நானும் ஒரு பெண்

பூக்காரப் பார்வதியின் கைக்கள் வேகமாகப் பூக் கட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் மனமோ தனது வாழ்க்கை புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டு இருந்தது. பதிமூன்று வயதில் கல்யாணம், பதினெட்டு வயதிற்குள் இரண்டு பிள்ளைகள், இருபது வயதிற்குள் கணவனை இழந்த‌ விதவை என்ற‌ பட்டம். அன்று ஆரப்பித்த‌ பூக்கட்டும் உத்தியோகம் இன்று வரை தொடர்ந்து நடக்கிறது என்று அவள் எண்ணம் ஓடியது.

அக்கா, அக்கா என்று கூப்பிட்டுக் கொண்டே கோதை வந்தாள். வா கோதை என்று பார்வதியும் குரல் கொடுத்தாள். ''என் பெண்ணுக்கு வர‌ மாதம் வளைக்காப்புக்கா, நீங்க‌ தான் பூச்சடை தைத்து கொடுக்கணும், அவளுக்கு தலை முடியும் குறைவு, ஆளும் குள்ளம் அதணாலே எடைக் கொறைவா, கனம் அதிகமில்லாம‌ ஒரு பூச்சடை செய்துக் கொடுக்கனும்'' என்று கோதை தன் பேச்சை முடித்தாள். ''நீ கவலையே படாதே, பூவை குறைத்து கலர், கலர் உல்லன் நூல், சரிகை சேர்த்து அதிக‌ கனமில்லாத‌ பூச்சடை தைத்து தருகிறேன்' என்று நம்பிக்கை கொடுத்தாள் பார்வதி. ''சரிக்கா ரொம்ப‌ சந்தோஷம். ஆமா நீ எப்பொதான் இந்த‌ எண்ணையிறங்கிய கம்மலை மாற்றப் போறியோ ம்ம் '' என்று பெருமூச்சு விட்டு வெளியே சென்றாள் கோதை.

மறுபடியும் தன் கதையை நினைத்துக் கொண்டாள் பார்வதி. பெரியவனுக்கு கல்யாணம் செய்து தனிக்குடித்தனம் வைத்து விட்டோம். சின்னவனுக்கும் கல்யாணம் செய்துவிட்டோம், அவன் நேரமோ நம்ப‌ நேரமோ புண்ணியவதி தலை பிரசவத்தில் சிக்கலாகி தன் பிள்ளையோட‌ எம‌ லோகம் போய் சேர்ந்து விட்டாள். இரண்டு வருஷமா போராடி இப்ப‌ தா இன்னொரு கல்யாணத்திற்கு ரெடி பண்ணி இருக்கேன், அடுத்த‌ வாரம் கல்யாணம் நு மனசுக்கூள்ள‌ சொல்லிக் கொண்டாள் பார்வதி.

அவள் மகனின் கல்யாண‌ நாளும் வந்து விட்டது, ஓடிஓடி வேலை செய்து கொண்டே தன் பெரிய‌ மறுமகளை தேடினாள். எதிர் வீட்டு படியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை பார்த்து அவளிடம் ஓடினாள். ''சீக்கிரம் புறப்படும்மா பெண் அழைப்புக்கு நீ முதலில் செல்ல‌ வேண்டும்'' என்று அவசரப் படுத்தினாள். ''ஆமா, ஆமா நீங்க‌ முதலில் எனக்கு புதுப் புடவை எடுத்து கொடுங்க‌, அப்பத்தான் நான் பெண் அழைப்பிற்கே செல்வேன்''என்றாள் மறுமகள். அட‌ தேவுடா என்று தன் தலையில் கை வைத்துக் கொண்ட‌ பார்வதி, கல்யாணத்திற்கு மொய் பணம் வரும் அதில் உனக்கு நீ கேட்ட‌ புடவையை எடுத்து தருகிறேன் கோபித்துக் கொள்ளாமல் கல்யாண‌ வேலையை பார்க்கும்படி கெஞ்சினாள். ஆமா நீங்க‌ யார் கல்யாணத்திற்கு மொய் போட்டிக்க‌, இப்ப‌ உங்களுக்கு அவங்க‌ வந்து மொய் போட‌ என்று நொடித்தாள் மறுமகள். பார்வதியோ, கல்யாண‌ செலவுக்கு வைத்து இருந்த‌ பணத்தில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து மறுமகளிடம் கொடுத்து விட்டு, பெண் அழைப்பிற்கு செல்லும்படி சொல்லிவிட்டு அமைதியாக‌ சென்றாள். தன் காதில் இருந்த‌ கம்மலை கையால் தொட்டுக்கொண்டே சென்றாள் பார்வதி.

பார்வதியை பார்க்க‌ வந்தாள் கோதை. ''அக்கா எங்க‌ உங்க‌ எண்ணை இறங்கிய‌ அழுக்கு கம்மல்''என்றாள் கோதை. அந்த‌ அழுக்கு கம்மல் புடவை பணமாக‌ மாறிய‌ கதையை கூறிய‌ பார்வதி, நானும் ஒரு பெண் தானே எனக்குனு இருந்த‌ அந்த‌ அழுக்கு கம்மல் கூட‌ போய்விட்டது கோதை என்று கதறும் பார்வதியை தேற்றத் தெரியாமல் விக்கித்தாள் கோதை.

5
Average: 5 (5 votes)

Comments

கதை அருமையா இருக்கு. இது கதையா இல்ல‌ உண்மை சம்பவமானு என்ன‌ தோணுது. ஏனா இப்போ பல‌ பேரோட வாழ்க்கை சூழல் இப்படி தான் இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

கதை ரொம்ப நல்லா இருக்குங்க.
அருமைங்.

நட்புடன்
குணா

கதை அருமையா இருக்கு ரஜினி. இன்னும் நிறைய எழுதுங்க.

‍- இமா க்றிஸ்

//நானும் ஒரு பெண் தானே எனக்குனு இருந்த‌ அந்த‌ அழுக்கு கம்மல் கூட‌ போய்விட்டது கோதை //
மனசை தொடும் வரி.....
ஆம்...அவளும் பெண் தானே........

ஹாய்,

''கதை அருமையா இருக்கு''பாராட்டுக்கு நன்றி.உண்மை சம்பவம்/ கற்பனை கதா பாத்திரம் கலந்ததுமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அன்பு சகோதரே,
'''கதை ரொம்ப‌ நல்லா இருக்குங்க‌,அருமைங்'''பாராட்டுக்கு நன்றிங்க‌.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

இமா,

''கதை அருமையா இருக்கு, இன்னும் நிறைய‌ எழுதுங்க‌'''பாராட்டுக்கு நன்றி இமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

என் மனசை தொட்ட‌ வரிகள் தான் உங்கள் மனசையும் தொட்டு உள்ளது. நன்றி நிகிலா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

கதை நல்லாயிருக்கு ரஜினி மேடம். :)

அன்பு ரஜினி மேடம்,

மனசை நெகிழச் செய்த சிறுகதை. ரொம்ப அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி