கீரை மிளகூட்டல்

தேதி: April 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

முளைக்கீரை - ஒரு கட்டு
பயத்தம் பருப்பு - 2 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
நெய்
எண்ணெய்


 

குக்கரில் பயத்தம் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், சீரகம் தாளித்து அரிசி மாவு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி ஆற வைத்து தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து நறுக்கி அலசி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் நெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்..
வதக்கியவற்றுடன் நறுக்கி அலசி வைத்திருக்கும் கீரையை சேர்த்து பிரட்டி வேக விடவும்.
கீரை வெந்ததும் வேக வைத்த பருப்பை ஊற்றி உப்பு சேர்த்து கிளறி விடவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து வெந்ததும் சிறிது நெய் விட்டு இறக்கவும்.
சுவையான கீரை மிளகூட்டல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா& அறுசுவை டீம் நன்றி

Be simple be sample

உங்களுடைய கீரை மிளகூட்டல் செய்தேன் நன்றாக இருந்தது பொங்கல் டேஸ்ட்ல இருந்துச்சு