காது பற்றிய சந்தேகம்

சகோதரிகளே
நான் சிறிய வயதில் பெரிய பெரிய கம்மல் போடுவேன் அதனால் என் காது ஓட்டை பெரிதாகி விட்டது. அதனால் சிறிய கம்மல் அணிந்துள்ளேன். எதாவது விழாக்களுக்கு செல்லும்போது பெரிய கம்மல் போட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனால் காது அறுந்து விடுமோ என்று பயமாக உள்ளது. மருந்துவரிடம் சென்று காதை தெய்க்கவும் பயமாக உள்ளது எதாவது வழி இருந்தால் கூறுங்கள்

//எதாவது விழாக்களுக்கு செல்லும்போது பெரிய கம்மல் போட வேண்டும் என்று ஆசை// எப்போதாவது போடும் போது ஒன்றும் ஆகாது. பயப்பட வேண்டாம். சட்டென்று அறுந்து போகாது.

பெரிய கம்மலாக இருந்தாலும் பாரம் குறைவானதாகத் தெரிவு செய்யுங்கள்.

//காதை தெய்க்கவும் பயமாக உள்ளது// ஒரு தடவை முயன்று பாருங்கள். இதற்கும் பயப்படத் தேவையில்லை. சரிவந்தால் சந்தோஷம். அல்லாவிட்டால் இப்போ உள்ள அளவில் இருக்கும். அவ்வளவுதான்.

//எதாவது வழி இருந்தால் கூறுங்கள்// ம்...
மயிர்மாட்டி / மயிர்மாட்டல் என்று ஒரு ஆபரணம் இருக்கிறது அல்லவா? கம்மலுக்குப் பொருத்தமாக அப்படி ஒன்று மாட்டினால் காது மடலில் கம்மலின் பாரம் தாக்காமல் இருக்குமோ!

அல்லது... காது மேற்பகுதியில் இன்னொரு துளை குத்தலாம். மேலே சின்னதாக கம்மல் போடலாம். பெரிய கம்மலுக்கு இதற்கும் ஒரு கனெக்க்ஷன் போல சின்னச் செய்ன் மாட்டினால் பாதிப் பாரத்தை அது பொறுத்துக் கொள்ளாதா!

மேலே குத்திக் கொள்ள விரும்பாவிட்டால்... துளையில்லாத காதில் போடும், U வடிவக் கம்மல்கள் (அதிலேயே இறுக்குவதற்கு ஒரு ஸ்க்ரூ போல இருக்கும். மூக்குத்தி கூட இப்படி வரும்.) போல செய்து மேற்காதில் இறுக்கிக் கொள்ள வேண்டும். அதிலிருந்து குட்டி செய்ன் இறங்கி வந்து... அதைக் கம்மல் தண்டில் மாட்டி விட்டு, பிறகு காதில் மாட்டி, பின்னால் சுரையைத் திருகிவிடுவது போல இருந்தால்!! எந்தக் கம்மலுக்கும் இந்தச் செய்னை மாட்டிக் கொள்ளலாம். இந்த ஐடியா நிச்சயம் சரிவரும். நகைக் கடையில் ஐடியாவைச் சொல்லிச் செய்வித்து எடுங்கள். உங்கள் காது அளவுகளுக்கு ஏற்ற மாதிரி செய்ன் அளவு சரியாக இருக்க வேண்டும். சின்னதாக இருந்தால் மாட்ட முடியாது. நீளமாகிவிட்டால் நோக்கம் நிறைவேறாது. சரியான அளவாக இருக்க வேண்டும். மேலே U கம்மல் கூட காது வளைவுகளுக்குப் பொருத்தமாக வர வேண்டும். அல்லாவிட்டால் வலிக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்