என் சமையலறையில் 2

பொடி வகைகள் தயாரிப்பது பற்றி சென்ற‌ பதிவில் பார்த்தோம். இப்போது வீட்டிலேயே தயாரிக்கும் மாவு வகைகளைப் பற்றி பார்ப்போம்.

முதலில் நாம் அதிகம் பயன்படுத்தும் கோதுமை மாவு.

பஞ்சாப் கோதுமை = 1 1/2 கிலோ (உருண்டை)
சம்பா கோதுமை = 1/2 கிலோ
கடலைப் பருப்பு = 100 கிராம்
மக்காச்சோளம் = 100 கிராம்
சோயாபீன்ஸ் = 50 கிராம்

இவை அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தி மிஷினில் கொடுத்து மிகவும் நைசாக‌ அரைத்துக் கொள்ளவும்.

இதில் சப்பாத்தி செய்தால் ஆறிய‌ பின்பும் கூட‌ சப்பாத்தி மிருதுவாக‌ இருக்கும். அதற்குக் காரணம் சம்பா கோதுமை சேர்ப்பது தான். இந்த‌ முறையில் அரைத்து சப்பாத்தி செய்து பாருங்க‌. அப்புறம் நீங்க‌ தான் கிச்சன் குயின் மாதிரி சப்பாத்தி குயின்....

நாம் கடையில் வாங்கும் சப்பாத்தி மாவில் சப்பாத்தி சாஃப்ட் ஆ வருவதற்காக‌ என்னென்ன‌ சேர்க்கிறாங்க‌ தெரியுமா? சோடா சேர்ப்பாங்கன்னு சொல்றீங்களா?
அது மட்டும் இல்லீங்க‌.

வைக்கோலை அரைத்து தூளாக்கி சேர்க்கிறாங்க‌.ஒரு பிரபலமான‌ பிராண்டில‌ இப்படி சேர்ப்பதாக‌ மிகவும் நம்பத்தகுந்த‌ தகவல் எனக்கு கிடைத்துள்ளது. உங்க‌ வீட்ல‌ கூட‌ அந்த‌ பிராண்டு தான் வாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.

நான் எப்பவும் கோதுமை வாங்கி அரைத்து கொள்வதே எனது வழக்கம்.

அடுத்து பச்சரிசி மாவு

புட்டு மாவு, இடியாப்ப‌ மாவு, முறுக்கு மாவு இப்படில்லாம் கடையில் வாங்குறோம்.

ரொம்ப‌ ஈசிங்க‌.
பச்சரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிட்டு, நீரை வடித்து விட்டு, ஒரு துணியில் போட்டு நிழலில் உலர்த்தி எடுக்கவும். ஈரம் மட்டும் உலர்ந்தால் போதும். மிஷினில் கொடுத்து புட்டு மாவு என்றால் கொஞ்சம் பரபர‌ என்று அரைக்கணும். மாவை நன்கு வறுத்து சல்லடையில் சலித்து கப்பியை மிக்சியில் அரைத்து மீண்டும் வைத்துக் கொள்ளவும்.

இதிலே புட்டு, கொழுக்கட்டை செய்யலாம்.
இதையே நல்லா நைசா அரைத்துக் கொண்டால் இடியாப்பம் செய்யலாம்; கடலைமாவு கலந்து காராசேவு, ஓமப்பொடி செய்யலாம். உளுந்தம்மாவு கலந்து முறுக்கு செய்யலாம்.

இந்த‌ வறுத்த‌ பச்சரி மாவில் செய்யும் முறுக்கு நல்ல‌ வெள்ளையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். உளுந்தம் மாவும் உளுந்தம்பருப்பை பக்குவமாக‌ வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளலாம்.

அரிசிமாவு , உளுந்தம்மாவு 4: 1 என்ற‌ கணக்கில் கலந்து உப்பு, சீரக‌ம், எள் கலந்து வைத்துக் கொண்டால் நினைத்த‌ நேரம் முறுக்கு பிழிந்து கொள்ளலாம். இது போலவே தான் காரசேவும் பிழியலாம்.

கடலைப் பருப்பை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டால் கடலை மாவு ரெடி. ஒரு முறை அரைத்துப் பாருங்க‌. அப்புறம் கடையில் வாங்கும் கடலைமாவை நீங்க‌ ஏறெடுத்தும் பார்க்க‌ மாட்டீங்க‌. சுவையில் அத்தனை வேறுபாடு தெரியும். மீதியை இருக்கவே இருக்கு ஃபிரிஜ். அதிலே பாதுகாக்கலாம். வண்டு விழாது.

உங்க‌ வீட்டுக் குட்டீசுக்கு பாலில் கலந்து கொடுக்க‌ என்னென்னவோ பொடிகளை வாங்குவீங்க‌. அதிலே என்ன‌ சேர்த்திருக்காங்கன்னே தெரியாது.
நான் சொல்லுவதை ரெடி பண்ணிக் குடுங்க‌.

