கைப்பை - 2

தேதி: April 29, 2015

4
Average: 4 (6 votes)

 

விருப்பமான நிறத் துணி - 17 செ.மீ அகலம் 48 செ.மீ நீளம்
ஸ்பாஞ்ச் லைனிங் துணி - மேலே குறிப்பிட்டுள்ள அதே அளவு
கோல்டன் லேஸ் - ஒரு முழம்
நாடா லேஸ் - தேவையான அளவு
சிறிய ரோஜாப்பூ அல்லது பெரிய பட்டன்
ஊசி, நூல்

 

மேலே குறிப்பிட்டுள்ள அளவில் விருப்பமான நிறத் துணி மற்றும் அதே அளவில் லைனிங் துணியை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஸ்பாஞ்ச் லைனிங் துணியின் ஸ்பாஞ்ச் மேலே தெரியும்படி வைத்து ஆரஞ்சு நிறத் துணியின் கெட்ட பக்கம் உள்ளே இருக்கும்படியும் வைத்து மேல் பக்கம் தவிர்த்து மற்ற மூன்று பக்கங்களையும் இணைத்து தைத்து விடவும்.
மேலே தைக்காமல் வைத்திருக்கும் பக்கத்தின் வழியாக நல்ல பக்கமாக திருப்பிக் கொண்டு மேலே இருக்கும் துணியை உள்பக்கமாக மடக்கி வைத்து தைக்கவும்.
பிறகு மேல்பக்கத்தின் ஓரத்தில் மஞ்சள் துணியின் மேல் கோல்டன் லேஸை வைத்து தைக்கவும்.
மேல் பக்கத்தில் இருக்கும் கோல்டன் லேஸிலிருந்து 33 செ.மீ இடைவெளி விட்டு மேலும் ஒரு கோல்டன் லேஸை வைத்து தைக்கவும்.
இப்போது மேலே லேஸ் வைத்திருக்கும் இடத்திலிருந்து 10 செ.மீ இடைவெளி விட்டு மீதம் கீழே இருக்கும் துணியை இரண்டாக மேல் நோக்கி மடிக்கவும். நடுவில் வைத்து தைத்த கோல்டன் லேஸ் கீழே பார்டர் போல வரும். அதில் வாய் பகுதிக்காக மேல் பக்கத்தை விடுத்து மற்ற இரண்டு பக்கத்தையும் சுற்றிலும் தைக்கவும்.
அதன் பிறகு மடக்கிய ஓரத்தின் மேல் புறத்தில் நாடா லேஸ் வைத்து ஊசி நூலால் கைத்தையல் போடவும். தையல் தெரியாமல் உட்பக்கமாக தைக்கவும்.
ரிப்பன் ரோஸை வைத்து தைத்த பகுதியின் மேல்புறத்திலிருந்து சற்று கீழே இறக்கி வைத்து கைத்தையல் போடவும். பின்னர் கோல்டன் லேஸை இரண்டாக மடித்து ரோஸின் உள்ளே நுழையும் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதன் இரண்டு முனைகளையும் படத்தில் உள்ளபடி பையின் மேல் பக்கத்தில் ( லேஸ் இருக்கும் இடத்தில் ) வைத்து தைக்கவும். தையல் தெரியாமல் தைக்கவும்.
அழகிய கைப்பை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாக இருக்கிறது முசி. விளக்கமும் அருமை.

‍- இமா க்றிஸ்

Nice musi... Good work:)

Kalai

குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் டீமிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கும்,பாராட்டிர்க்கும் மிக்க‌ நன்றி;இமாம்மா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி,கலா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.