கம்பு வடை

தேதி: April 29, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கம்பு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
வரமிளகாய் - 3
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு கப்
மஞ்சள் தூள் - சிறிது


 

கம்பை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்த கம்பு, வரமிளகாய், சோம்பு சேர்த்து ரவை பதமாக அரைத்து எடுக்கவும். அரைக்கும் பொழுது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நறுக்கி வைத்தவற்றை சேர்த்து அதோடு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசையவும்.
இலை அல்லது பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி எலுமிச்சை அளவு மாவை எடுத்து அதிரசம் தட்டுவது போல தட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து தட்டிய வடைகளை போட்டு சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கம்பு வடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Healthy tasty vada :) super.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வடை சூப்பர் .

Be simple be sample

எனது குறிப்பினை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி ரேவ்ஸ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹெல்த்தி அன்ட் கிரிஸ்ப் வடை
டிப்ஸ் நல்லா இருக்கு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஒரு சந்தேகம் ஸ்வர்ணா, வடை மாவு பிடிக்க வருமா. எண்ணெயில் போட்டதும் பிரிந்து விடாதா?? செய்து பார்க்க ஆவல்.