கேழ்வரகு = 1/4 கிலோ
பாதாம் = 50 கிராம்
பிஸ்தா = 50 கிராம்
முந்திரி = 50 கிராம்
வேர்க்கடலை = 50 கிராம் (வறுத்தது)
சுக்கு = ஒரு துண்டு
ஏலக்காய் = 10
குங்குமப்பூ = சிறிது

கேழ்வரகை வறுக்கவும். மிக்சியில் அரைக்கவும். நட்ஸ்லாம் போட்டு தனியே மிக்சியில் அரைக்கவும். அனைத்தையும் சேர்த்து சல்லடையில் சலித்து கப்பியை மீண்டும் அரைக்கவும். நைசாக‌ அரைத்தால் நல்லது.

ஒரு கப் சூடான‌ பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைப் போட்டு, தேவையான‌ வெல்லம் கலந்து ஒரு நிமிடம் கொதிக்க‌ வைத்து எடுங்கள். மிகவும் சுவையான‌ ராகி மால்ட் ரெடி. நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

இரவு உணவுக்குப் பின் பருக‌ ஏற்ற‌ பானம்.

பாதாம் மற்றும் வேர்க்கடலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

செய்து பார்த்து குட்டீசுக்கும், உங்களுக்கும் பிடிச்சுதான்னு சொல்லுங்க‌ தோழீஸ்.

5
Average: 5 (6 votes)

Comments

அக்கா ராகி மால்ட் எத்தனை நாட்கள் நன்றாக இருக்கும்? கேழ்வரகு வடை, ரொட்டி தான் காலை டிபன். . என் மாமியார் செய்தாங்க..சமையலில் அவுங்களும் எக்ஸ்பெட்..பொடியெல்லாம் அவுங்க அரைப்பாங்க...இட்லி பொடி வீட்டில் தான் செய்வோம்...

ரொம்ப அருமையான குறிப்புகள். ...ரொம்ப தாங்ஸ்..செய்துட்டு மறுபடியும் பதிவு போடுறேன்க்கா. ...

அன்பு தோழி. தேவி

நான் இந்த‌ அளவில் செய்து பாதியை ஃபிரிஜிலும் மீதியை கிச்சன் டிராயர்லயும் வைத்துள்ளேன். டைட் கண்டெய்னரில் வைத்தால் ஒரு மாதம் இருக்கும் அஸ்வதா.
செய்துட்டு சொல்லுங்க‌.
உங்க‌ மாமியாரின் சமையல் குறிப்பையும் எங்களுக்கு சொல்லுங்களேன் தோழி.;))
பதிவுக்கு நன்றி பா:))

7கப் கேக் இளகுத் தன்மையுடன் உள்ளதே என்ன செய்வது? ப்ளிஸ் சொல்லுங்கள். ...தட்டில் இருக்கிறது. .இரவுதான் செய்தேன். ... என்ன செய்வது?

அன்பு தோழி. தேவி

7கப் கேக் இளகுத் தன்னையுடன் இருக்கு என்ன பண்ணலாம்? எதனால் இப்படி?

அன்பு தோழி. தேவி

இப்போது தான் உங்கள் பதிவு பார்த்தேன்.
எனக்கு கேக் பற்றி தெரியாது பா.
யூ ட்யூபில் பாருங்க‌ ஐடியா கிடைக்கலாம்.
இல்லாவிடில் இமா, அல்லது வனியிடம் கேட்டால் தெரியும் தேவி.

இப்ப கொஞ்சம் கெட்டியாகின்றது....நன்றி அக்கா......

அன்பு தோழி. தேவி

7கப் கேக் இளகியிருக்கு என்ன பண்ணலாம்? ஆனால் அருமையாக இருக்கு...சிரிக்காதீங்க வெயிலில் உலர்த்துகின்றேன்...

அன்பு தோழி. தேவி

//http://www.arusuvai.com/tamil/node/3463// பாருங்க‌ ஐடியா கிடைக்கும்.

//அருமையாக இருக்கு...சிரிக்காதீங்க வெயிலில் உலர்த்துகின்றேன்...//...))))))
டேஸ்டா இருக்கா..அப்புறமென்ன‌ சாப்பிடுங்க‌. செய்ய‌ செய்ய‌ பழகிவிடும் தேவி. அடுத்த‌ முறை செய்யும் போது பக்குவம் தானா வரும் பாருங்க‌..;))

