ராகி பூரி

தேதி: May 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

ராகி மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
ரவை - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பூரி மாவாக பிசைந்து கொள்ளவும்.
மாவை நீளமாக உருட்டி அதை சிறுத் துண்டுகளாக வெட்டி உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் பூரிகளாக திரட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான ராகி பூரி தயார்.

கோதுமை மாவை விட ராகி மாவு தண்ணீர் அதிகம் எடுப்பதால் பதமாக தண்ணீர் தெளித்து பிசையவும். இல்லையெனில் மாவு சீக்கிரம் வரண்டு திரட்டும் போது வெடிப்புகள் வரும்.

சப்பாத்திக்கு மாவை தளர பிசைந்து சுடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

விதவிதமான பூரிரிரிரிரி கலக்குரேல்ல் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நீங்க‌ தான் அந்த‌ பூரி ஸ்பெஷலிஸ்டா? உங்க‌ பூரி சூப்பரா இருக்கு. ரொம்ப‌ நேரமும் புஸ்ஸுனு இருக்கு எப்டி? என்ன‌ சேக்கறீங்க‌ அதுக்கு?

எல்லாம் சில‌ காலம்.....

பூரி சூப்பர். நானும் இதே பூரி செய்வேன் ரேவதி. பூரி மாஸ்டர் ஆயிட்டீங்க. :))