இந்து முஸ்லிம் திருமணம்

தோழிகளே என் குடும்பத்தில் சிறு பிரட்சனை . என் ஒன்று விட்ட சகோதரி முஸ்லிம் ஆணை காதலிக்கிறாள் .. இப்போது மாப்பிள்ளை பார்க்கும் சமயத்தில் இப்படி கூறுகின்றாள் ..என் குடும்பம் மற்றும் உறவினர் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர் . அவளுக்கு அதை எப்படி புரிய வைப்பது . மதம் மாறி திருமணம் எங்கள் குடும்பத்தில் யாருமே செய்ததில்லை . இப்படி செய்வது உறவினர் இடையி பெரும் அவமானாக கருதுகிறோம் . தாழ்த்தி பேசுவார்கள் ..அவளுக்கு எவ்வாறு அறிவுரை கூறுவது இந்து முஸ்லிம் திருமணம் கடைசி வரை நீடிக்குமா ?? 6 மாத காதல் தான் .. வழி சொல்லுங்கள் . இதில் என்ன தவறு இருகின்றது அப்படி மட்டும் சொல்லி விடாதிர்கள் தோழிகளே. நடைமுறைக்கு சாத்தியமா ஆகின்றதை கூறுங்கள்

\\இந்து முஸ்லிம் திருமணம் கடைசி வரை நீடிக்குமா ??// எத்தனையோ பேர் நன்றாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எந்த திருமணமும் கணவன் மனைவி ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்தும், புரிந்து கொண்டும், யாருக்காகவும் (மூன்றாவது நபர்) ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமலும், அன்புடனும் வாழ்ந்தால் மட்டுமே கடைசி வரை நீடிக்கும். இது தான் நடைமுறைக்கு சாத்தியமும் கூட.

காதலிப்பது தவறா, சரியா என்றெல்லாம் நான் எதுவும் சொல்ல போவதில்லை. ஆனால் பெற்றோர் மனதை காயப் படுத்தி விட்டு வாழ அடியெடுக்கும் அனைவருமே (ஒரே சமூகத்தை சார்ந்தவர்களானாலும்) திருமணத்திற்க்குப் பின் தங்கள் வாழ் நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் தாங்கள் செய்ததற்க்காக மிகவும் மனம் வருந்தும் சூழல் உருவாகி விடுகின்றன.

You must become a muslim first.must wear furka. avoid even sticker pottu kungumam. They canot follow our religion. all will support you except your [arents. best wishes.

You must become a muslim first.must wear furka. avoid even sticker pottu kungumam. They canot follow our religion. all will support you except your [arents. best wishes.

மேலும் சில பதிவுகள்