மரவள்ளிக்கிழங்கு பொரியல்

தேதி: May 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
உப்பு - தேவைக்கேற்ப‌
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த‌ மிளகாய் - 2
பூண்டு - 4
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அரை வேக்காடு வேக வைத்து எடுக்கவும். கிழங்கை ஆறவிட்டு சிறு துண்டுகளாக‌ நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பூண்டு, காய்ந்த‌ மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வேக‌ வைத்து நறுக்கி வைத்த‌ கிழங்கு துண்டுகளை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் வைத்து வேக‌ விடவும்.
தண்ணீர் சுண்டி வெந்த‌ பின்னர் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான‌ கிழங்கு பொரியல் தயார். இது மாலை நேர‌ சிற்றுண்டியாக‌ சாப்பிட‌ அருமையாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

அன்பு மக்களே,

என் குறிப்புக்கு எப்பவும் நான் தான் முதலில் கருத்து வெளியிடுவேன் அட்மினுக்கு நன்றி சொல்லி. இந்த‌ முறை வேறு யாராவது போடட்டும். வெயிட் பண்ணிட்டு அப்றம் நாம‌ போடலாம்னு பாத்தா 3 நாளா யாருமே வரல‌ இந்த‌ குறிப்பு பக்கம். என்ன‌ கொடும‌ மக்களே? இது இந்த‌ மரவள்ளி கிழங்குக்கு வந்த‌ கேடா இல்லை பாலாவுக்கா? உண்மையா இது ரொம்ப‌ நல்ல‌ சுவையான‌ டிஷ்ங்க‌. ட்ரை பண்ணி பாத்துட்டு கருத்து எழுதுங்க‌. என்னடா கருத்த கூட‌ கேட்டு வாங்குதே இந்த‌ பொண்ணுனு நினைக்கற‌ உங்க‌ மைன்டு வாய்ஸ் கேக்குது. ஆனா என்ன‌ பண்ண‌? ஆசை யார‌ விட்டுச்சி?

எல்லாம் சில‌ காலம்.....

இது ருசியாக இருக்குமென்பது எனக்குத் தெரியும்பா. நானும் இதே போல செய்வேன் பாலா. கொஞ்சம் தேங்காய் சேர்ப்பேன். நாங்க இந்த கிழங்கை கப்ப கிழங்கு என்று சொல்வது வழக்கம். மாலை நேர ஸ்நாக்காக நாங்க சாப்பிடுவோம். தொட்டுக் கொள்ள மீன், மட்டன் குழம்பு அல்லது இட்லி பொடி கூட பயன் படுத்துவோம்.

சூப்பர் வாணி. எனக்கு நீங்க‌ சூப்பர் டிப்ஸ் குடுத்து இருக்கீங்க‌. நானும் மீன் (அ) மட்டன் (அ) இட்லி பொடி ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....