பாட்டில் கேண்டில்

தேதி: April 15, 2015

5
Average: 4.8 (4 votes)

 

பாட்டில்
சம்கி
கம்
பெயிண்ட்
ப்ரஷ்
கேண்டில்

 

விருப்பமான அளவுகளில் பாட்டிலை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்னர் அதை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பாட்டிலின் மேல் பகுதியிலிருந்து சுற்றி கம் தடவி டூத் பிக்கின் உதவியால சம்கியை ஒட்டிக் கொண்டே வரவும். கழுத்து பகுதியில் படத்தில் இருப்பது போல் விருப்பமான டிசைனை வரைந்து அதன் மேல் சம்கியை ஒட்டவும்.
பாட்டிலின் அடிப்பகுதியிலும் சம்கியை 5 வரிசைகள் ஒட்டவும்.
பாட்டிலின் உடல் பகுதி முழுவதும் விரும்பிய நிறத்தில் பெயிண்ட் செய்யவும்.
பெயிண்ட் செய்து முடித்ததும் குறைந்தது 2 அல்லது 3 மணி நேரங்கள் காய வைக்கவும்.
பெயிண்ட் காய்ந்ததும் பாட்டிலின் உள்ளே சிறிய மெழுவர்த்தியை வைத்து ஏற்றி விடவும். மெழுவர்த்தி வெளிச்சத்தில் பாட்டில் அழகாக ஜொலிக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

செண்பகா அக்கா சூப்பரா இருக்கு. கலர் சூப்பரா செலக்ட் பண்ணி இருக்கீங்க‌. ஆனா ஒரு டவுட். மெழுகுவத்தியோட‌ சூட்டில் பாட்டில் வெடிச்சிடாதா?

எல்லாம் சில‌ காலம்.....

ரொம்ப‌ அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பர் செண்பகா. ஐடியா பிடிச்சிருக்கு.
பாடசாலையில் ஒவ்வொரு (கிறிஸ்தவ) காலத்திற்கும் கோவிலில் வைப்பது போலவே வெவ்வேறு நிற மெழுகுவர்த்தி பயன்படுத்துவோம். காலங்களுக்கு ஏற்ற அடையாளங்களோடும் வரைந்து வைக்கலாம். ஐடியா எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி செண்பகா.

‍- இமா க்றிஸ்

சூப்பரா இருக்கு. கலரும் சூப்பர்.எனக்கும் பாலாக்கு இருக்குற அதே டவுட்தான் சூடுல ஒன்னும் ஆகாதா பாட்டில்

Be simple be sample

//சூடுல ஒன்னும் ஆகாதா பாட்டில்// விதம் விதமாகக் காண்டல் எரித்துப் பழக்கம் இருக்கிறது. செண்பகாவுக்காக நான் பதில் சொல்லலாம் என்று நினைக்கிறேன். :-)

இங்கு பயன்படுத்தியுள்ள பாட்டில், அதில் ஏற்கனவே க்ராக் இருந்திருந்தால் தவிர வெடிக்காது. பாட்டில் சுவரில் சுடர் படாம பார்த்துக் கொண்டால் வெடிக்காது. பிரச்சினை இல்லை. அவர்கள் சற்று உயரமான காண்டலைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். வெப்பம் மேல் நோக்கித்தான் நகரும். பாட்டிலுள் இறங்காது. இது அலங்காரத்துக்காக மட்டும் வைப்பது. அதனால் அதிக நேரம் எரிய விட்டு வைப்பதில்லை.

~~~~~~~

இந்த மாதிரி அலங்காரத்துக்கு ஏற்கனவே அலுமினிய / கண்ணாடிக் கிண்ணங்களில் வார்த்திருக்கும் டீலைட் காண்டல் பயன்படுத்த வேண்டாம். அவற்றை உள்ளே சுலபமாகப் போடலாம்; நேராக நிறுத்துவதைப் பற்றிப் பயமில்லைதான். ஆனால் எரிப்பது சிரமம். எரிப்பதற்காக பாட்டிலைச் சரிக்கும் போது இடம் மாறும். கண்ணாடி அருகே போய் நிறுவிடக் கூடும். தவிர, சுடரை ஏற்றுவதற்கு நீளமான தீக்குச்சு அல்லாது டேப்பர் வேண்டும். இன்னொன்று பாட்டில் உட் சுவரில் கரி பிடித்தால் அழகு கெட்டுப் போகும். இதைத் தாண்டி எப்படியாவது எரித்து வைத்து விட்டாலும், பிறகு அணைக்கும் போது சிரமம். இடையில் தானாக அணைந்தால் சரி. அல்லாமல் மெழுகு முழுவதாக உருகி, திரியும் நின்று எரிந்தால், நிச்சயம் பாட்டிலும் சூடாகி வெடிக்கும். மெழுகு முற்றாக உருகும் முன்னால் அணைக்காவிட்டால் சிரமம். சூடான பாட்டிலைத் தொட்டுத் தூக்க இயலாது. ஊதி அணைக்கும் போது முகம் பாட்டிலுக்கு மேலே இருக்கும். உருகிய மெழுகு சிதறாமல் அணைக்க வேண்டும்.

மேலே சொன்னவை அல்லாமல் வெறும் டீ லைட் காண்டல் - அடியின் உருக்கி பாட்டிலின் உள்ளே ஒட்டுவது, எரிப்பது இரண்டுமே சிரமம்.

குள்ளமாக / வாய் அகலமாக இருக்கும் மொத்தமான பாட்டில் / கண்ணாடி டம்ளர்கள் பிரச்சினை இல்லாதவை. காண்டலையும் சரியான உயரத்தில் வைத்துக் கொண்டால் பயமே இல்லை.

க்ரிஸ்டல் க்ளாஸ் வெடிக்கும் சாத்தியம் அதிகம்.

நெருப்பு - எந்த வடிவில் எரிக்கப்பட்டாலும் கவனிப்பில்லாமல் தனித்து விடப்படக் கூடாது.

நல்ல தெளிவாக விளக்கம் குடுத்துட்டிங்க புனிதா.

Be simple be sample

பாட்டில் கேண்டில் சூப்பரா இருக்கு அக்கா

ஜமிக்கி ,,, கலர்
எல்லா வேலைபாடுகளும் ரொம்ப அழகா பண்ணி இருக்கிங்௧ அக்கா

ML