kulandhai weight increase aga vali solungal frnds..

Enoda ponnukku 8 month complete agiduchu ava romba olliya irukka...sappadu kodutha omatra udane vomit pannitra...8 month babyoda normal weight ena..??iva 6.5 dan irukka..pls help me..weight increase aga ena food kodukalam...vomit varama irukka ena pannalam solunga frnds..

Pls reply frnds pls...

Pls reply frnds pls...

Sapatum potty tv la sounds potu vidunmga mobile la songs or animals sound potu
Kita vaiga (sapatu kudukara ninapa kulanThai ku thariyama kuduga ) try this... en pay an ku epadi tha

சில‌ குழந்தைகளுக்கு 5 வயது வரை கூட‌ சாப்பிட்டதும் சாப்பிட்டதை வாந்தி எடுக்கும் பழக்கம் இருக்கும். என் குழந்தையும் இப்படி தான். 2 வயது ஆனவுடன் வாந்தி நின்று விட்டது. அதனால் பயம் வேண்டாம். குழந்தை 6.5 முதல் 10 கிலோ வரை இருந்தால் பயம் வேண்டாம்.

உணவு முறை:
1.கேரட், பீன்ஸ் போன்ற‌ காய்கறிகளை உப்பு சேர்த்து வேக‌ வைத்து வடிகட்டி சூப் மாறி குடுக்கவும். தேவையெனில் 1 மிளகு நசுக்கி போடவும்.

2. புழுங்கல் அரிசி வெறும் வாணலில் வறுத்து தனியே வைக்கவும். பொட்டுகடலை லேசாக‌ வறுத்து அரிசியுடன் சேர்த்து அரைத்து சலித்து பவுடராக‌ வைத்துக்கொள்ளவும். இதில் 1 ஸ்பூனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கஞ்சியாக‌ காய்ச்சி ஊட்டவும்.

3. இதே போல் ஜவ்வரிசி வறுத்து அரைத்து சலித்து கஞ்சியாக‌ காய்ச்சி சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.

4. உருளையை வேகவைத்து மசித்து கொடுக்கவும்.

5. கேழ்வரகு 1 டம்ளர், சம்பா கோதுமை 1 டம்ளர், பச்சைபயிறு 1/2 டம்ளர், பொட்டுகடலை 1/2 டம்ளர் தனி தனியே வறுத்து ஒன்றாக‌ சேர்த்து மெசினில் அரைத்து வைக்கவும். இது 1 வயதுக்கு உட்பட்ட‌ குழந்தைக்கான‌ சத்து மாவு. இது அனைத்தும் எளிதில் செரிக்க‌ கூடியது. இதில் 1 ஸ்பூனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கஞ்சியாக‌ காய்ச்சி கடைசியாக‌ பால் சேர்த்து சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்து ஆற‌ வைத்து ஊட்டவும்.

6.முட்டையை நன்கு வேக‌ வைத்து பாதி மஞ்சள் கரு மட்டும் கொடுக்கவும்.

7. முடிந்த‌ வரை பசும் பால் மற்றும் பாக்கெட் பாலை தவிர்க்கவும். வெளி பால் தான் வாந்தி எடுக்க‌ முக்கிய‌ காரணமாக‌ இருக்கும். வெள்ளை நாட்டு பசுவின் பால் எனில் கொஞ்சம் தரலாம்.

8. பொட்டுகடலை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய‌ பங்கு வகிக்கும். பொட்டுகடலை மாவுடன் வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

9. தினம் ஒரு வாழைப்பழம் கொடுக்கலாம்.

10. குழந்தைக்கு 1 வயது வரை நான்வெஜ் எதும் குடுக்காதீங்க‌. chicken (அ) mutton உப்பு சேர்த்து வேக‌ வைத்து வடிகட்டி சூப் மாறி குடுக்கவும். மீன் 1 வயதுக்கு பிறகே குடுக்கவும்.

இது போதுமானதாக‌ இருக்கும் என எண்ணுகிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

Thank u frnds...neenga sonna sathu maavh kanjidan kodukren bala akka...but weight increase agala...athu 1m pbl ila but 6.5dan irundhala athan payanthuden..normal weight nu solavumdan happya irukku...tv lam pottudan ooduven...ana antha 2 vaaidan...aft noon paruppu sadam thavira vera ena kodukalam frnds?

google சரச் பண்ணப்போ குழந்தைக்கு பொட்டுகடலையும் வெல்லம் சேர்த்து கொடுத்தால் நல்லது னு பாரத்தேன். frnds ritha pathi therima. Ithu kodukalama

TIME IS GOLD

எத்தனை வயதுக் குழந்தைக்கு என்று சொல்லி இருக்காங்களா?

எல்லாக் கடலைகளிலும் மாப்பொருள், புரதம் இருக்கும். கூடவே வைட்டமின்கள் கொஞ்சம் கொழுப்பு & தாதுப் பொருட்கள் கொஞ்சம் இருக்கும். இதோட வெல்லம் சேர்க்க குழந்தைகள் நல்ல சதைப்பிடிப்பா வருவாங்க.

குழந்தையிலேயே எல்லா உணவுப் பொருட்களையும் அறிமுகப்படுத்துறது நல்லது. இப்படி ஒரு உணவை மட்டும் நம்பிட்டு இருக்கப்படாது. குண்டா இருக்கிற குழந்தைகள் பார்க்க அழகுதான். ஆனால் ஆரோக்கியம் நல்லா இருக்கணும் என்றால் சம உணவு அவசியம். இப்படி ஒன்றுக்கு பழகிட்டாங்க என்றால் வேறு உணவு கொடுக்கச் சிரமப்படுவீங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்