குழந்தைக்கு

ஹலோ தோழிகளெ
என் பையனுக்கு 1 1/4 வயது. நான் வேலைக்கு செல்வதால் 2 வயது வரை பால் கொடுக்கலாம் என்று இருக்கிரென். மற்ற‌ பால் எதுவும் குடிப்பதில்லை. அவனுக்கு ஆரோக்கியமான‌ snacks என்ன‌ கொடுக்கலாம். குறிப்புகள் கொடுத்தால் உதவியாக‌ இருக்கும்

1. சத்துமாவு கஞ்சி கொடுக்கலாம்.

2. கேரட் தேங்காய் அரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்து ஜீஸ் ஆக‌ கொடுக்கலாம்.

3. பேரீச்சை மற்றும் பாதாம் பால் சேர்த்து அரைத்து வடிகட்டி கொடுக்கலாம். சர்க்கரை வெல்லம் தேவையில்லை. பேரீச்சை இனிப்பு போதுமானது.

4. பொட்டுகடலை மற்றும் பாதாம் சேர்த்து அரைத்து சலித்து வைக்கவும். இதை பாலில் கலந்து வெல்லம் சேர்த்து கொடுக்கலாம். அல்லது மாவுடன் வெல்லம் மிக‌ சிறிது பால் சேர்த்து லட்டாக‌ பிடித்துக் கொடுக்கலாம்.

5. ஜவ்வரிசி பாலில் வேகவைத்து ஏலக்காய் சர்க்கரை சேர்த்து பாயாசமாக‌ கொடுக்கலாம்.

6. (5) ல் உள்ளது போல் சேமியாவில் செய்து தரலாம்.

7. கேரட் அல்வா பீட்ரூட் அல்வா செய்து தரலாம்.

8. உருளை வேக‌ வைத்து மற்ற‌ காய்கறி வேக‌ வைத்து சேர்த்து பிசைந்து கட்லட் செய்து தரலாம்.

9. அவல் பாலில் ஊற‌ வைத்து வெல்லம் தேங்காய் சேர்த்து தரலாம்.

10. சிறு தானிய‌ புட்டு செய்து தரலாம்.

11. கடலை (அ) பறுப்பு சுண்டல் செய்து தரலாம்.

12. மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற‌ கிழங்கு வேக‌ வைத்து மசித்து சர்க்கரை தேங்காய் சேர்த்து தரலாம்.

குறிப்பாக‌ எண்ணை பொருட்களை தவிர்க்கவும்.

எல்லாம் சில‌ காலம்.....

எனக்கு இதே கேள்விதான். ஆனால் என் குழந்தைக்கு பல் முளைக்கவில்லை நீங்க சொல்கிற உணவுகள் கொடுக்கலாமா?

babies

இது எல்லாமே லிக்விட் ஐட்டம் தான். இது எல்லாமே கொடுக்கலாம். புட்டு, கிழங்கு நன்கு கையாலேயே மசித்து ஊட்டலாம். எல்லாமே ஈஸியாக‌ செரிக்க‌ கூடியது.

எல்லாம் சில‌ காலம்.....

என் குழந்தை 9 மணிக்கு மேல் தான் தூக்கம் முழிக்கும், நானும் வேலைக்குதான் போரேன், மீதி நேரம் என் கணவர் பார்த்துக்குவார். குட்டிக்கு தேவையான அனைத்தையும் அவரிடம் கொடுத்து விட்டு வேலைக்கு செல்வேன்(அவர் கடை வைத்துள்ளார்). இன்று நீங்கள் சொன்னதுபோல் கேரட் ஜீஸ் செய்து கொடுத்து விட்டு வந்துள்ளேன். எத்தனை மணிக்கு என்ன கொடுக்கலாம்னு சொல்லுங்களேன். குட்டி வெயிட் கம்மியா இருக்கா. இரவு நேரம்தான் சாப்பிடவே மாட்டிகிறாள்.

babies

என்னோட பொண்ணுக்கும் 1 1/4 வயது தான்
தாய்ப்பால் குடுக்கிறேன்

நீங்௧ள் பதிவிட்ட குழந்தைக்கான உணவு வகை௧ள் அனைத்தும் எளிமையானதா௧வும் சத்தானதாகவும் உள்ளது

இது போல் உணவு குறிப்புகள் இருந்தால் பதிவிடுங்௧ள்
மி௧வும் பயன்உள்ளதா௧ இருக்கும்

ML

என் குழந்தைக்கு 1 1/4 வயசு ஆகுது. மேல 4 பல் கீழ 4 பல் இருக்கு அவனுக்கும் நீங்க சொல்லி இருக்க உணவு கொடுக்கலாமா

மன்னிக்கவும். கேரட் தேங்காய் ஜூஸ் செய்து உடனே குடிக்க‌ வேண்டிய‌ ஒன்று. தேங்காய் நீண்ட‌ நேரம் தாங்காது. கெட்டு விடும். மற்ற‌ அனைத்தும் வைத்து கொடுக்கலாம். ஆனால் கேரட் தேங்காய் ஜூஸ் மட்டும் உடனே கொடுக்க‌ வேண்டும்.

எல்லாம் சில‌ காலம்.....

நானும் யோசிக்கலை, நன்றி மேடம்.நேரம் நேரத்திற்கு என்ன சாப்பாடு கொடுக்கலாம்னு கேட்டேனே. எனக்கு குழப்பமா இருக்கு மேடம்.

babies

காலையில் எழுந்த‌ உடன் சத்து மாவு கஞ்சி காய்ச்சி ஆற‌ வைத்து எழுந்த உடன் கொடுக்கலாம். சிறிது நேரம் கழித்து இட்லி உப்புமா வெண்பொங்கல் போன்ற‌ உணவு கொடுக்கலாம். 11 மணி போல் ஜூஸ் ஐட்டம் (அ) சூப் ஐட்டம் கொடுக்கலாம். மதியம் காய்கறி சாதம், முட்டை, தயிர், கீரை, பருப்பு (அ) மீன் சாதம் ஏதேனும் ஒன்று கொடுக்கலாம். 3 மணி போல் பழங்கள் கொடுக்கலாம். 6 மணி போல் 3 பேரிச்சை மற்றும் 3 பாதாம் ட்ரையாக‌ அரைத்து பின் சிறிது பால் சேர்த்து அரைத்து பின் தேவையான‌ பால் சேர்த்து நன்கு வடிகட்டி கொடுக்கலாம். (அ) புட்டு, கிழங்கு, அவல், பொட்டுகடலை பாதாம் சேர்த்து அரைத்த‌ பவுடர் பாலில் கலந்து (அ) லட்டாக‌ பிடித்து ஏதேனும் கொடுக்கலாம். இரவு டிபன் (அ) பால் சாதம் கொடுக்கலாம். படுக்கும் நேரம் பால் கொடுத்து தூங்க‌ வைக்கலாம். முடிந்த‌ வரை சர்க்கரை அவாய்டு பண்ணவும். அதற்கு பதில் வெல்லம் கொடுக்கலாம். பொட்டுகடலை குழந்தைகளுக்கு மிக‌ நல்லது. அந்த‌ பொட்டுகடலை பாதாம் கலந்த‌ பவுடரை இடை இடையே பாலில் கலந்து கொடுக்கலாம். பாயாசம் செய்யும் போது அதில் கலந்து கொடுக்கலாம்.

எல்லாம் சில‌ காலம்.....

இதை எங்கு பதிவிட‌ வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தால் சொல்லவும்.

எல்லாம் சில‌ காலம்.....

மேலும் சில பதிவுகள்