bangalore shifting...plz help

எனக்கு help வேண்டும்.நான் இப்போ chennai ல‌ இருக்கேன்.என் கணவர்க்கு பெங்களூர் Electronic city jop வந்துருக்கு.பெங்களூர் மாறனும்.சென்னை இருந்து பெங்களூர் மாற எவ்ளோ செலவு ஆகும்.எப்படி pack&shift பண்ரது.pls தெரிந்தவங்க‌ சொல்லுங்க‌.

அன்பு செல்வலஷ்மி,

PACKERS AND MOVERS - பேக்கர்ஸ் அன் மூவர்ஸ் ‍ ஏராளமான‌ கம்பெனிகள் இருக்காங்க‌. வெப்ஸைட்ஸ் போய்ப் பார்த்தா, பாஸிடிவ் நெகடிவ் கமென்ட்ஸ் ‍ரெண்டுமே இருக்கு.

அகர்வால், சென்னை பேக்கர்ஸ் இப்படி நிறைய இருக்காங்க‌. ஜஸ்ட் டயல் வெப்சைட்ல‌ PACKERS AND MOVERS என்று தேடீனீங்கன்னா, ஒரு லிஸ்ட் கிடைக்கும்.

ஃபோன்ல‌ பேசி, கொடேஷன் கேளுங்க‌.

க்ளோஸ்ட் லாரியாக‌ வேணும்னு கேளுங்க‌. பெரும்பாலும் ஓபன் வண்டில‌, மேலே தார்ப்பாலின் போட்டுக் கட்டி, கவர் பண்றாங்க‌. உங்ககிட்ட‌ இருக்கும் பொருட்கள் பொறுத்து, நீங்க‌ டிஸைட் செய்யலாம்.

மினிமம் 18‍‍‍000 ரூபாய்க்கு ஒத்துக்குவாங்க‌.

பிரச்னை என்னன்னா, லோட் பண்ண‌ வர்ற‌ 4 ‍‍- 5 பேர், மதியம் சாப்பிடறதுக்கு, காலை, மாலை டீ காசு கேப்பாங்க. இதுவே உங்களுக்கு 600 ரூபாய் ஆகிடும்.

அப்புறம் லாரில எல்லாம் ஏத்திட்டு, ‘கொஞ்சம் பாத்துக் கொடுங்க எங்களுக்கு’ அப்படிம்பாங்க. அதுக்கும் நாம ஏதாவது கொடுக்கத்தான் தோணும். ஸோ, இதுவே 1000 ரூபாய் ஆகிறதுக்கு வாய்ப்பு இருக்கு.

ஆச்சா, அப்புறம் - சென்னைல லோட் ஏத்தின டீம் பெங்களூருக்கு வர மாட்டாங்க. பெங்களூர்ல அன்லோட் பண்றவங்க கண்டிப்பா ஏதாவது ஒரு பிரச்னையைக் கொண்டு வருவாங்க.

அதாவது - நீங்க பாத்திருக்கிற வீடு ஃப்ளாட் ஆக இருக்கும். லிஃப்ட்ல பொருட்கள் ஏத்தறதுக்கு அங்க இருக்கற அசோசியேஷன்ல அலவ் பண்ண மாட்டேம்பாங்க. படி வழியாகக் கொண்டு வரணும்னா, எக்ஸ்ட்ராவா ஒரு ஆளுக்கு 500-1000 குடுங்கம்பாங்க. இதே ப்ரச்னை, சென்னையிலும் வர வாய்ப்பு இருக்கு. நீங்க ஃப்ளாட்ல இருந்தா, லிஃப்ட்ல பொருட்களை இறக்குவதற்கு அசோசியேஷன்ல ஆட்சேபணை பண்ணாம இருக்கணும்.

