டெக்கரேட்டிவ் லேம்ப் ஹோல்டர்

தேதி: April 22, 2015

4
Average: 3.7 (7 votes)

 

திக்கான அட்டை
சீடி
சிறிய சம்கி
பெரிய சம்கி
க்ளாஸ் கலர்ஸ்
ஃபெவிக்கால்
க்லிட்டர் பவுடர்

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
திக்கான அட்டையை பூவின் இதழ்கள் போல வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். 7 இதழ்கள் தேவைப்படும்.
சீடியின் பின்புறத்தில் ஃபெவிக்கால் தடவி நறுக்கி வைத்திருக்கும் இதழ்களை ஒட்டவும்.
அதன் பிறகு சீடியில் க்ளாஸ் கலரில் பயன்படுத்தும் கறுப்பு நிற அவுட் லைனரைக் கொண்டு கோடுகள் மற்றும் விரும்பிய டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
அவுட் லைன் காயும் வரை சீடியின் ஓரத்தில் ஒட்டிய இதழ்களில் பெவிக்கால் தடவி அதன் மேல் க்லிட்டர் பவுடரை தூவி விடவும்.
அதன் பிறகு ஓரங்களில் சிறிய சம்கியை ஒட்டவும். நடுவில் பெரிய சம்கியை ஒட்டவும்.
அடுத்த இதழுக்கு மற்றொரு கலர் க்லிட்டர் பவுடர் தூவி ஓரங்களில் சம்கி வைத்து ஒட்டவும்.
கறுப்பு நிற அவுட் லைன் காய்ந்ததும் சிறிய இதழ் போல் வரைந்து இருக்கும் பகுதியில் ரோஸ் நிற க்ளாஸ் கலர் கொடுக்கவும்.
மேலே இருக்கும் மற்ற இடங்களில் பச்சை நிற க்ளாஸ் கலர் கொடுக்கவும். கலர் கொடுக்கும் போது சிறு பப்ள்ஸ் போல் வரும் அதை ஊசியால் குத்தி சரி செய்து விடவும்.
எல்லா இதழ்களிலும் ஒவ்வொரு கலரில் க்லிட்டர் பவுடர் தூவி அதன் ஓரத்தில் சம்கி வைத்து அலங்கரிக்கவும்.
அலங்கரிக்கப்பட்ட லேம்ப் ஹோல்டர் தயார். சாமி அலமாரியில் வைத்து இதில் விளக்கு ஏற்றி வைக்கலாம். நவராத்திரி சமயங்களில் கொலுவிற்கு முன்பு அலங்கரிக்க பயன்படுத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு. சீடீயைக் கோடுகளால் பிரித்து பச்சை நிறம் கொடுத்திருப்பது வெகு அழகாகத் தெரிகிறது.

‍- இமா க்றிஸ்

சூப்பரோ சூப்பரா இருக்கு. அட்டகாசமான‌ ஐடியா உங்களுக்கு மட்டும் தான் தோன்றும்.

எல்லாம் சில‌ காலம்.....

Nice idea senbaga ...will try this soon.

Kalai

wonderful super excellent

Superb.....