அழுகைக்கு காரணம் உதவுங்கள் தோழிகளே

க்க எனது குழந்தகை்கு ஒரு வயதாகுறது அவள் இரண்டு நாட்களாக அழுது கொண்டே இருக்கிறால் காரணம் என்ன என்று தெரிய வில்லை please help me argent....

அன்புள்ள‌ ஜுபைதா
1. குழ்ந்தையை முதலில் உடல் முழுவதும் வென்னீரில் நனைத்த‌ துணியால் நன்கு துடைத்து விடுங்கள். எங்கேயாவது எறும்பு போன்ற‌ பூச்சிகள் பால் வாசத்திற்கு கைகால் போன்ற‌ இடுக்குகளில் கடித்து , க்டித்துக்கொண்டே இருக்கலாம். இரண்டு முறை துடைப்பது நல்லது , வெய்யில் வேர்வை கச்கச்ப்பு இதனாலும் குழ்ந்தை அழும். உடம்பில் ஏதாவது பூச்சி கடித்த‌ அடையாளம், தடிப்பு, உறுத்தல், காது பக்கம் வீக்கம், எறும்பு அல்லது வேறு பூச்சி ஏதாவது காதில் நுழைந்து இருக்கலாம் (அதற்கு வெது வெதுப்பான தண்ணீரை காதில் நாலு சொட்டு போல‌ ஊற்றினால் இரண்டு நிமிடத்தில் வெளியாகி விடும், தண்ணீர் சூடாக இருக்கக் கூடாது ஆறின தண்ணீர் தான் வேண்டும்)
தொப்புள் இடுக்கையும் பார்க்கவும். தலைபின்னிவிட்டீர்கள் என்றால் தலைப்பின்
காரண்மாகவும் இருக்கலாம்.
தூக்கும்போது இசகுபிசகாக‌ தூக்கி இருந்தால் அதனாலும் அழலாம். உடம்பைத் தொட்டால் தொடவிடாமல் அழுதால் அந்த‌ இடத்தினை பாருங்கள்
யூரின் மோசன் போனாளா? வயிறு ஊதினால் போல் உள்ளதா? தொட்டால் கல் போல் உள்ளதா, அழுகிறாளா? அப்படி இருந்தால் வெற்றிலையில் விளக்கெண்ணெய்யைத் தடவி நல்ல‌ விளக்கில் காட்டி லேசாக‌ வாட்டி மிக‌ மிக‌ லேசான‌ சூடோடு தொப்புளில் மேல் போட்டு விடவும். ஓமத்தை சட்டியில் கருக‌ வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை தேனில் குழைத்து நாக்கில் தடவி விடவும். வசம்பு இருந்தால் அதை நெருப்பில் கருகும் படிச் சுட்டு அதை உரைகல்லில் தண்ணீர் விட்டு இழைத்து தொப்புளைச் சுற்றித் தடவி விடவும் உடம்பில் எங்கேயாவது கட்டி உள்ளதா? கட்டிக்கு அரிசி மாவும் மஞ்சள் தூள் ஒருசிட்டிகை ஓமம் இவற்றோடு தண்ணீர் தேவையான அளவு கலந்து கொதிக்க‌ வைத்து பசையாக்கி கட்டியின் தடவி விடவும். கிட்டத்தட்ட‌ ஆறு மணி நேரத்தில் கட்டி உடைந்து விடும்.
இவற்றில் எது உங்க‌ பாப்பா பிரச்சனை என்று பார்க்கவும். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா?
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி நான் நீங்கள் சொன்னபடி செய்து பார்கிறேன் அவள் இப்படி அழுவது இதுவே முதல் முறை அதுதான் என்ன செய்வது என்று தெரியாமல் கவலபை்பட்டேன் இப்போ நீங்கள் தீர்வு சொன்னது உபயோகமாக உள்ளது மீண்டும் நன்றி.

என் குழந்தை பிறந்து 10 நாட்கள் ஆகிறது. அவள் இரவு முழுவதும் அழுது கொண்டு இருக்கிறாள் காரணம் தெரியவில்லை விளக்கெண்ணை ,பெருங்காயப்ப்பொடி பேஸ்ட் எல்லாவற்றையும் வயிற்றில் தடவி பார்த்து விட்டேன். சூடு தண்ணீரில் பெருங்காயப்ப்பொடி கலந்து கொடுத்து பார்த்தேன் எதற்கும் அவள் அழுகையை நிறுத்த முடியவில்லை இரவு 10 மணிக்கு அழ ஆரம்பித்தவள் காலை 4.10 வரை ஆகியும் அழுது கொண்டே இருக்கிறாள் தாய்ப்பாலும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கிறேன் தாய்ப்பால் குடிக்கும் போது அமைதியாக இருப்பவள் குடித்து முடித்ததும் அழ தொடங்கி விடுகிறாள் என்ன செய்வது என்று தெரியவில்லை தயவு செய்து எப்படி சமாளிக்க என்று தங்களுக்கு தெரிந்ததை கூறவும்

ஆரம்ப கால அழுகையையைச் சமாளிக்க இன்னது செய்தால் சரியாக இருக்கும் என்பதைச் சொல்வது சிரமம்.
சில குழந்தைகள் அணைவு தேடி அழும். அணைத்து உறங்க வைக்க முடியவில்லையா? அழுகை ஆரம்பிக்கும் முன் உறங்க வைக்கப் பாருங்கள். அழ ஆரம்பித்த பின் அந்தக் களைப்பினால் உறங்கப் போக முடியாமல் தொடர்ந்து அழுவார்கள். சாந்தப் படுத்துங்கள்.

வாய்வு என்று தோன்றினால், குழந்தையைப் படுக்கப் போட்டு, இரண்டு கால்களையும் பிடித்து குழந்தை சைக்கிள் ஓட்டுவது போல் வட்டமாக அசைக்க வாய்வு வெளியேறும். அல்லாவிட்டால் தூக்கித் தோளில் போட்டு மெதுவே முதுகில் தட்ட வாய்வு வெளியேறும்; மெதுவே தூங்கிவிடுவார். குழந்தையின் வயிறு உங்கள் தோளில் இருக்க வேண்டும். நீங்கள் நிமிர்ந்து நின்று கையை எடுத்தால் குழந்தை முன்புறம் நழுவாமலிருக்கும் அளவு தூக்கிப் போடுங்கள். பெரும்பாலும் சரியாகும்.

மெல்லிய அலையோசை போன்ற இதமான இசை ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து ஒலிக்க விட்டுப் பாருங்கள். உறங்குவார்.

குழந்தையின் வளர்ச்சி திடீரென்று அதிகரிக்கும் போது, வளர்ச்சிக்கு ஈடாக உள்ளெடுக்கும் பாலின் அளவு (உங்களிடம் போதுமான அளவு பால் இருந்தாலும்) போதாது போகும் சமயம் இப்படி அழுவார்கள் என்கிறார்கள். ஓரிரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்; சரியாகிவிடுவார். பால், தூக்கம், அணைவு, நாப்பி எல்லாம் சரியாக இருந்தும் அழுகிறார் என்றால் தூக்காமல் படுக்கையில் விடுங்கள். வேறு பராக்குகள் இருந்தால் மெதுவே விளையாட ஆரம்பிப்பார். நீங்கள் டென்ஷன் ஆகாமலிருந்தால் போதும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா கிறிஸ். தங்களின் கருத்துக்களை கூறியதற்கு. நீங்கள் கூறியபடி செய்து பார்க்கிறேன்

மேலும் சில பதிவுகள்