ஆரோக்கிய உணவுப்பொருட்கள் விற்பனை வாய்ப்பு

நான் கம்பு,கேழ்வரகு,சாமை,திணை, வரகு,குதிரைவாலி போன்ற உடலுக்கு நலம்சேர்க்கக்கூடிய சிறுதானியங்கள் பயன்படுத்தி லட்டு,ரெடிமிக்ஸ் வகைகள்,ஆரோக்கிய பானம் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளேன்.மிகவும் குறைந்த பணம் முதலீடு செய்து எங்களிடம் வாங்கி உங்கள் பகுதியில் விற்பனை செய்வதன் மூலம் மாதந்நோறும் குறைந்தது 30000 முதல் வருமானம் பெறலாம். விற்பனை பற்றிய ஆலோசனை பயிற்சி வழங்கி உங்களுடன் இணைந்து உங்கள் வாழ்வில் முன்னேற உதவி செய்கிறோம். உங்கள் தேவைக்கும் அனுப்பி வைப்போம்.
மேலும் விபரங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எங்களது
அலைபேசி எண் 88 07 95 22 16
கவனிக்கவும்.....பொழுதுபோக்கு பதிவாக கருதவேண்டாம்.தேவைப்படுபவர்களும் வாழ வருமானம் தேவை என்போர் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

அறுசுவையில் விளம்பரத்துக்கு அனுமதி இருக்கிறதா இல்லையா என்பதை முதலில் நிச்சயம் செய்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ஒரு த்ரெட் ஆரம்பிக்க வேண்டாம். ஒரே த்ரெட்டில் எல்லாவற்றையும் பதிவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

மன்னிக்கவும் இமா மேடம் வேலைவாய்ப்பு பகுதியில் சம்பாதிக்கவும்,தொழில் பகுதியில் தொழில் கற்று துவங்கவும் வருமானம் பெறவும் பதிவிட்டுள்ளேன்.விளம்பரம் செய்ய எனது பதிவு இல்லை.விளம்பரம் இங்கு செய்ய விரும்பமில்லை.விளம்பரத்திற்கு எவ்வளவோ இடம் இருக்கு.எனது தயாரிப்பின் தரமும்,விலையுமே எனது வளர்ச்சிக்கு துணை நிற்கும்.எவ்வளவோ பதிவுகள் வியாபாரம்,தொழில் பயிற்சி,விற்பனை பற்றி அறுசுவையில் உள்ளதை, பதிவிடுதலை பல வருடங்களாக கவனித்து வருகிறேன்.ஒரே மாதிரி பதிவு சிலமுறை பதிந்துள்ளதையும் இப்போது கவனித்தேன்.அவர்கள் பதிவிலெல்லாம் உங்கள் advice எதுவுமே காணோம்.ஏதேனும் சில ஆயிரங்கள் சம்பாதிக்க முடிந்தால் குடும்பத்தில் பல பிரச்னை தீர்க்கலாமே என்று தேடிக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் அவர்களுக்காகவே பதிவிட்டேன். ஏனெனில் நானும் வருமான வாய்ப்பைதேடி அலைந்தவள்..

மாற்றம் ஒன்றே எங்கும் என்றும் எதிலும் மாற்றத்தைக் கொண்டு வரும்.

விற்பனை பற்றிய ஆலோசனை பயிற்சி வழங்கி உங்களுடன் இணைந்து உங்கள் வாழ்வில் முன்னேற உதவி தேவை, வாழ வருமானம் தேவை

பயிற்சி பற்றிய ஆலோசனை தேவை

அனைவருக்குமான அறிவிப்பு..

இது குறித்து பல இடங்களில் நான் குறிப்பிட்டு இருக்கின்றேன். இந்த தொழில் வேலைவாய்ப்பு பிரிவு ஆரம்பித்ததின் நோக்கம் வேறு. என்ன மாதிரியான வாய்ப்புகள் இருக்கின்றன, என்ன செய்யலாம் என்பதைப் பற்றி உரையாடுவதற்காக தொடங்கப்பட்ட பிரிவுகள் இவை. நீங்கள் இதை செய்யலாம், இப்படி செய்யலாம் என்று ஆலோசனைகள் கொடுப்பதையும், என்னிடம் வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு இவ்வளவு கட்டணம் கொடுங்கள் என்று சொல்வதையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள இயலாது. இருந்தாலும் நான் முந்தைய பதிவுகளில் சொன்னதுபோல், இந்த பிரிவில் அப்படி ஒரு கட்டுப்பாடு கொண்டு வருவதுகூட சிரமமாகத்தான் இருக்கின்றது. அதனால்தான் எல்லா பதிவுகளையும் நீக்க முடிவதில்லை.

இலவச விளம்பரங்களை அனுமதித்தல் எங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் விசயம். அதேசமயம், இங்கே தொழில், வேலைவாய்ப்பு என்று பிரிவுகளைக் கொடுத்துவிட்டு இப்படி பதிவிடக்கூடாது, அப்படி பதிவிடக்கூடாது என்று கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருக்கின்றது. அதனால் தொழில், வேலைவாய்ப்பை தனித் தளமாக கொண்டு செல்வது என்று முடிவு செய்து அதற்கான பணிகளை முன்பே தொடங்கினோம். முதலில் தமிழில் மட்டும் என்று முடிவெடுத்து பணிகளை ஆரம்பித்தோம். அது ஒரு சிறிய வட்டத்திற்குள் இருக்கும் என்பதால், பல்வேறு தொழில் வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்கு வசதியாக, எல்லோரையும் சென்றடைவதற்கு வசதியாக அதை ஆங்கிலத்தில் கொண்டு வருவது என்று முடிவு எடுத்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். அது முடிவடைந்த பிறகு இந்த பிரிவுகளை அறுசுவையில் இருந்து நீக்கிவிடலாம் என்று எண்ணி இருந்தோம். ஆனால் இங்கே தொடர்ந்து பதிவுகள் வருவதால் முன்கூட்டியே அதைச் செய்ய வேண்டியுள்ளது.

வேலை வாய்ப்பு, தொழில் இரண்டு பகுதிகளையும் மூடப்பட்ட பிரிவுகளாக அறிவிக்கின்றோம். அதில் எந்த பதிவுகளும் இனி கொடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். ஒரு பதிவை அனுமதித்து ஒரு பதிவை அனுமதிக்கவில்லையென்றால் அது கேள்விக்குரியதாகிவிடுகின்றது. எதை அனுமதிப்பது, எதை நீக்குவது என்பது எங்களது உரிமை என்றாலும், இப்படி ஒவ்வொரு முறை விளக்கம் கொடுக்கும் சிரமத்தை தவிர்ப்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுகின்றோம். இனி இந்த இரண்டு பகுதிகளிலும் எந்த பதிவுகளையும் கொடுக்க வேண்டாம் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவிக்கின்றோம்.

விரைவில் தொழில் வாய்ப்புகள் குறித்த அறுசுவை குழுமத்தின் தனித்தளம் வெளிவரும். அதில் தேவையற்ற கட்டுப்பாடுகள் இருக்காது. உண்மையாக தொழில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் அது பயனுள்ள தளமாக இருக்கும். சிறிது காலம் பொறுத்திருங்கள். பின்னர் உங்கள் தொழில், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை இலவசமாக அந்த தளத்தில் வெளியிடலாம்.

மேலும் சில பதிவுகள்