என் தோழிக்கு உதவ உங்கள் ஆலோசனை குடுங்கள் தோழிகளே

என் தோழிக்கு காதல் திருமணம். அவள் வீட்டில் அவள் அம்மா சம்மதிக்க வில்லை. அவளுக்கு அம்மா மேல் பாசம் அதிகம். அவள் கணவரும் மிகவும் நல்லவர். அவர்கள் வீட்டில் பார்த்து முடித்திருந்தால் கூட இப்படி ஒரு மனிதர் கிடைத்திருக்க மாட்டார் அவள் 3 வருடங்களுக்கு மேல் போராடியும் அவள் அம்மா சம்மதிக்க வில்லை வேறு ஜாதி என்பதால். ஆனால் அவள் அப்பா நீ அவரயே திருமணம் செய்து கொள் என்று திருமணம் செய்து வைத்தார்.

அவள் கணவர் அவளை நன்றாக பார்த்து கொள்கிறார். இருந்தாலும் இவளால் அவள் அம்மா வை நினைக்காமல் இருக்க முடியவில்லை. மிகவும் வேதனை படுகிறாள். இந்த காரனத்தால் அவள் கணவர் குடும்பத்துடன் அவளால் ஓட்டி வாழ முடியவில்லை என்று சொல்கிறாள்.

அவள் கணவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவளுடன் நம்ம வீட்டு மருமகள் என்று உரிமை யோடு இல்லாமல் ஒரு மூன்றாம் மனிதராகவே நினைப்பதாக சொல்லுகிறாள். அவர்கள் இப்படி இருப்பதால் அவர்களிடம் எந்த உதவி கேட்கவும் எனக்கு மிகவும் கஷ்டமா இருக்கு என்று சொல்லுகிறாள். அதனால் அவள் கணவர் மூலமாகவே கேட்கிறாள்.

ஆனால் சில சமயம் அவள் கணவர் நீயே நேரடியா அவர்களிடம் கேட்டு கொள் என்று சொல்லுகிறாராம். அவர்கள் அப்படி எதுவும் பேசாமல் உம்மென்று இருக்கும் போது நான் மட்டும் எப்படி பேசுவது என்று கேட்கிறாள். சில சமயம் அவள் சொல்லுவதும் சரி என்று தோனுகிறது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் தோழிகளே.

ஹாய் கீதா,அறுசுவை பகுதிக்கு புதியவள்.பலமாதங்களாக‌ வாசித்துபயனடைந்து
கொண்டிருந்தேன்.வயது மூத்தவர்கள் தீர்வு சொன்னாலும்அதைஏற்றுக்கொள்ளும்
மனபக்குவம் வேண்டும்.தோழி காதல் திருமணம் என்கிறீர்கள்.வயது எனஎன்று
பதிவில்லை.18 to 21 என்றால் மனமுதிர்ச்சி இருக்காது அதனால் உறவுகளுடன்
ஒத்துபோகமாட்டார்.விளையாடும் வயதில் விளையாட‌ வேண்டும்.படிக்கும் வயதில் படிக்கவேண்டும்.திருமணவயது வரும்போது பெரியோர்கள் பார்த்துக் கொள்வார்கள்.அம்மா மேல் பாசம் அதிகம் என்றால் அம்மாவிற்க்குபிடித்தமாதிரி நடந்துகொண்டிருக்கலாமே!பிள்ளையை சுமந்து,பெற்று,வளர்த்து,ஒவ்வொரு பிறந்தநாள்கொண்டாடி,பண்டிகைகளுக்கு ருசியாக‌சமைத்துகொடுத்து,படிக்க வைத்து,பெண் குழந்தை என‌ வயற்றில் நெருப்பைகட்டிக்கொண்டு, கௌரவமாக‌ மணம் முடித்து,பேரன்பேத்தி பார்க்கவேண்டுமே என‌ 18,19,வருடங்களாக‌ அந்த அன்புத்தாய் கனவுகண்டுகொண்டு கல்லூரிக்குஅனுப்பியிருப்பார்.,அந்ததாய்க்காக‌ நாம் ஏன் தியாகம் செய்யக்கூடாது?பொறுமைகட்டுப்பாடு எங்கே போனது?தாய் கெடுதல் செய்வாளா? மூன்றுவருட‌ உறவுக்குதரும் பாசம், உரிமையைஇத்தனை வருடங்களாக‌ பாதுகாத்து வளர்த்தவளுக்குஏன் தந்திருக்ககூடாது?அத்தாயின் இதயம் எவ்வளவு ரணமாக‌ இருக்கும்?அவள்உயிருள்ளவரைமகளைநினைத்துகண்ணீர் விடுவாள்,பெற்றோர் பார்த்து மணம்செய்தால் உறவுகளை கேட்கமுடியும்.அரவணைத்து செல்வதெப்படி என பெண்ணுக்கு சொல்லமுடியும்.இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கின்றதே!தியாகத்தின் மறுபெயர் அம்மா!மறப்பது மகாபாவம்.
போராட்டமான‌ பாதையை தேர்ந்தெடுத்ததால் போராடத்தான் வேண்டும்.

மேலும் சில பதிவுகள்