இதுல ஒரு 3000-4000 ஆகிடும். இது தவிர, லோடிங் பேசறப்ப, ஜெனரலாக, சென்னை-பெங்களூர்னு மட்டும்தான் பேசுவாங்க. ஆனா, பெங்களூருக்கு லாரி வந்ததும், லாரி ட்ரைவர் அட்ரஸ் சரியாத் தெரியலைம்பார். அது கொஞ்சம் சுத்தி வந்தோம், அதுக்கு ஏதாவது எக்ஸ்ட்ரா வேணும்பார்.

இப்படி எக்ஸ்ட்ரா செலவு(!!!!!) எல்லாம் சேர்த்து, 5000-6000 ரூபாய் ஆகிடும். மொத்தத்துல 22000 ரூபாய்க்குள்ள செலவு முடிஞ்சா நீங்க ரொம்ப லக்கி!

ரொம்ப பயமுறுத்தறேன்னு தோணுதா? அனுபவம் பேசுது, அவ்வளவுதான்.

பேக்கர்ஸ் பத்தின ப்ளஸ் பாயிண்ட்ஸ் சொல்லணும்னா - எதுவும் திருடு போகாது. க்ராக்கரீஸ்/கண்ணாடிப் பொருட்கள் போன்றவற்றைக் கூட, அருமையாக பேக் செய்துடுவாங்க. நாம கவலைப் பட வேண்டியது இல்லை.

கட்டில்கள் கூட, அவங்களே நட் போல்ட் எல்லாம் கழட்டி, நீட்டாக பேக் பண்ணுவாங்க. டி.வி., ஃபேன் எல்லாம் கழட்டி, நல்லா பேக் செய்வாங்க.

ஏ.ஸி. யூனிட் மட்டும் அவங்க கழட்ட மாட்டாங்க. எலக்ட்ரீஷியன் வரச் சொல்லி, கழட்டி வச்சுட்டா, பேக்கிங் பண்ணுவாங்க.

பெங்களூர்ல ஏ.ஸி. வேணுமானு யோசிச்சுக்கோங்க. எவ்வளவு புதுசான ஏ.சி.மெஷினாக இருந்தாலும், சென்னையில் அதை 2500-3000 ரூபாய்க்குதான் எடுத்துக்கறாங்க.

டூ வீலர் - பழசா இருந்தா - சென்னையிலேயே விலைக்குக் குடுத்துடலாம். கார் - கொண்டு போகத்தான் விருப்பமா இருக்கும். ஆனா, அடுத்த ஸ்டேட்ல திரும்ப வரி கட்டுவது, இதெல்லாம் மிகப் பெரிய ப்ராஸஸ். பாத்துக்குங்க.

இப்ப பாக்கிங் அன் ஷிஃப்டிங் பத்தி கொஞ்சம் டிப்ஸ் சொல்றேன்.

நகை, வெள்ளி, தங்கம், முக்கியமான செர்டிஃபிகேட்ஸ், டாகுமெண்ட்ஸ், விலை உயர்ந்த பட்டுச்சேலைகள், இதெல்லாம், ஒரு பெட்டில அடுக்கி, நீங்க கைல கொண்டு போயிடுங்க. லாரில போட வேண்டாம்.

டெஸ்க் டாப், லேப் டாப், இதுவும் கைலயே கொண்டு போயிடுங்க.

வீடு மாத்தணும்னு டிஸைட் பண்ணியாச்சுன்னா, தினமும் 1 அல்லது 2 மணி நேரம் ஒதுக்கி, ஒவ்வொரு அலமாரியில் இருக்கும் பொருட்களையும் வீட்டில் இருக்கும் ட்ராவல் பேக்ஸ்ல கொஞ்சம் கொஞ்சமாக அடுக்கி வச்சுடுங்க.

கட்டைப் பைகளில் கூட அடுக்கி வைக்கலாம். பேக்கர்ஸ் வர்றப்ப, இந்த கட்டைப் பைகளை, அவங்க ஒரே அட்டைப் பெட்டியில் போட்டு, பேக் பண்ண, சவுகரியமாக இருக்கும்.

