சிக்கன் குருமா

தேதி: May 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (5 votes)

 

சிக்கன் – அரை கிலோ
தேங்காய் – 3 துண்டு
பச்சைமிளகாய் – 2
முந்திரி – 10
இஞ்சி – ஒரு துண்டு
மலை பூண்டு – 6 பல்
சிகப்பு மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
தக்காளி – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு


 

மிக்ஸியில் தேங்காய் மற்றம் பச்சைமிளகாயை போட்டு நன்கு மசியும்படி அரைக்கவும்.
அரைத்த விழுதில் முந்திரி, இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை தனியாக எடுத்து வைக்கவும்.
பேனில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளித்து வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு சிக்கனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கிளறி விடவும்.
சிக்கன் கலவையை மூடி வைத்து வேக விடவும்.
10 நிமிடங்கள் கழித்து சிக்கன் வெந்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான சிக்கன் குருமா தயார்.
இது இட்லி, சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரேவா பேக். சூப்பரான‌ குழம்பு. பாக்கற‌ அப்பவே டேஸ்டா இருக்கும்னு தோணுது. மேலே கொஞ்சம் கொத்தமல்லி தூவி இருந்தா பார்க்கவும் இன்னும் சூப்பரா இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

chihcken kuruma parkave alaga erukku,i must try it

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

சூப்பர் சிக்கன் குருமா.அதுவும் எனக்கு பிடிச்ச இட்லி கூட சூப்பரா இருக்குமே.

Be simple be sample