பால் கொழுக்கட்டை (சிலோன் ஸ்வீட்)

தேதி: February 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசிமா - 50 கிராம்
சீனி - 75 கிராம்
தோல் நீக்கி உடைத்தப்பயறு - 75 gm
பொடி செய்த ஏலம், கிராம்பு - 2 தேக்கரண்டி
வனிலா - 1 தேக்கரண்டி
குங்குமப்பூ - சிறிது


 

அரிசி மாவை 1/2 கப் கொதிநீர் விட்டு நன்றாகப் பிசைந்து மிக மிகச்சிறிய உருண்டைகளாக உருட்டி நீராவியில் அவித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பயறைப் போட்டு சிறிது நீர் விட்டு அவிக்கவும்.
பயறு வெந்ததும் அதில் பால், சீனி, பிளம்ஸ், ஏலம் கிராம்பு பொடி, வனிலா யாவற்றையும் போட்டு நன்றாக கிளறிவிடவும்.
பால் நன்றாகக் காய்ந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு,அவித்து வைத்த உருண்டைகளைப் போட்டு கிளறி ஆற விட்டுப் பரிமாறலாம்.
மாலை டிபனுக்கு மிக நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்