அலர்ஜி உதவுங்கள்

என் தங்கை பையனுக்கு 8 வயது பூச்சிக்கடியா என்னனு தெரியல‌ உடம்பு புல்லா கொசு,எறும்பு கடிச்சா எப்படி இருக்குமோ தத்து ,தடியா உடல் முழுவதும் இருக்கு
dr கிட்ட‌ போயிட்டு வந்தா அலர்ஜினு மருந்து கொடுத்தாங்க‌ ,மருந்து கொடுத்தா குரையுது திரும்பவும் ஜாஸ்தியாகுது அரிப்பா இருக்கு சொல்றான் என்ன‌ செய்யலாம் யாராவது சொல்லுங்க‌ pls

//மருந்து கொடுத்தா குரையுது திரும்பவும் ஜாஸ்தியாகுது// முழு மருந்தும் முடியும் வரை சரியான நேரத்துக்குத் தொடர்ந்து கொடுங்க. //அரிப்பா இருக்கு// பூசுவதற்கு எதுவும் கொடுக்கலயா? காலமைன் லோஷன் பூசலாம். சொரிந்துகொள்ள விடாதீங்க. //என்ன‌ செய்யலாம்// காரணத்தைக் கண்டுபிடிக்கப் பாருங்கள்.
//பூச்சிக்கடி// என்றாலும் ஆன்டிஹிஸ்டமைன் வேலை செய்யும்.

//உடம்பு புல்லா கொசு,எறும்பு கடிச்சா எப்படி இருக்குமோ தத்து ,தடியா உடல் முழுவதும் இருக்கு// கட்டாயம் பூச்சிக் கடி என்றிருக்க வேண்டும் என்பது இல்லை. என்ன சாப்பாடு சாப்பிட்டாங்க? முன்பு செபாவுக்கு இப்படி ஆவது உண்டு. காரணம் அலர்ஜிதான். ஆனால் என்னென்ன அலர்ஜியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் ஒரு பொருள் மட்டும் அலர்ஜியாக இருக்கும். சிலருக்கு பலது.

இப்போது அதிகம் தட்ட இயலவில்லை. அலர்ஜி பற்றி இங்கு உள்ள மீதி இழைகளெல்லாம் படித்தீர்களா? ஒரு தடவை படித்துப் பாருங்கள். சில மணி நேரம் கழித்து மீண்டும் வருகிறேன்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ நன்றி இம்மா MAM
பூசுவதற்கு antilotion கொடுத்திருக்காங்க‌ பூசினா கொஞ்ச‌ நேரத்தில‌ குறையுது
அப்புறம் திரும்ப‌ வருது
dr சோபால‌ ,பூச்சிக்கடியால‌ ,சாப்பாடு எதனாலன‌ வந்திருக்கலாம் சொல்ராங்க‌
அது எதுவும் பயம் இல்லையா சொல்லுங்க‌ பா pls

//dr சோபால‌ ,பூச்சிக்கடியால‌ ,சாப்பாடு எதனாலன‌ வந்திருக்கலாம் சொல்ராங்க‌// அதற்கு மேல் பெரிய லிஸ்ட்டே சொல்லலாம்.

//எதுவும் பயம் இல்லையா// அலர்ஜிக் ரியாக்ஷன்ஸைப் பொறுத்த வரை இப்படித்தான் இருக்கும், இப்படி இராது, இதனால் என்பதெல்லாம் சொல்வது சிரமம். பிரச்சினை இல்லை என்று சொல்ல இயலாது. அப்படி நான் நம்பிக்கை கொடுத்து நீங்கள் கவனமில்லாமல் இருந்துவிட்டால்! :-)

என்ன விதமாக சின்னவரது உடல் ரியாக்ட் செய்கிறது என்பதைப் பொறுத்தது அது. பயப்படாதீங்க. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. சின்னவர் இல்லையா! சொல்லத் தெரியாது. நீங்கள்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். கூடுறது போல தெரிஞ்சா, அல்லது வித்தியாசமாக... உதடு, நாக்கு, தொண்டை உட்பக்கம் வீங்குவது போல இருந்தால் அல்லது மூச்சு வித்தியாசமாக இருந்தால் காலைல காட்டலாம், அரை மணி கழிச்சுக் காட்டலாம் என்று பின்போடப்படாது. உடனே காட்டிரணும்.

இப்படியே தொடர்ந்து இருக்கிறது என்றால் ஆரம்பமான சமயம் உங்கள் வீட்டில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதை நினைவுக்குக் கொண்டுவந்து பாருங்கள். காரணமான விடயத்தை நீக்கிவிடுவது அவசியம். தனியே மருந்தினால் பயனில்லை. சில விடயங்களைக் குழந்தை சாப்பிட்டிருக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. நிலக்கடலை - அந்தச் சுற்றாடலில் இருந்தாலே சிலருக்கு ஆகாது. கவனிச்சுப் பாருங்க. இந்த இழைகளைப் படிச்சுப் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/8110
http://www.arusuvai.com/tamil/node/20719
http://www.arusuvai.com/tamil/node/10100
http://www.arusuvai.com/tamil/node/29113

இன்னும் த்ரெட் இருக்கு. எந்தத் த்ரெட் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று படித்துப் பார்க்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ நன்றி இம்மா MAM
ரொம்ப‌ usefula இருக்கு ,படிச்சி பார்க்கிறேன்

அன்புள்ள‌ ஜயபூரணி,
நீங்கள் சொன்ன‌ தொல்லைகள் அமாவாசை, பௌர்ணமி
நாள்களில் மாற்றி மாற்றி தொடர்ந்து வந்தால் பூரான் கடியால் அல்ல்து கம்ப்ளிப்பூச்சி கடித்தால் இந்த‌ மாதிரித்தொல்லை ஆண்டுக்கணக்கில் தொடரும்.பூரான் கடி என் அண்ணன் மகனுக்கு, அண்ணன் கல்லூரி முதல்வர், அண்ணி கல்லூரிப்பேராசிரியர்.(கெமிஸ்டிரி இருவரும்).பார்க்காத‌ ஆங்கில‌ வைத்தியம் இல்லை சென்னையில். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே கண்டு பிடித்து பிறகு ஆயுர் வேத‌ மருந்தில் தான் குணமானது, எனக்கும் கம்பளிபூச்சிக்கடி
ஆயுர் வேத‌ மருந்தில் தான் குணமானது(1987)சென்னையில் கச்சேரி தெரு,மயிலாப்பூர் (ஆயுர்வேத‌ வைத்தியசாலை) உடல் முழுவதும் இரணமாக‌
இருக்கும். மேலே எதுவும் படமுடியாது. விரைவில் இந்த‌ கோடை விடுமுறையிலேயே மருத்துவம் பார்ப்பது நல்லது. குறைந்தது ஒரு மாதமாவது
ஆகும், பத்தியம் இருக்கும். அதனால் விடுமுறையில் பார்த்து விடுவது நல்லது
உங்கள் தங்கை இருக்கும் ஊரில் உள்ள‌ ஆயுர்வேத‌ வைத்தியசாலைக்குப் போகவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்