ப்ளாஸ்டிக் பாட்டிலில் தோடு

தேதி: May 6, 2015

5
Average: 5 (2 votes)

 

ப்ளாஸ்டிக் பாட்டில்
கோல்டன் மணி
தோட்டில் பின்புறம் வைக்கும் சுரை
மார்க்கர்
கம்

 

பாட்டிலின் மையப்பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதில் மார்க்கரை வைத்து நடுவில் ஒரு பெரிய வட்டமும் அதை சுற்றி 6 இதழ்கள் போல் சிறிய வட்டங்களும் வரைந்துக் கொள்ளவும்.
மேற்சொன்ன அளவில் மேலும் ஒரு பூவை வரைந்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு முன்பு வரைந்த 2 பூக்களின் அளவை விட சிறியதாக மேலும் இரண்டு பூக்கள் வரைந்து வைக்கவும்.
வரைந்து வைத்திருக்கும் எல்லா பூக்களையும் அந்த வடிவத்திலேயே நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மார்க்கரை வைத்து பெரிய அளவில் இருக்கும் பூக்களுக்கு சிவப்பு நிறமும், அதை விட சிறியதாக இருக்கும் பூக்களுக்கு பச்சை நிறமும் கொடுக்கவும்.
பூக்களின் ஓரங்களை தீயில் காண்பித்து மடக்கி விடவும். இதைப் போல் 4 பூக்களையும் மடக்கி வைக்கவும்.
சிவப்பு நிற பூவின் நடுவில் கம் வைத்து அதன் மேல் பச்சை நிற பூவை வைத்து ஒட்டவும்.
பச்சை நிற பூவின் நடுவில் கம் வைத்து கோல்டன் மணியை வைத்து ஒட்டவும். மற்ற இரண்டு பூக்களையும் வைத்து மற்றொரு தோடு செய்துக் கொள்ளவும்.
இரண்டு பூக்களிலும் பின்புறம் தக்கையுடன் இருக்கும் தோட்டின் பின் பகுதியை கம் வைத்து ஒட்டவும்.
பாட்டிலை வைத்து செய்த அழகிய தோடு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் ஐடியா. நானும் செய்யப் போகிறேன்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ அழகா இருக்கு,
நானும் இதே போல‌ பிளாஷ்டிக் பாட்டில்ல‌ ஹூக் வச்சு தோடு செய்துருக்கேன்,
இந்த‌ மாடலும் சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *