைத் தானே எதிர்பார்த்தேன். நன்றி சுபி
வாணி
//ஓரங்களில் குஞ்சம் போன்ற டிசைன் மேலும் அழகு. //
ஆம் வாணி. தையலுக்குப் பதிலாக போடப்பட்ட முடிச்சு இதற்கு தனி அழகைத் தருது.
உவமை நயம்பட சொல்லிட்டீங்க. நன்றி வாணி:)))
Niki
Super Niki.. Romba Azhga iruku..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவதி
ரொம்பவும் நன்றி ரேவ்:))
ஸ்மைலி
அன்பு நிகிலா,
நல்ல கிரியேடிவிடி. ரசனையாக செய்திருக்கீங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாலக்ஷ்மி
//நல்ல கிரியேடிவிடி. ரசனையாக செய்திருக்கீங்க.//
மிக்க நன்றி சீதா:)))