கிளம்பும் வரைக்கும் உண்டான ட்ரெஸ் தனியாக வச்சுட்டு, மீதமுள்ள ட்ரெஸ் எல்லாம் சூட்கேஸ்களில் போட்டு, அடுக்கி, முடிந்தால், சின்ன பூட்டு போட்டு, பூட்டி வச்சுடுங்க.

ஸ்டேஷனரி கடைகளில் ஸ்டிக்கர் லேபிள்கள் கிடைக்கும்.

ஒவ்வொரு சூட்கேஸ்/கட்டைப் பை/ட்ராவல் பேக் மேல - எதுல என்ன இருக்குன்னு சின்னதா ஒரு குறிப்பு எழுதி, ஒட்டி வச்சுடுங்க. உதாரணமாக, ஸ்டடி ரூம் புக்ஸ்/ட்ரெஸ்ஸிங் டேபிள் பொருட்கள்/சின்ன ரூம் அலமாரி பொருட்கள் இந்த மாதிரி குறிச்சு வச்சுட்டீங்கன்னா, அன் பேக் செய்து, அடுக்கும்போது, தேடாமல் எடுக்க வசதியாக இருக்கும்.

வேண்டாத பொருட்களையெல்லாம் சென்னையிலேயே கழிச்சுக் கட்டிடுங்க.

காஸ் கனெக்‌ஷன் - உங்க ஏஜென்ஸில சரண்டர் செய்து, சரண்டர் செர்டிஃபிகேட் வாங்கிக்குங்க. காலி சிலிண்டர்களை வாங்கிக்குவாங்க. டெபாஸிட் அமவுண்ட்டை, திருப்பித் தந்துடுவாங்க. ஏற்கனவே எந்த பேங்க்ல சப்ஸிடிக்கு லெட்டர் கொடுத்திருக்கீங்களோ, அதுவே தொடரலாம். பெங்களூருக்குப் போய், அங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏஜென்ஸியில் இந்த லெட்டரைக் கொடுத்து, புது சிலிண்டர்கள் வாங்கிக்கலாம். சப்ஸிடி தொகை, அதே பேங்க்ல, எப்பவும் போல க்ரெடிட் ஆகும்.

பாங்க் அக்கவுண்ட்ஸ் - இப்ப எல்லாமே கோர் பேங்கிங் என்பதால் பிரச்னை இருக்காது. நெட் பேங்கிங், டெபிட் கார்ட் எல்லா இடத்திலிருந்தும் உபயோகிக்க முடியும். இருந்தாலும், சென்னை பேங்க் அக்கவுண்ட் க்ளோஸ் பண்றது பத்தியும் யோசிச்சுக்குங்க.

ரேஷன் கார்ட் சரண்டர் பண்றது எல்லாம் அலைச்சலான வேலை. நாலைந்து தடவை போகணும். நேரம் இருப்பதைப் பொறுத்து, செய்யுங்க.

மளிகை சாமான்கள் - எப்பவும் போல கடையில் வாங்கி, ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து, லாரியில் போட்டு விட்டுடலாம். ஏன்னா, புது இடம், புது வீடு, வேற பாஷை, அதனால, போனவுடனே சிரமப்படாமல் இங்க இருந்தே வந்துடுச்சுன்னா, ஒரு மாசத்துக்குள்ள, அங்க பெங்களூர்ல கடை, கண்ணி பழகிக்க டைம் கிடைக்கும்.

புது மளிகை சாமான்கள் பேக்ட் ஆக இருக்கும். ஆனா, வீட்டில் ஏற்கனவே உபயோகிச்சிட்டு இருக்கும் பொருட்களை பேக்கர்ஸ் ஆட்கள் நல்லா பேக் பண்ணித் தருவாங்க. அவங்க பேக் செய்யறப்ப, பக்கத்துலயே நின்னு, எந்த அட்டைப் பெட்டியில் போடுறாங்கன்னு பாத்து, அந்த அந்த அட்டைப் பெட்டிகள் மேல - கிச்சன் பாத்திரங்கள்/மளிகைப் பொருட்கள்/ இந்த மாதிரி எழுதிடுங்க. மார்க்கர் பேனாக்கள் வச்சுக்குங்க.

