
அனைவருக்கும் இனியமழை வணக்கம் :) கோவையில் இடி, மின்னல், ச்சோனு மழை. அக்னி நடசத்திரத்தில இவ்வளவு மழைய இப்பத்தான் பார்க்கிறோம்.
முதலில் +2 தேர்வு எழுதி வெற்றி வாகை சூடிய அனைத்து மாணவ செல்லங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
வெற்றி வாய்ப்பை தவறவிட்டதாக எண்ணி மனம் வருந்திக் கொண்டிருக்கும் மாணவச் செல்லங்களே இத்தோடு முடிந்து விடவில்லை வாழ்க்கை.
இன்னும் நீங்கள் தடம் பதித்து விளையாட காத்திருக்கின்றன, பரந்து விரிந்த பச்சை புல்வெளி மைதானங்கள். நின்று நிதானமாக இலக்கை நோக்கி பாயுங்கள்.
எதுவுமே இத்துடன் முடிந்து விட்டது என மனசை தளரவிடாமல் விடாமுயற்சியுடன் வாழ்வை சந்தியுங்கள்.
வெற்றி உங்கள் முன் நாய்க்குட்டியாய் வாலாட்டி நிற்கும். வரப்போகும் வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களும், நல்லாசிகளும்.
கோவை மாணவி செல்வி. விக்டோரியா ஒரு புது மொபைல் அப்ளிகேஷன் கண்டு பிடித்திருக்காங்க.
முதல்ல அவங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பிறருக்கு உதவும் எண்ணத்தில் இவரின் மனப்பாங்கு இருப்பதை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயாய் இவரின் பெற்றோர் இருப்பர் என்பதில் ஐயமில்லை.
எங்க பார்த்தாலும் உங்க மகன்/மகள் மார்க் என்ன? கட் ஆஃப் என்ன? +2 தேர்வு முடிவு வந்ததிலிருந்து இதனைப்பற்றிய பேச்சு எங்க போனாலும் காதில் விழுந்த வண்ணம் இருக்கும்.
இவர் கண்டுபிடித்திருக்கும் TNEA COUNSELLOR என்னும் இந்த அப்ஸ், உங்கள் குழந்தைகள் பெற்றிருக்கும் கட் ஆஃப் மதிப்பெண்ணிற்கு எந்த கல்லூரி கிடைக்கும் என்பதேயாகும்.
இதில் கட் ஆஃப் கால்குலேட்டர், கவுன்சிலர் தேர்வு, விருப்ப தேர்வு ஆகிய பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.
இந்த அப்ளிகேஷனை டிசைன் செய்து முடிக்க இவர் எடுத்துக் கொண்டது வெறும் மூன்று மணிநேரங்கள்தானாம்.
இதனை மொபைலில் டவுன்லோட் செய்து கொண்டால், கவுன்சிலிங் செல்வதற்கு முன்பாகவே ஒரு தெளிவு பிறக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த அப்ளிகேஷன் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாகவும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
வெர்ஷன் 4.2 அதற்கு மேல் உள்ள போன்களில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
மீண்டும் மாணவி விக்டோரியாவிற்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.
மேன்மேலும் பல நல்ல விசயங்கள் செய்து மற்றவர்களுக்கு உதவிடும் வாய்ப்பை கடவுள் இவருக்கு நல்கிட வேண்டிக்கொள்வோம்.
அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களும், நல்ல எதிர்காலம் அமைந்து நாடு நல்வழியில் சென்றிட ஆழ்ந்த பிரார்த்தனைகளும்.
மிக்க நன்றி!!
பின்குறிப்பு:
என் கணிணியில் ஏற்பட்ட விளம்பர மழை காரணமாக என்னால் பதிவுகளை சரியாக இட முடியாத நிலை. மேலும் எழுதி எழுதி காற்றில் கரைந்த பதிவுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ண முடியாது. எதையோ தெரியாம அமுத்திட்டனோ என்னவோ, விளம்பர விதை விழுந்து, வேர் பிடித்து விட்டது. அதனை சரி செய்த பின்பு தான் வருவேன். (இப்ப உன்னைய யார் கேட்டா??) இப்பக்கூட இப்பதிவினை விரிவாக எழுத நினைத்தேன், முடியாம போகிடும்னு ஒரு வித அவசரத்தில் எழுதியுள்ளேன்.
Comments
நல்ல தகவல்
அன்பு அருள்,
டைம்லி பதிவு. சரியான நேரத்தில் சரியான பதிவைக் கொடுத்திருக்கீங்க, பாராட்டுக்கள்.
அப்புறம் உங்களை மாதிரியேதான் இங்கே எனக்கும் பிரச்னை. என்னோட டெஸ்க் டாப்ல ஹார்ட் டிஸ்க் போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
இரவலாக கிடைச்சிருக்கும் லேப் டாப்ல, கீ போர்ட்ல நான் ஒண்ணு அடிச்சா, அது அப்படியே ஜம்ப் ஆகுது. பெரும்பாலும் டைப் பண்ணி முடிக்கிற நேரத்துல மொத்தமும் காணாம போகுது:(:(:(
எப்படியோ சமாளிச்சு டைப் அடிக்கிறேன், சின்ன சின்ன பதிவுகள்தான் கொடுக்க முடியுது.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதா மேடம்
சீதாமேடம், தங்களின் வருகையும், பாராட்டும் மனமகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி!!.
எனக்கு ரொம்ப சுத்தம்...எதை க்ளிக் பண்ணாலும், விளம்பரம்தான் தெரிது :((
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்
தேவையான பதிவு.
மார்க் மட்டுமே வாழ்க்கையல்ல. இன்னும் எத்தனையோ இருக்கு. உலகம் ரொம்ப பெருசு.
மாணவி விக்டோரியாவுக்கு வாழ்த்துக்கள்:))
நிகி
நிகி மிக்க நன்றிப்பா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.