குழந்தைக்கு தலையில் அரிப்பு

வணக்கம் தோழிகளே என்னுடைய மகளுக்கு 41/2 வயது ஆகிறது.அவளுக்கு வலது பக்க தலையின் பின்புறம் வெள்ளை வெள்ளையாக உள்ளது. வேறு எங்கும் அது போல் இல்லை. அரிப்பும் உள்ளது. அவளுக்கு pigeon baby oil, shampoo body wash use பண்ணுறேன்.வாரத்தில் 3 நாட்கள் தலைக்கு குளிப்பாட்டிவிடுவேன். அவளுக்கு எப்பொழுதும் தலை வியர்க்கும்.இது நிரந்தரமாக போக என்ன செய்ய வேண்டும்?

//வேறு எங்கும் அது போல் இல்லை.// ஒரு தடவை உங்க டாக்டர்ட்ட காட்டுங்க. அவங்க சொன்னா ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போகலாம். கிட்டத்தட்ட இது போல என் கணவருக்கும் மூத்த மகனுக்கும் சில காலம் இருந்தது. கிட்டத்தட்ட என்று சொன்னது உங்கள் மகனைப் பார்க்காததால். :-) கணவருக்கு இப்போ இல்லை. மகனுக்கு இடைக்கிடை வருவதாகச் சொன்னார். ட்ரீட்மண்ட் பற்றிய விபரம் எல்லாம் இங்க பதிவு செய்ய விரும்பல. உங்க மகன் பிரச்சினை வேறாக இருக்கலாம்.

டாக்டர் என்ன சொல்லுறாங்க என்று வந்து சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்