பேக்கர்ஸ் என்னதான் நல்லா வேலை செய்யறாங்கன்னாலும் நம்முடைய சூபர்விஷன் இருக்கறது நல்லது.

லாரிகிட்ட வீட்டு ஆள் ஒருத்தர் நின்னுக்கலாம். வீட்டுக்குள்ள ஒருத்தர் உக்காந்துக்கிட்டு, கைல ஒரு நோட்டும் பேனாவும் வச்சுக்கணும்.

ஒவ்வொரு பொருளாக அவங்க கொண்டு போறப்ப - சீரியல் நம்பர் போட்டு நோட்ல எழுதிக்கலாம். உதாரணமாக - சோஃபா செட் -1, டைனிங் டேபிள் - 2, சேர் செட் - 3, சிவப்பு சூட்கேஸ் - 4, இந்த மாதிரி(உங்களுக்கு வசதியான முறையில்) எழுதிக்குங்க.

பேக்கர்ஸ் சாதாரணமாக காலையில் 9 அல்லது 10 மணிக்கு வந்தாங்கன்னா, மதியம் 3 மணிக்குள்ள எல்லா வேலையும் அழகா செய்துடுவாங்க. அவங்களே பேக்கிங் மெடிரீயல்ஸ்(அட்டைப் பெட்டி/பபிள் ஷீட்) எல்லாம் கொண்டு வந்துடுவாங்க.

முதல் நாளே சமைத்த பொருட்கள் எல்லாம் சரி செய்துக்கோங்க. பேகிங் அன்னிக்கு சிம்பிளான சாப்பாடு அல்லது ஹோட்டலிலிருந்து வரவழைச்சுக்குங்க. அவங்க எல்லா வேலையும் பாத்தாலும் நாம மேற்பார்வை பார்க்க வேண்டியிருக்கும்.

ஞாபகம் வந்த வரைக்கும் எழுதியிருக்கேன். வேற ஏதாவது நினைவு வந்துச்சுன்னா சொல்றேன். மத்த தோழிகளும் சொல்வாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க‌ நன்றி....எனக்கு உடனே பதில் தந்தமைக்கும்,உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும்.நீங்கள் கூறியது எனக்கு மிகவும் உபயோகமாக‌ உள்ளது.........

சுப்பர்ப் பதில் சீதா. இங்க பிரச்சினை குறைவுதான். இருந்தாலும் வீடு மாறுறது நச்சுப் பிடிச்ச வேலை என்பதை மறுப்பதற்கு இல்லை. உங்க போஸ்ட் படிக்க... திரும்ப வீடு மாறுற ஃபீலிங் எனக்கு. :-)

எங்களுக்கு என்று வீடு வாங்கும் முன் ஐந்து வீடுகளிலிருந்திருக்கிறோம். ஒவ்வொரு ரூமுக்கும் ஒரு கலர் டேப் வாங்கி வைப்போம். அவரவர் பொருளை அவரவர் பாக் பண்ணி டேப் போட்டு லேபிள் போடுவோம். புது வீட்டுல எந்த ரூமுக்கு என்ன கலர் போகணுமோ அங்க போய்ரும். திறந்து அடுக்குவது அவரவர் வேலை. கடைசி வரை பயன்படுத்துற பொருட்களை திறந்த பெட்டியில் போட்டுருவோம். கடைசி நாள் பெட்டியை ஒட்டிக் கொள்ளுவோம். முடிந்த வரை வீசி விடும் பொருட்களையெல்லாம் வீசி, நல்லவற்றை ரெட் க்ராஸ் ஷாப், கான்சர் பின் என்று அனுப்பிருவோம். வாட்ரோப்பிலிருக்கும் துணிகளெல்லாம் அப்படியே ஹாங்கரோடு மடித்து கார்ல போட்டுருவோம்.

