கேரட் பாயசம்

தேதி: April 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கேரட் - 2
பால் - 2 கப்
சேமியா - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
தண்ணீர் - ஒரு கப்
நெய் - 3 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை, ஏலக்காய் - தேவையான அளவு


 

கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் மேலும் சிறிது நெய் விட்டு சேமியாவை வறுத்து எடுக்கவும்.
சேமியாவை வறுத்து எடுத்த பின்னர் துருவிய கேரட்டை போட்டு 8 நிமிடங்கள் வரை வதக்கவும்.
பின்னர் அதில் வறுத்த சேமியா, பால், தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக விடவும்.
கலவை நன்கு வெந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
வறுத்த முந்திரி, திராட்சை தூவி இறக்கினால் கேரட் பாயாசம் தயார்.

குழந்தைகளுக்கு கேரட் ஒரே மாதிரி செய்து கொடுக்காமல் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா&அறுசுவை டீம் நன்றி.

Be simple be sample

பார்க்கும் போதே சாப்பிட‌ தோணுது, கேரட் பாயாசம் கலர்புல் லா இருக்கு....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சூப்பரா இருக்கு. யம்மி. கலக்கல் பாயசம் ரேவ்'ஸ்

எல்லாம் சில‌ காலம்.....

இந்த வீக்கென்ட்ல கெஸ்ட் வர்றாங்க, இந்த பாயாசம் தான் டெசர்ட்.
கலக்கல் பிரசன்டேஷன் ரேவதி.

தாங்யூ சுபி

Be simple be sample

தாங்யூ பாலா

Be simple be sample

செய்துப்பார்த்துட்டு கட்டாயம் சொல்லுங்க.தாங்யூ வாணி

Be simple be sample

அடடே ஸ்வீட்டா போட்டு தாக்குறீங்க அருமையான பாயசம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Super recipe.pathaudan seiyanum pola irunthathu.na try panunaen rempa taste super irunthathu inimay enka v2tla carrot payasam than revathi madam.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

Paakkum Pothey naavi etchil oorukirathu.. very colorfull and different.