தேதி: April 14, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பொட்டுக்கடலை - ஒரு கப்
கோதுமை ரவை - 3 தேக்கரண்டி
தயிர் - அரை கப்
ஈனோ சால்ட் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு
வெள்ளை எள்
எண்ணெய்
கொத்தமல்லித் தழை
பொட்டுக்கடலையை பொடித்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

கோதுமை ரவையை வெறும் சட்டியில் சூடாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை பொடி, கோதுமை ரவை, தயிர், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

அதனுடன் எலுமிச்சை சாறை பிழிந்து கலக்கி விட்டு அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

பின்னர் இந்த கலவையுடன் ஈனோ சால்ட் கலந்து ஒரு தட்டில் ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.

தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து டோக்ளாவில் கொட்டி விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும். ஆரோக்கியமான பொட்டுக்கடலை டோக்ளா தயார். இதை இட்லி தட்டிலும் ஊற்றி வேக வைக்கலாம்

Comments
vaany
என் பையனுக்கு பிடிச்சது டோக்ளா. செய்து பார்க்கிறேண் ஸசூப்பர்
Be simple be sample
வாணி
வாணியோட டிஷ்னாலே எப்பவும் கலக்கல் தான். ரொம்ப நல்லா இருக்கு வாணி. நாங்கள் கடலை மாவில் செய்வோம் இது மாறி பொட்டுகடலை மாவில் ட்ரை பண்றேன்.
எல்லாம் சில காலம்.....
ரேவதி, பாலநாயகி
ரேவதி, பாலநாயகி இருவரின் வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றீ தோழிகளே :))
செய்து பாருங்க, நல்லா இருக்கும்.
வாணி
டோக்ளாவ அப்படியே பார்சல் பன்னுங்கோ சூப்பரா இருக்கு :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வாணி
குறிப்பு அருமை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.