முதல் வீட்டுல இருந்து கிளம்பும் போது பாக் பண்ணின சில பொருட்கள் இன்னமும் அதே பெட்டிகளில்தான் இருக்கின்றன. :-) பெட்டியும் மூடியுமாக ஒரே அளவான பெட்டிகளில் நத்தார் அலங்காரங்கள் எல்லாம் போட்டு வைத்திருந்தோம். ஒவ்வொரு வருடமும் பயன்படுத்திவிட்டு திரும்பவும் அதே பெட்டியில்தான் போட்டு வைக்கிறோம்.

'பல்ப் பெட்டி' என்று ஒன்று இருக்கு. ;) ஒரு வீட்டுக்குப் போனால் முதல் வேலையாக அங்கு உள்ள மின்விளக்குகளெல்லாம் எனர்ஜி சேவராக மாற்றிவிடுவோம். அப்போ கழற்றி எடுக்கும் மின்விளக்குகளெல்லாம் இந்தப் பெட்டிக்குள் அடக்கமாகிரும். பிறகு அடுத்த வீட்டுக்குக் கிளம்பும் போது இங்கு முன்பிருந்த மாதிரி எல்லாவற்றையும் மாற்றி வைத்துவிட்டுக் கிளம்புவோம். போகுமிடத்தில் மீண்டும் எனர்ஜி சேவர் மற்றும் வேலை நடக்கும்.

வைக்கிற செடியெல்லாம் ப்ளாஸ்டிக் வாளிகளில் கீழே துளை போட்டு அவற்றில் வைப்பேன். வீடு மாறும் போது வாளிக் கைபிடில பிடிச்சு தூக்கிப் போகலாம். :-) பாரமாகவும் இராது.

அப்போ எங்களிடம் 'குடும்ப மோபைல்' என்று வாக்கி டாக்கி போல பாரமான பொருள் ஒன்றும் குடும்ப ஈமெய்ல் என்று ஒன்றும் இருந்தன. தபாலும் தொலைபேசியும் மிக்க முக்கியமான விடயங்களாக இருந்தன. 'வீடு மாறும் நோட்டு' என்று ஒரு குட்டி நோட்டு... இன்னமும் எங்கோ இருக்கு. அதுல யார் யாருக்கேல்லாம் எங்க அட்ரஸ், ஃபோன் நம்பர் கொடுத்திருக்கிறோம் என்பதைக் குறிச்சு வைப்போம். போஸ்ட் ஷாப்ல, 'வீடு மாறப் போறோம்,' என்று சொல்லி அவங்க கொடுக்கிற ஃபாரத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கணும். 3 மாசத்துக்கு பழைய வீட்டுக்கு எங்கள் பேர்ல போகும் மெய்ல் எல்லாம் நாங்க போகும் புது வீட்டுக்கு அனுப்பி வைப்பாங்க. எட்டோ பத்தோ, நினைப்பு இல்லை, கைல சில தபாலட்டைகள் கிடைக்கும். அதில் முக்கியமானவர்களுக்கு இலவசமாக நாங்கள் வீடு மாறும் தகவலைச் சொல்லி புதிய விலாசம் & தொலைபேசி இலக்கங்களை அனுப்பி வைக்கலாம். 3 மாசத்துக்கு பழைய நம்பருக்கு ஃபோன் பண்ணவங்களுக்கு வீடு மாறின விபரம் சொல்லி டெலிகாம் எங்க புது ஃபோன் நம்பர் சொல்லிரும். மீதிப் பேருக்கு, நாமே ஃபோன் போட்டு புது நம்பரைச் சொல்லணும்.

கடைசி நாள் திருவிழாவுக்கு ரெண்டு வீட்டுலயும் ஒவ்வொரு செட் காஃபி, டீ போடும் பொருட்கள், தட்டுகள், க்ளீனிங் பொருட்கள்... ஹூப்!! இங்கும் சுத்தம் செய்து அங்கும் சுத்தம் செய்து... மறுநாள் வேலைக்கும் போய்... அது ஒரு கனாக்காலம். :-) ஒரு விதமாக இங்கே வந்து காலூன்றியாகிவிட்டது. நிம்மதி! :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்