முதலில்... மன்னிக்க வேண்டும் நிகி. :-)
~~~~
தேவி... கேள்வியை முன்பே பார்த்தேன். நீங்கள் நிகிலாவின் பதிவைக் குழப்பாமல் வேறு பொருத்தமான இழையில் கேட்டிருக்க வேண்டும்.

எனக்கு இதைப் பற்றித் தெரியாது. ஒரு தடவை கீழே உள்ள இழைகளை முழுவதாகப் படியுங்கள். உங்களுக்குத் தேவையான பதில் கிடைக்கலாம். கிடைக்காவிட்டால் குறிப்பின் கீழே உங்கள் சந்தேகத்தைப் பதிவு செய்யுங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/3463
http://www.arusuvai.com/tamil/node/3409
http://www.arusuvai.com/tamil/node/16571
http://www.arusuvai.com/tamil/node/1305

‍- இமா க்றிஸ்

//முதலில்... மன்னிக்க வேண்டும் நிகி. :-)//
ஊஹூம்...தான்க்ஸ் தான் சொல்லணும்.
அவன் இல்லாமல் கேக் செய்வதை நானும் தெரிந்து கொண்டேன்...;)

அவன் வாங்கி சும்மாவே இருக்கு இமா. நானும் கேக் செய்து பார்க்கணும் ஆர்வமா இருக்கேன். அடுத்த‌ வாரம் டெமோ வராங்க‌. அப்புறம் செய்யணும்.;))

தேவிக்கு இப்போ புரியுதா??

புரிகிறது அக்கா...சாரி என்னால் வர இயலவில்லை.

அன்பு தோழி. தேவி

ரொம்ப நன்றி. ....

அன்பு தோழி. தேவி

கூட்டுக்கு பருப்பு வேக வைக்கும்போதே பச்சைமிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி போட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்...பச்சைமிளகாயை கண்டுப்பிடிக்கனும்...சிரகத்தை நுணுக்கிப் போட்டால் இன்னும் அருமையாக இருக்கும். ...

அன்பு தோழி. தேவி

கூட‌ கொஞ்சம் டிப்ஸ்.
//கூட்டுக்கு பருப்பு வேக வைக்கும்போதே பச்சைமிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி போட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்//
எங்க‌ வீட்ல‌ எல்லோரும் பச்சை மிள‌காயை பொறுக்குவாங்க‌ தேவி. வாயில் கடிபட்டு விடும்னு நான் அரைத்து விடுவேன்.
சீரகம் மிகவும் நல்லது. நானும் போடுவேன். சீர் + அகம் =சீரகம். உடலின் உட்புறத்தை சீராக்கும் வல்லமை படைத்தது சீரகம்.
நன்றி தேவி டிப்ஸ்க்கு:))

hi... punjab godhumai nu potrukingle...
na godhumai ration la vanguren.... adhu use panlama

அன்பு நிகிலா,

மாவு திரிச்சு வைப்பதோட, போனஸா, சாம்பார் பொடி குறிப்பும் குடுத்திருக்கீங்க, நன்றி.

இந்த போஸ்டிங்கும் புக்மார்க் செய்துட்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ரேஷன் ல‌ கிடைப்பது பஞ்சாப் கோதுமை தான் சுபா. தாராளமா யூஸ் பண்ணலாம். அதோடு சேர்க்க‌ சம்பா கோதுமையை மட்டும் கடையில் வாங்குங்க‌.
செய்துட்டு சொல்வீங்க‌ சூப்பர்னு :))

அன்பு சீதா
//புக்மார்க் செய்துட்டேன்.// நன்றி சீதா.
உங்களுக்கு பயன்பட்டதில் எனக்கு மிக்க‌ மகிழ்ச்சி.
சப்பாத்தி மாவு சாஃப்ட்டா வரும். குழம்பு பொடி பாட்டி சொல்லித் தந்தது. அன்று முதல் வரை இதே முறையில் தான் தயாரிக்கிறேன்.
சாம்பார் பொடியும் பாட்டிம்மா வீட்ல‌ தான் செய்வாங்க‌.
அவங்க‌ சமையல் எங்க‌ ஃபேமிலியில் ரொம்ப‌ பிரசித்தம். யாராவது நல்லா சமைச்சா பாட்டி சமையல் மாதிரி இருக்குன்னு பாராட்டுவோம். புத்தகம் பார்த்தும், வானொலி கேட்டும் புது டிஷ் செய்வாங்கன்னு அம்மா சொல்லுவாங்க‌.
நன்றி சீதா:))

na kandipa try panitu solren... ungloda response ku romba thanks

ஆவலோடு காத்திருக்கேன் ...சொல்லுங்க‌ சுபா:))

idli mavoo

ரொம்ப சூப்பராக சொல்லி இருக்கீங்க. வருடம் வருடம் எங்க வீட்ல இடியாப்பம் மாவு 30 கிலோ அரைத்து வைத்திடுவாங்க ஆனால் இடியாப்பம் மாவில் முறுக்கு,காரச்சேவு செய்யலாம் இப்பதான் உங்க பதிவே பார்த்தபின் தெரியும்.

உலர்ந்த‌ இட்லி மாவில் இட்லி மிருதுவாக‌ வரும்னு தோணல‌. தோசை மாவு தயாரிக்கலாம்.

நன்றி:))
இடியாப்ப‌ மாவில் எல்லாமே சூப்பரா வரும். செய்து பாருங்கள்.